உருப்பெருக்கம்
ஒரு பொருளின் உருவத்தை தோற்றத்தில் மாத்திரம் பெருப்பிப்பதே உருப்பெருக்கம் எனப்படும். எனவே உருப்பெருக்கத்தின் மூலம் பொருளின் பௌதிக அளவு பெருப்பிக்கப்படாது. எம் கண்களுக்கு மாத்திரம் பெரிதாகத் தென்படும். உதாரணமாக உருப்பெருக்கமானது உயிரியலில் சிறிய நுண்ணங்கிகளை நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப் பயன்படும்.[1][2]
உருப்பெருக்கத்துக்கான உதாரணங்கள்
[தொகு]- பூதக் கண்ணாடி சாதாரணமாக அன்றாட வாழ்வில் சிறிய பொருட்களை பெரிதாக்கிக் காட்ட பயன்படுகிறது.
- தொலைநோக்கி தூரத்தில் சிறிதாகக் கண்களுக்குத் தென்படும் பொருட்களை உருப்பெருக்கிக் காட்டும்.
- நுணுக்குக்காட்டியானது மிகச் சிறிய அளவுடைய பொருட்களைப் பார்வையிட உதவும்.
- ப்ரொஜெக்டர் உபகரணமானது கணனித் திரையில் சிறிதாக தென்படுவதை உருப்பெருக்கி பெரிய திரையில் விழச்செய்யும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ray, Sidney F. (2002). Applied Photographic Optics: Lenses and Optical Systems for Photography, Film, Video, Electronic and Digital Imaging. Focal Press. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-240-51540-4.
- ↑ wayne (2021-03-22). "Magnification ratio and how to choose the Best macro lens" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
{{cite web}}
: CS1 maint: url-status (link)