ஆதி சக்தி பீடங்கள்

ஆதி சக்தி பீடங்கள் என்றும் "சார் சக்தி தாம்கள்" என்றும் அழைக்கப்படும் நான்கு சக்தி கோவில்கள் பற்றி காளிகா புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் சாக்த மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாக்த பிரிவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பலரும் வழிபடும் கோவில்களாக இந்த நான்கு தலங்களும் விளங்குகின்றன.

காளிகா புராணத்திலுள்ள ஆதி சக்தி பீடங்கள் பற்றிய ஸ்தோத்திரம்

[தொகு]

பிமலா பாத கண்டச்ச, ஸ்தன கண்டச்ச தாரிணி,
காமாக்‌ஷ்யா யோனி கண்டச்ச, முக்க கண்டச்ச காளிகா
அங்க ப்ரத்யங்க ஸங்கேன விஷ்ணு சக்ர க்‌ஷைதா நச்ச.

இதில் கூறப்படும் நான்கு கோவில்கள் இருப்பிடம் - உடல் பகுதி - தேவியின் பெயர் என்ற வரிசையில் தரப்பட்டுள்ளன.

  1. பூரி ஜகந்நாத் கோயில் வளாகத்தின் உள்ளே, ஒடிசா (விமலா தேவி சக்தி பீடக் கோவில்) – பாதம் - விமலா தேவி
  2. பெர்ஹாம்பூர், ஒடிசா (தாராதாரிணி சக்தி பீடக் கோவில்) – மார்பகங்கள் - தாரா தாரிணி
  3. கவுகாத்தி, அசாம் (காமாக்யா கோவில்) - யோனி - காமாக்யா தேவி
  4. கொல்கத்தா, மேற்கு வங்கம் (காளிகாட் காளி கோயில்) – முகம் - தக்‌ஷிண காளிகா

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  1. காமாக்யா கோவில்
  2. காளிகாட் காளி கோயில்
  3. விமலா தேவி சக்தி பீடக் கோவில்
  4. சக்தி பீடங்கள்
  5. தாராதாரிணி சக்தி பீடக் கோவில்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_சக்தி_பீடங்கள்&oldid=3615560" இலிருந்து மீள்விக்கப்பட்டது