உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
இயக்கம்ஸ்ரீதேவ்
தயாரிப்புகோவைத்தம்பி
கதைஸ்ரீதேவ்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
படத்தொகுப்புஎம். என். இராஜா
கலையகம்மதர்லேண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்மதர்லேண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 14, 1992 (1992-02-14)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (Unnai Vaazhthi Paadugiren) என்பது 1992 ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஸ்ரீதேவ் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், சுமன் ரங்கநாதன், மோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். டி. பி. கோவைத்தம்பி தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். 1992 பெப்ரவரி 14 அன்று படம் வெளியானது.[1][2]

கதை

[தொகு]

இரவி ( பார்த்திபன் ), வாகன பழுதுபார்க்கும் தொழில் செய்யும் ஒரு ஏழை. அவன் பணிமனையில் வேலை செய்து தனது தாயுடன் வசிக்கிறான். மேலும் அவன் பணக்கார பெண்ணான பிரியாவை ( சுமன் ரங்கநாதன் ) ஆழமாக காதலிக்கிறான். பிரியா அவனை வெறுக்கிறாள் மேலும் இரவியும், பிரியாவும் ஏற்கனவே திருமணமானமாகி மண முறிவு பெற்றவர்கள் எனபது பின்னோக்கிய காட்சிகள் வழியாக தெரியவருகிறது. ஏனெனில் அவன் தன் தாய் இறந்துவிட்டார் என்று பொய் சொள்கிறான். இதனால் கோபப்படும் பிரியா தனது காதல் திருமணத்திற்கு பிறகு அவனுடன் வாழ்வதற்கு பதிலாக தன் பெற்றோருடனே இருந்துவிடுகிறாள். இதற்கிடையில், ஆஷா ( மோகினி ) என்ற மற்றொரு பணக்கார பெண், இரவியை காதலிக்கிறாள், அவள் அவனுக்கு தன் ஆசையை வெளிப்பபடுத்துகிறாள். அவன், உண்மையில், தான் பிரியாவின் கணவன் என்றும், அவளுடன் வாழ்வதற்காக அவளை சமாதானப்படுத்த முயல்வதாக இரவி அவளிடம் கூறுகிறான்.

ரவி, பிரியா, ஆஷாவுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் மீதமுள்ள கதை.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் இளையராஜா மேற்கொண்டார். 1992 இல் வெளியான இந்த படல் பதிவில், வாலி, கங்கை அமரன், நா காமராசன், முத்துலிங்கம், பிறைசூடன், மு. மேத்தா ஆகியோர் எழுதிய ஆறு பாடல்கள் இருந்தன.

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'இப்போதும் நிப்பேன்' மனோ 4:57
2 'ஓ ஓ ஓ காலை' எஸ். ஜானகி 4:46
3 'ஒரு மாலை சந்திரன்' எஸ். பி. பாலசுப்பிரமணியம், மின்மினி 4:52
4 'ஒரு ராகம்' கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 5:00
5 'தாலாட்டு சொன்னவளோ' அருண்மொழி 1:26
6 'உன்னை வாழ்த்தி' கே. ஜே. யேசுதாஸ் 4:50

குறிப்புகள்

[தொகு]
  1. "Filmography of unnai vazhthi padugiren". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Unnai Vaalthi Paadukiren (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.

வெளி இணைப்புகள்

[தொகு]