இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு

இசுரேல்–பலத்தீன பிணக்கு
the அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி

மேற்குக் கரைக்கும் காசா கரைக்கும் அடுத்துள்ள இசுரேலின் நடுப்பகுதி, 2007
நாள் 20வது நூற்றாண்டின் நடுவில் [1] – இன்றளவில்
முதன்மை கட்டம்: 1964–1993
இடம்  இசுரேல்
 பலத்தீன்
முடிவு இசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுக்கள்
தாழ்-நிலை சண்டைகள், பெரும்பாலும் இசுரேலுக்கும் காசாவிற்கும்
நிலப்பகுதி
மாற்றங்கள்
காசாவில் பலத்தீன அரசு நிறுவலும் கலைத்தலும் (1948–1959)
மேற்குக் கரையை ஜோர்தான் கையகப்படுத்தல் (1948–1967)
மேற்கு கரையையும் காசாவையும் இசுரேல் கையகப்படுத்துதல் (1967)
"A" மற்றும் "B" நிலப்பகுதிகளை இசுரேலிய நிர்வாகத்திடமிருந்து பலத்தீன தேசிய ஆணையத்திற்கு மாற்றுதல் (1994–95)
காசாவிலிருந்து இசுரேல் விலகல் (2005)
பிரிவினர்
 இசுரேல்  அனைத்து-பலத்தீன் (1948–1959)

பலஸ்தீன விடுதலை இயக்கம் (1964–93)
 பலத்தீன தேசிய ஆணையம் (2000–04)
காசா கரை (2006-இன்றளவில்)

இழப்புகள்
21,500 உயிரிழப்புகள் (1965–2013)[2]

இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு (Israeli–Palestinian conflict) இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்றுவரை இசுரேலுக்கும் பலத்தீனத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் தொடர்போராட்டத்தை குறிக்கிறது.[1] இந்தப் பிணக்குகள் பிரித்தானியர் ஆண்டுவந்த காலத்திலிருந்தே சீயோனியர்களுக்கும் (yishuv) அரபு மக்களுக்கும் இடையே இருந்து வந்துள்ளது. இது பரந்த அரபு-இசுரேல் முரண்பாட்டின் மைய அங்கமாகும். இந்தப் பிணக்கே உலகின் "மிகவும் சிக்கலான பிணக்காக" கருதப்படுகிறது.[3][4][5]இந்தப் பிணக்கை தீர்க்கும் வழியாக தன்னாட்சியுடைய பலத்தீனத்தையும் அதையடுத்த இசுரேலையும் கொண்டவாறு இரு நாடுகளை உருவாக்கும் தீர்வு பலமுறை முன்மொழியப்பட்டுள்ளன.[6] பல கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பாலான இசுரேலியர்களும் பாலத்தீனர்களும் இந்த பிணக்கைத் தீர்க்க இருநாடுகள் தீர்வே சிறந்ததாக ஒப்புக் கொள்கின்றனர்.[7][8][9] மிகுதியான பலத்தீனர்கள் மேற்குக் கரையும் காசா கரையும் உள்ளடங்கியப் பகுதி தங்கள் வருங்கால நாடாக கருதுகின்றனர்; இதற்கு பெரும்பாலான இசுரேலியர்களும் உடன்படுகின்றனர்.[10] ஒரு சில கல்வியாளர்கள் இசுரேல், காசாக் கரை, மேற்கு கரை ஒவ்வொன்றும் சம உரிமையுடனான, இரட்டைக் குடியுரிமை பெற்ற, ஒரே நாட்டின் பகுதிகளாக ஒருநாட்டுத் தீர்வை முன்வைத்துள்ளனர். [11][12] இருப்பினும், எந்தவொரு இறுதித் தீர்வைக் குறித்தும் குறிப்பிடத்தக்க அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும் எதிர்தரப்பின் நம்பகத்தன்மை குறித்தும் எந்தளவில் வாக்குறுதிகளை காப்பாற்றும் என்பது குறித்தும் மற்ற தரப்பிற்கு ஐயங்கள் உள்ளன.[13]

வரலாறு

[தொகு]

