அடித்தள வரலாறு

அடித்தள வரலாறு என்பது சாமானிய மக்களைக் குறித்துப் படிக்கும் வரலாறு ஆகும். பெர்னாட் கோன் என்ற மானிடவியலாளர் புரோடலாஜிகல் ஹிஸ்டரி (Protological History) என்று அழைக்கிறார். இதுவே அடித்தளத்தில் இருந்து வரலாறு என்ற பொருள்பட 'அடித்தள வரலாறு' அல்லது 'கீழ்நிலை வரலாறு' எனப்படுகிறது. குரல் எழுப்ப முடியாத, வலுவிழந்த, அதிகாரமற்ற, சுரண்டப்படுகின்ற மக்கள் மேல்தட்டு வரலாற்றாய்வாளர்களால் மௌனமானவர்களாகவும் வரலாற்று நாயகர்களாகும் தகுதியற்றோராகவும் கருதப்பட்டதால், இவர்கள் வரலாற்றுப் பதிவில் பின் தள்ளப்பட்டு இவர்களைப் பற்றிய பதிவுகளுக்குப் பெரும்பாலும் நாட்டார் வழக்காறுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்; ஜூலை 2014; நாட்டார் வழக்காறும் வரலாற்று வரைவியலும் கட்டுரை;பக்கம் 2-8;
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடித்தள_வரலாறு&oldid=2198214" இலிருந்து மீள்விக்கப்பட்டது