எசு. அப்துல் நசீர்

சையது அப்துல் நசீர்
24வது ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 பெப்பிரவரி 2023
நியமிப்புதிரௌபதி முர்மு
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி
முன்னையவர்பிசுவபூசண் அரிச்சந்தன்
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
17 பெப்பிரவரி 2017 – 4 சனவரி 2023
பரிந்துரைப்புசகதீசு சிங் கேகர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில்
12 மே 2003 – 16 பெப்பிரவரி 2017
பரிந்துரைப்புவி. நா. கரே
நியமிப்புஆ. ப. ஜை. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1958 (1958-01-05) (அகவை 66)
பெலுவை, மைசூர் மாநிலம், இந்தியா
வாழிடம்ஆளுநர் இல்லம், விசயவாடா

நீதிபதி சை. அப்துல் நசீர் (Syed Abdul Nazeer; பிறப்பு: சனவரி 5, 1958, மூதபித்ரிக்கு அருகிலுள்ள பெலுவாயில்[1][2]) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

வாழ்க்கை & கல்வி[தொகு]

அப்துல் நசீர் கர்நாடகாவின் கடலோர கர்நாடகாவின் கனரா பகுதியைச் சேர்ந்த ஒரு முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பகிர் சாஹேபின் ஆவார். இவருக்கு ஐந்து உடன்பிறப்புகள் உள்ளனர்.[1] இவர் பெலுவாய் மற்றும் மூதபித்ரியில் வளர்ந்தார். மூதபித்ரி மகாவீர கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மங்களூருவில் உள்ள கோடியல்பைலில் உள்ள எசு. டி. எம். சட்டக் கல்லூரியில் (முன்னர் " ஸ்ரீ தர்மசாதலா மஞ்சுநாதேசுவரா சட்டக் கல்லூரி" என்று அறியப்பட்டது) சட்டப் பட்டம் பெற்றார்[2][1]

நீதிபதியாக[தொகு]

சட்டப் பட்டம் பெற்ற பிறகு, நசீர் 1983-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்து பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். மே 2003-ல், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நசீர் நியமிக்கப்பட்டார்.[3] பின்னர் இதே உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2017-ல், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியபோது, நசீர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இல்லாமல், இப்பதவிக்கு நேரடியாகப் பதவி உயர்வு பெற்ற மூன்றாவது நீதிபதி இவராவார்.[4]

உச்சநீதிமன்ற நீதிபதியாக[தொகு]

2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற நசீர், 2017ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய முத்தலாக் வழக்கினை விசாரித்த ஒரே இசுலாமிய நீதிபதியாக அப்துல் நசீர் இருந்தார்.[5][6] இசுலாமியச் சட்ட முறைமையின் கீழ் முத்தலாக் (தலாக்-இ-பித்தாத்) நடைமுறைக்குச் செல்லுபடியாகும் என்பதை நீதிபதி நசீரும் மற்ற ஒரு நீதிபதியும் உறுதி செய்த போதிலும், 3:2 பெரும்பான்மையால் இருக்கையால் தடைசெய்யப்பட்டது. இசுலாமிய சமூகத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டத்தை 6 மாதங்களில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்தது.[7][8] முத்தலாக் தொடர்பாக அரசு சட்டம் இயற்றும் வரை, கணவர்கள் மனைவிக்கு முத்தலாக் கூறுவதற்குத் தடை விதிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது.[9][10]

அயோத்தி சிக்கலுக்கு 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் 5 நீதிபதிகள் அமர்வில் இவரும் ஒருவர் ஆவார். இதில் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வக அறிக்கையை உறுதிப்படுத்தினார். இதில் சர்ச்சைக்குரிய பகுதியில் ஒரு இந்து அமைப்பு உள்ளது. இவர் இராமர் கோயிலுக்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கினார். இதனால் பல ஆண்டுகளாக நீடித்த தகராறு 5-0 தீர்ப்புடன் முடிவுக்கு வந்தது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Mangalorean Justice Abdul Nazeer among the 5 new judges of Supreme Court". Mangaloretoday.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  2. 2.0 2.1 "Moodbidri based Justice S Abdul Nazeer becomes Supreme Court judge | Udayavani - ಉದಯವಾಣಿ". Udayavani. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  3. "Hon'ble Mr. Justice S.Abdul Nazeer". Karnatakajudiciary.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  4. "HC judge elevated to Supreme court". 2017-02-17. http://www.newindianexpress.com/cities/bengaluru/2017/feb/17/hc-judge-elevated-to-supreme-court-1571518.html. பார்த்த நாள்: 2017-03-16. 
  5. "Triple talaq case: Muslim judge on multi-faith bench kept mum all through".
  6. "5 Judges Of 5 Faiths Give Verdict On Triple Talaq".
  7. "Supreme Court declares triple talaq unconstitutional, strikes it down by 3:2 majority".
  8. "Five Supreme Court judges who passed the verdict on triple talaq".
  9. "Injunction on husbands pronouncing triple talaq until law is made: SC advocate".
  10. "This Is What Supreme Court Said In Triple Talaq Judgment [Read Judgment]".
  11. "SC verdict refers to ASI report on 'Hindu structure' at Ayodhya site — this is what it says".
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._அப்துல்_நசீர்&oldid=3723262" இலிருந்து மீள்விக்கப்பட்டது