ஆல்பிரட் வெர்னெர்

ஆல்பிரட் வெர்னெர்
பிறப்பு12 திசம்பர் 1866
மல்ஹவுஸ், ஆவ்ட்-ரின், அல்சாசே, பிரான்சு
இறப்பு15 நவம்பர் 1919(1919-11-15) (அகவை 52)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து
தேசியம்சுவிட்சர்லாந்து
துறைகனிம வேதியியல்
பணியிடங்கள்சூரிக் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சூரிக் பல்கலைக்கழகம்
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
அறியப்படுவதுஇடைநிலை உலோகங்களின் அணைவுச் சேர்மங்களின் அமைப்பு
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1913)

ஆல்பிரட் வெர்னெர் (Alfred Werner) (12 திசம்பர் 1866 – 15 நவம்பர் 1919) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டின் வேதியியலாளர் ஆவார். இவர் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்கின் மாணவரும், சூரிக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆவார். இவர் இடைநிலை உலோக அணைவுச் சேர்மங்களில் எண்முகி மூலக்கூறு வடிவினை முன்மொழிந்தமைக்காக 1913 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார். வெர்னர் நவீன அணைவு வேதியியலுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கினார். இவரே நோபல் பரிசினை வென்ற முதல் கனிம வேதியியலாளர் ஆவார். அவர் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னதாகப்பெற்ற ஒரே நபர் ஆவார். [1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

வெர்னர் பிரான்சு நாட்டில் அல்சாசில் உள்ள மல்ஹவுசில் 1866 ஆம் ஆண்டில் பிறந்தார். இந்தப் பகுதி 1871 ஆம் ஆண்டில் செருமனியுடன் இணைக்கப்பட்டது, இவர் கத்தோலிக்க திருச்சபையினைச் சார்ந்தவராக இருந்தார். [2] இவர் வேதியியலை, சூரிக், சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றார். இதே நிறுவனத்தில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். பாரீசு நகரில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினை முடித்த பிறகு 1892 ஆம் ஆண்டில் சூரிக்கிற்குத் திரும்பினார். 1893 ஆம் ஆண்டில் சூரிக் பல்கலைக்ழகத்திற்குச் சென்ற இவர் 1895 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் பேராசிரியரானார். அதே ஆண்டில் அவர் சுவிட்சர்லாந்துக் குடியுரிமையைப் பெற்றார்.

ஆய்வு

[தொகு]

அணைவு வேதியியல்

[தொகு]

1893 ஆம் ஆண்டில் அணைவு அயனிகளைக் கொண்ட அணைவுச் சேர்மத்திற்கான சரியான அமைப்பினை முதன் முதலில் முன்மொழிந்தவர் ஆவார். அந்தச் சேர்மத்தில் மைய உலோக அணுவானது, நடுநிலையான அல்லது எதிர்மின் ஈனிகளால் சூழப்பட்டதாக இருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1913/werner-bio.html Nobel Prize Retrieved 1 december 2012
  2. "Alfred Werner - Swiss chemist". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • ஆல்பிரட் வெர்னெர் on Nobelprize.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும் including the Nobel Lecture, 11 December 1913 On the Constitution and Configuration of Higher-Order Compounds
  • The Nobel Prize in Chemistry 1913 - short article about his work on the linkage of atoms in molecules by which he has thrown new light on earlier investigations and opened up new fields of research, especially in inorganic chemistry.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_வெர்னெர்&oldid=4041323" இலிருந்து மீள்விக்கப்பட்டது