உடற் பருமன்
உடற்பருமன் | |
---|---|
சிறப்பு | நாளமில்லாச்சுரப்பிகள் |
அறிகுறிகள் | அதிக கொழுப்பு |
சிக்கல்கள் |
|
காரணங்கள் |
|
நோயறிதல் | உடல் இயக்கச் சுட்டு > 30 kg/m2 |
தடுப்பு | சமூக மாற்றஙகள், தனிமனித மாற்றங்கள் |
சிகிச்சை | டயட், உடற்பயிற்சி , மருந்துகள், அறுவை சிகிச்சை |
நிகழும் வீதம் | 700 மில்லியன் / 12% (2015) |
கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஓர் இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.[1]. ஆனாலும் இதனை ஒரு நோய் என்று அடையாளப்படுத்துதல் சரியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.[2][3]
மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது.
2016 இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த உடல் பருமனுள்ளோரின் எண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளது எனவும், உடல்நிறை குறைவினால் ஏற்படும் இறப்பை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ள நாடுகளிலேயே, உலகின் சனத்தொகையின் கூடிய பங்கு வசிக்கிறது எனவும், உடற் பருமன் ஒரு தடுக்கப்படக்கூடிய நிலைமையே என்கிறது.[4]
உடல் பருமன் சுட்டு
[தொகு]ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு (en:BMI என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் (இரட்டிப்பு எண்ணால்) பிரிப்பதால் பெறப்படுகின்றது ().)[5] பின்னர் ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப்[6] பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பது இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருப்பாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்டக் கூடும்.
உடல் பருமனுக்கான காரணங்கள்
[தொகு]- அதிகமாக உணவு உண்ணல்
- உடல் உழைப்பு இன்மை
- அமர்ந்தியங்கும் வாழ்முறை
உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை
[தொகு]தற்போதைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது குறைந்து வருகிறது. உடற்பருமனில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுமைக்கும் தற்போது தொழினுட்பம் அதிகம் பயன்படுத்தி, குறைவான உடல் உழைப்பையே செய்கின்றனர். மேலும் தற்போது 30 சதவீத மக்கள் குறைவான உடற்பயிற்சியை செய்கின்றனர். சிறுகுழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர்.[7][8][9] இதன் காரணமாகவும் உடற்பருமன் ஏற்படுகிறது. 73 பேரில் 63 பேருக்கு குழந்தைப் பருவத்திலேயே உடற்பருமன் வந்ததாகவும் அதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததே காரணமாகவும் இருந்தது.[10]
உடலில் ஏற்படும் மாற்றங்கள்
[தொகு]அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக
- உயர் ரத்த அழுத்த நோய்
- இரண்டாம் வகை சர்க்கரை நோய்
- மூச்சுத்திணறல்
- மூட்டு வலி
- முதுகு வலி
- மாரடைப்பு
- மார்பகப் புற்றுநோய்
- பித்தப்பை கற்கள்
- குடலிறக்கம்
- உறக்கச் சுவாசத்தடை
- மலட்டுத்தன்மை
இறப்பியல்பு
[தொகு]உலக அளவில் தடுக்கக்கூடிய நோயினால் இறப்பதில் உடற்பருமன் முதன்மையாக உள்ளது. உடற்பருமன் சுட்டானது யாருக்கு அதிகம் (20-25) உள்ளதோ அவருக்கு இறப்பு விகிதம் அதிகம் உள்ளது.
பாதிப்புகள்
[தொகு]எவர் ஒருவர் உணவு எடுத்துக்கொள்ளும் விகிதமானது அதிகமாகவும், உடலுழைப்பு குறைவாகவும் உள்ள மனிதர்களுக்குத் தான் உடற் பருமன் அதிகம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. மிகச் சிலருக்குத்தான் அது மரபுவழியாகவும், சில மருத்துவ காரணங்களினாலும், சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுகின்றன. 2006 ஆம் ஆண்டின் ஆய்வின்படி மற்ற 10 காரணங்கள் உடற்பருமனுக்காக கூறப்படுகிறது.
