அன்ரன் பாலசிங்கம்

தேசத்தின் குரல்[1]
அன்ரன் பாலசிங்கம்
பிறப்புஏ. பி. இசுடானிசுலாசு
(1938-03-04)4 மார்ச்சு 1938
மட்டக்களப்பு, இலங்கை
இறப்பு14 திசம்பர் 2006(2006-12-14) (அகவை 68)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்[2]
படித்த கல்வி நிறுவனங்கள்சவுத் பாங்க் பாலிடெக்னிக்
பணிஊடகவியலாளர், விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர்
பெற்றோர்குழந்தைவேலு மார்க்கண்டு
வாழ்க்கைத்
துணை
அடேல் பாலசிங்கம்
பிள்ளைகள்இல்லை

அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham; 4 மார்ச் 1938 – 14 திசம்பர் 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் செனிவாவில் நடைபெற்ற, செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் மதிப்புறுப் பட்டங்களை அளித்துள்ளன.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ஆரம்பகாலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றினார்.[3][4] இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.

மணவாழ்க்கை

[தொகு]

முதல் மனைவி இறந்த பின் ஆத்திரேலியரான அடேல் ஆனை இலண்டனில் காதல் திருமணம் செய்துகொண்டார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு

[தொகு]

1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.

ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.

அன்ரன் பாலசிங்கத்தின் மிதவாத போக்கு

[தொகு]

அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்க்சியவாதியாக இருந்தவர். பின்னர் அதிலிருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாதத் தன்மை[5], வெளிஉலக பார்வைத் தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கிய தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த ஆளுமையாக இவரின் முக்கியத்துவத்தை பற்றிய பிபிசி ஆய்வாளர்கள் தமது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர்.[6]. இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.

இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி, விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வந்ததோடு 2002இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பாலசிங்கம் உழைப்பு முக்கியமானதாகும். புலிகள் இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல் தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த முக்கிய தலைவராவார்[7]

இறப்பு

[தொகு]

அன்ரன் பாலசிங்கம் 2006 திசம்பர் 14 அன்று தனது 68 ஆவது வயதில் இலண்டனில் காலமானார். 2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.[8][9].

அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் மதிப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்தார்.[10]

அன்ரன் பாலசிங்கம் த.வி.பு மிதவாதத் தலைவராக பொதுவாக கருதப்பட்டவர்[11]. இந்தக் கூற்றை அவரின் அரசியல் எதிரியான கதிர்காமரும் தெரிவித்திருந்தார்.[12] இவரே த.வி.பு வெளிப்படையாக விமர்சிக்க பலம் பொருந்திய த.வி.பு தலைவராகவும் இருந்தார். தாய்லாந்து பேச்சு வார்த்தைகளின் போது புலிகள் 'ஆடம்பர பொருட்களை' கொள்ளனவு செய்ததை நகைச்சுவையாக மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

இவரது நூல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LTTE leader salutes 'Voice of the Nation'". தமிழ்நெட். 14 December 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20611. 
  2. "Tamil Tigers' top negotiator dies". BBC News. 14 December 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6180301.stm. 
  3. விழிப்பு தளத்தில் செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
  4. [1]
  5. "The Hindu : Suggestion to Balasingham". 2007-03-03 இம் மூலத்தில் இருந்து 2007-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070303135851/http://www.hinduonnet.com/2003/08/24/stories/2003082401180900.htm. 
  6. Brain behind the Tigers' brawn - பிபிசியின் ஆய்வு
  7. சண்டே டைம்ஸ் இலங்கை 2006 டிசம்பர் 17 இதழ் 2006 டிசம்பர் 22 அணுகப்பட்டது.
  8. "Anton Balasingham afflicted by rare cancer". தமிழ்நெட். பார்க்கப்பட்ட நாள் 2006-11-25. {{cite web}}: Cite has empty unknown parameters: |accessyear= and |coauthors= (help)(ஆங்கில மொழியில்)
  9. "Tamil Tiger negotiator has cancer". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2006-11-25. {{cite web}}: Cite has empty unknown parameters: |accessyear= and |coauthors= (help)(ஆங்கில மொழியில்)
  10. "பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு". Archived from the original on 2006-12-16. பார்க்கப்பட்ட நாள் 2006-12-15.
  11. பிபிசி செய்தி
  12. "The Hindu : Suggestion to Balasingham". 2007-03-03 இம் மூலத்தில் இருந்து 2007-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070303135851/http://www.hinduonnet.com/2003/08/24/stories/2003082401180900.htm. 

வெளியிணைப்புகள்

[தொகு]
தளத்தில்
அன்ரன் பாலசிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ரன்_பாலசிங்கம்&oldid=3911258" இலிருந்து மீள்விக்கப்பட்டது