ஜெர்மனியில் ஹிட்லரால் யூதர்கள் வேட்டையாடப்பட்ட பின்னணியில் தங்களுக்கென்று ஒரு நாடு என்ற கோரிக்கை யூதர்கள் மத்தியில் வலுத்தது. 1947ல் ஐக்கிய நாடுகள் அவை தலையிட்டு, 55 சதவீத பிரதேசம் யூதர்களுக்கு எனவும், 44 சதவீதம் பாலஸ்தீனியர்களுக்கு என்றும், 1 சத வீதம் ஜெருசலேம் தனியாக சர்வதேசக் கண் காணிப்பில் இருக்கும் என்றும் பிரித்துக் கொடுத்தது.[14]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "A History of Conflict: Introduction". A History of Conflict. BBC News.
  2. Monty G. Marshall. Major Episodes of Political Violence 1946-2012. SystemicPeace.org. "Ethnic War with Arab Palestinians / PLO 1965-2013". Updated 12 June 2013 [1] பரணிடப்பட்டது 2014-01-21 at the வந்தவழி இயந்திரம்
  3. Chris Rice பரணிடப்பட்டது 2016-02-06 at the வந்தவழி இயந்திரம், quoted in Munayer Salim J, Loden Lisa, Through My Enemy's Eyes: Envisioning Reconciliation in Israel-Palestine, quote: "The Palestinian-Israeli divide may be the most intractable conflict of our time."
  4. Virginia Page Fortna பரணிடப்பட்டது 2016-01-31 at the வந்தவழி இயந்திரம், Peace Time: Cease-fire Agreements and the Durability of Peace, page 67, "Britain's contradictory promises to Arabs and Jews during World War I sowed the seeds of what would become the international community's most intractable conflict later in the century."
  5. Avner Falk, Fratricide in the Holy Land: A Psychoanalytic View of the Arab-Israeli Conflict, Chapter 1, page 8, "Most experts agree that the Arab-Israeli conflict is the most intractable conflict in our world, yet very few scholars have produced any psychological explanation—let alone a satisfactory one—of this conflict's intractability"
  6. The American Jewish Cocoon September 26, 2013 New York Review of Books
  7. "America through Arab eyes பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம்". By Rami G. Khouri. International Herald Tribune. Published April 21, 2008.
    • The latest survey, conducted in March, covered a representative sample of over 4,000 people in Egypt, Jordan, Lebanon, Morocco, Saudi Arabia and the United Arab Emirates (1.6 percent margin of error) ... A majority of Arabs continues to support the two-state solution based on the 1967 borders, though an increasing majority is pessimistic about its prospects.
  8. "Hamas won't go away". The Economist. 31 சனவரி 2008. ஓர் கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையான பலத்தீனர்கள் இருநாட்டுத் தீர்விற்கு ஒப்புக்கொண்டால் பல ஹமாஸ் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர் ... அமைதியான அண்டை நாடுகளான இருநாடுகளுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மையான பலத்தீனர்களும் இசுரேலியர்களும் காலப்போக்கில் யூத நாட்டை அடியோடு அழிக்கும் எண்ணத்தைக் கைவிடுவார்கள் என்றும் நீடிக்கும் அமைதிப் பேச்சுகளில் பங்கேற்பர் என்றும் நம்புகின்றனர்.
  9. "Just another forgotten peace summit பரணிடப்பட்டது 2010-04-13 at the வந்தவழி இயந்திரம்." Haaretz.com. By Prof. Ephraim Yaar and Prof. Tamar Hermann. Published 11/12/2007.
    • மேலும், குறிப்பிடத்தக்க பெரும்பான்மை யூத மக்களும் பலத்தீனத்தின் தனிநாடு கோரிக்கை நியாயமானதாக நினைக்கின்றனர்; இசுரேல் அவர்கள் தனிநாடு அமைப்பதற்கு உடன்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்.
  10. Dershowitz, Alan. The Case for Peace: How the Arab-Israeli Conflict Can Be Resolved. Hoboken: John Wiley & Sons, Inc., 2005
  11. Israel: The Alternative, The New York Review of Books, Volume 50, Number 16, அக்டோபர் 23, 2003
  12. Virginia Tilley, The One-State Solution, University of Michigan Press (மே 24, 2005), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0472115138
  13. Haaretz.com.
    • The source of the Jewish public's skepticism - and even pessimism - is apparently the widespread belief that a peace agreement based on the "two states for two peoples" formula would not lead the Palestinians to end their conflict with Israel.
  14. உ. வாசுகி. "இஸ்ரேலின் கொடூரம் பாலஸ்தீனத்தில் செத்துவிழும் மக்கள்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2014.