- போதிய தூக்கமின்மை
- நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்
- கால நிலைகளின் மாற்றம்
- அதிக புகைப்பழக்கம்
- அதிக மருந்துகளை உட்கொள்ளல்
- தாமதமான குழந்தைப்பேறு
- மரபுவழிப் பிரச்சினை
- அதிக உடல் சுட்டு
- தொகு புணர்ச்சி
நோயுற்ற விகிதம்
[தொகு]உடற்பருமன் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.மேலும் இவற்றால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவைகளு,ம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மருத்துவத் துறை | நிலை | மருத்துவத் துறை | நிலை |
---|---|---|---|
இதய இயல் | தோல்நோய் | ||
நாளமில்லாச் சுரப்பிகள் |
| இரைப்பை குடல் அழற்சி |
|
நரம்பியல் | புற்றுநோயியல் [21] |
| |
மனநலவியல் |
| சுவாசவியல் |
|
வாதம் மற்றும் எலும்பியல் | சிறுநீரகவியல் மற்றும் நரம்பியல் |
சான்றுகள்
[தொகு]- ↑ "Treating Obesity as a Disease". American Heart Association. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Heshka S1, Allison DB. (Oct 2001). "Is obesity a disease?". Int J Obes Relat Metab Disord. 25 (10): 1401-4. doi:10.1038/sj.ijo.0801790. பப்மெட்:11673757. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11673757.
- ↑ Kopelman PG, Finer N. (Oct 2001). "Reply: Is obesity a disease?". Int J Obes Relat Metab Disord. 25 (10): 1405-6. doi:10.1038/sj.ijo.0801791. பப்மெட்:11673758. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11673758.
- ↑ "Obesity and overweight". Fact Sheet. WHO. June 2016. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "About Adult BMI". Centres for Disease Control and Prevention. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Body Mass Index Table 1". Natinal Heart, Lung and Blood Institutes. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Television viewing as a cause of increasing obesity among children in the United States, 1986–1990". Arch Pediatr Adolesc Med 150 (4): 356–62. April 1996. doi:10.1001/archpedi.1996.02170290022003. பப்மெட்:8634729.
- ↑ "Time spent watching television, sleep duration and obesity in adults living in Valencia, Spain". Int. J. Obes. Relat. Metab. Disord. 24 (12): 1683–8. December 2000. doi:10.1038/sj.ijo.0801434. பப்மெட்:11126224.
- ↑ "Television viewing and obesity in adult females" (PDF). Am J Public Health 81 (7): 908–11. July 1991. doi:10.2105/AJPH.81.7.908. பப்மெட்:2053671. பப்மெட் சென்ட்ரல்:1405200. http://www.ajph.org/cgi/reprint/81/7/908.
- ↑ "Media + Child and Adolescent Health: A Systematic Review" (PDF). Ezekiel J. Emanuel. Common Sense Media. 2008. பார்க்கப்பட்ட நாள் April 6, 2009.
- ↑ Global Burden of Metabolic Risk Factors for Chronic Diseases Collaboration (BMI Mediated, Effects); Lu, Y; Hajifathalian, K; Ezzati, M; Woodward, M; Rimm, EB; Danaei, G (15 March 2014). "Metabolic mediators of the effects of body-mass index, overweight, and obesity on coronary heart disease and stroke: a pooled analysis of 97 prospective cohorts with 1·8 million participants.". Lancet 383 (9921): 970–83. doi:10.1016/S0140-6736(13)61836-X. பப்மெட்:24269108.
- ↑ "Obesity and thrombosis". Eur J Vasc Endovasc Surg 33 (2): 223–33. February 2007. doi:10.1016/j.ejvs.2006.10.006. பப்மெட்:17185009.
- ↑ 13.0 13.1 13.2 13.3 13.4 "Obesity and the skin: skin physiology and skin manifestations of obesity". J. Am. Acad. Dermatol. 56 (6): 901–16; quiz 917–20. June 2007. doi:10.1016/j.jaad.2006.12.004. பப்மெட்:17504714.
- ↑ Hahler B (June 2006). "An overview of dermatological conditions commonly associated with the obese patient". Ostomy Wound Manage 52 (6): 34–6, 38, 40 passim. பப்மெட்:16799182.
- ↑ "Meralgia paresthetica: diagnosis and management strategies". Pain Med 8 (8): 669–77. 2007. doi:10.1111/j.1526-4637.2006.00227.x. பப்மெட்:18028045.
