ஈய சிடீயரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் ஈயம்(2+) ஆக்டாதெக்கானோயேட்டு, ஈய(II) சிடீயரேட்டு, ஈயம் இருசிடீயரேட்டு | |
இனங்காட்டிகள் | |
1072-35-1 | |
ChemSpider | 55198 |
EC number | 214-005-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61258 |
| |
UNII | HQ5TZ3NAEI |
பண்புகள் | |
C 36H 70PbO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 774.14 |
தோற்றம் | வெண்மையான தூள் |
அடர்த்தி | 1.4 கி/செ.மீ3 |
உருகுநிலை | 115.7 °C (240.3 °F; 388.8 K) |
கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H332, H360, H373 | |
P260, P261, P281, P304, P340, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈய சிடீயரேட்டு (Lead stearate) என்பது C36H70PbO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கரிமச் சேர்மமாகும்.[1] ஈயமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. இது ஓர் உலோக சவர்க்காரம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அதாவது இவ்வுப்பு ஒரு கொழுப்பு அமிலத்தின் உலோக வழிப்பெறுதியாக கருதப்படுகிறது. ஈய சிடீயரேட்டு நச்சுத்தன்மை கொண்டதாகும்.[2] The compound is toxic.
தயாரிப்பு
[தொகு]சிடீயரிக் அமிலத்துடன் ஈய(II) ஆக்சைடைச் சேர்த்து வினையூக்கியாக அசிட்டிக் அமிலத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈய சிடீயரேட்டை தயாரிக்க முடியும்.[3]
ஈய(II) அசிட்டேட்டுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பரிமாற்ற வினை நிகழ்ந்தும் ஈய சிடீயரேட்டு உருவாகிறது:
பண்புகள்
[தொகு]இலேசான கொழுப்பு வாசனையுடன் இருக்கும். வெள்ளை தூளாக காணப்படும் இது நீரில் மூழ்கும்.[4] காற்றில் ஈரமுறிஞ்சும்.
தண்ணீரில் சிறிது கரையும். சூடான எத்தனாலில் கரையும்.
பயன்கள்
[தொகு]பலபடியாக்கல் மற்றும் ஆக்சிசனேற்ற வினைச் செயல்முறைகளை விரைவுபடுத்தவும், எண்ணெய் வண்ணப்பூச்சுகள் மற்றும் மெருகூட்டிகளில் உலர்த்தியாகவும் ஈய சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது. வினைல் பலபடிகளில் நிலைப்படுத்தியாகவும், ஓர் உயவு எண்ணெயாகவும், பெட்ரோலியப் பொருட்களில் அரிப்புத் தடுப்பானாகவும் ஈய சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lead Stearate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
- ↑ "T3DB: Lead stearate". t3db.ca. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
- ↑ "Preparation process of lead stearate based on melting method". 18 December 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
- ↑ "LEAD STEARATE | CAMEO Chemicals | NOAA". cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
- ↑ "Lead Stearate » Waldies Co. Ltd". Waldies Co. Ltd. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
- ↑ Encyclopedia of Chemical Technology: Fuel resources to heat stabilizers (in ஆங்கிலம்). Wiley. 1991. p. 1074. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-52669-8. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
- ↑ Titow, M. V. (6 December 2012). PVC Technology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-5614-8. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.