எண்ணெய் விளக்கு
எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள்,
- தாவர எண்ணெய்கள்
- விலங்கு நெய்கள்
- மண்ணெண்ணெய் முதலிய பெற்றோலிய எண்ணெய்கள்.
என்பன பரவலான பயன்பாட்டிலுள்ளவை.
எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும்.
- அகல் விளக்கு
- குத்து விளக்கு
- சட்ட விளக்கு
- நாகாசு குத்துவிளக்கு
- நந்தி அடுக்கு விளக்கு
- பாவை விளக்கு (சிற்பம்)
- அஷ்டோத்திர விளக்கு
- கிளை விளக்கு
- கேரள விளக்கு
- தொங்கு விளக்கு
- தூண்டாமணி விளக்கு
போன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழை நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். இந்து சமய / இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.