- ↑ "Obesity and chronic daily headache". Curr Pain Headache Rep 12 (1): 56–61. January 2008. doi:10.1007/s11916-008-0011-8. பப்மெட்:18417025.
- ↑ "Assessment of body mass index and hand anthropometric measurements as independent risk factors for carpal tunnel syndrome". Folia Morphol. (Warsz) 67 (1): 36–42. February 2008. பப்மெட்:18335412.
- ↑ "Obesity and central obesity as risk factors for incident dementia and its subtypes: A systematic review and meta-analysis". Obes Rev 9 (3): 204–18. May 2008. doi:10.1111/j.1467-789X.2008.00473.x. பப்மெட்:18331422.
- ↑ Wall M (March 2008). "Idiopathic intracranial hypertension (pseudotumor cerebri)". Curr Neurol Neurosci Rep 8 (2): 87–93. doi:10.1007/s11910-008-0015-0. பப்மெட்:18460275.
- ↑ "Body size and risk of MS in two cohorts of US women". Neurology 73 (19): 1543–50. 2009. doi:10.1212/WNL.0b013e3181c0d6e0. பப்மெட்:19901245.
- ↑ Basen-Engquist, Karen; Chang, Maria (16 November 2010). "Obesity and Cancer Risk: Recent Review and Evidence". Current Oncology Reports 13 (1): 71–76. doi:10.1007/s11912-010-0139-7. பப்மெட்:21080117.
- ↑ Aune, D; Norat, T; Vatten, LJ (December 2014). "Body mass index and the risk of gout: a systematic review and dose-response meta-analysis of prospective studies.". European journal of nutrition 53 (8): 1591–601. doi:10.1007/s00394-014-0766-0. பப்மெட்:25209031.
- ↑ "Overweight and health problems of the lower extremities: osteoarthritis, pain and disability". Public Health Nutr 12 (3): 1–10. April 2008. doi:10.1017/S1368980008002103. பப்மெட்:18426630.
- ↑ "[Considerable comorbidity in overweight adults: results from the Utrecht Health Project]" (in Dutch). Ned Tijdschr Geneeskd 152 (45): 2457–63. November 2008. பப்மெட்:19051798.
- ↑ Corona, G; Rastrelli, G; Filippi, S; Vignozzi, L; Mannucci, E; Maggi, M (2014). "Erectile dysfunction and central obesity: an Italian perspective.". Asian Journal of Andrology 16 (4): 581–91. doi:10.4103/1008-682X.126386. பப்மெட்:24713832.
- ↑ Hunskaar S (2008). "A systematic review of overweight and obesity as risk factors and targets for clinical intervention for urinary incontinence in women". Neurourol. Urodyn. 27 (8): 749–57. doi:10.1002/nau.20635. பப்மெட்:18951445.
- ↑ "Obesity and risk for chronic renal failure". J. Am. Soc. Nephrol. 17 (6): 1695–702. 2006. doi:10.1681/ASN.2005060638. பப்மெட்:16641153.
- ↑ "Hypogonadism and metabolic syndrome: Implications for testosterone therapy". J. Urol. 174 (3): 827–34. September 2005. doi:10.1097/01.ju.0000169490.78443.59. பப்மெட்:16093964. https://archive.org/details/sim_journal-of-urology_2005-09_174_3/page/827.
- ↑ "Management of "buried" penis in adulthood: an overview". Plast. Reconstr. Surg. 124 (4): 1186–95. October 2009. doi:10.1097/PRS.0b013e3181b5a37f. பப்மெட்:19935302.
வெளி இணைப்புகள்
[தொகு]- உடல் பருமன் பிரச்சனை பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- உடல் பருமன்
- World Health Organization – Obesity pages
- Diet, Nutrition and the prevention of chronic diseases (including obesity) by a Joint WHO/FAO Expert consultation (2003). Summary by GreenFacts.
- Obesity at Endotext.org பரணிடப்பட்டது 2011-06-16 at the வந்தவழி இயந்திரம்
- International Task Force on Obesity
- Rudd Center for Food Policy and Obesity at Yale University
- Australasian Society for the Study of Obesity பரணிடப்பட்டது 2018-08-12 at the வந்தவழி இயந்திரம்