ஐ. எம். டி. பி இணையத்தளம்
இணையதளம் சூலை 25, 2009 IMDb.com | |
வலைத்தள வகை | இணையதளம் திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் நிகழ்பட ஆட்டம் தரவுத்தளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம், பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, துருக்கிய மொழி மற்றும் எசுப்பானியம் |
உரிமையாளர் | அமேசான்.காம் |
உருவாக்கியவர் | கொல் நீதம் |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | பயனர் விருப்பம் |
வெளியீடு | அக்டோபர் 17, 1990 |
தற்போதைய நிலை | இயங்குகிறது |
ஐ. எம். டி. பி (IMDb) இவ்விணையத்தளம் ஆனது உலக திரைப்படங்களினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது. மேலும் இவ்விணையத்தளத்தினை இலவசமாகப் பயனர் பகுதியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உண்டு. உலகளவில் திரைப்படங்களிற்காகப் பார்க்கப்படும் தளங்களில் இத்தளம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், பாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவுத் தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.[1][2][3]
சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்தப் படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும்.
சிறப்பான விஷயங்கள்
[தொகு]புதிதாகப் பயனர் கணக்கை ஏற்படுத்திய பின்னர்:
- நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் புள்ளிகளை நாமே விரும்பியபடி வழங்கலாம்.இவ்வாறு நாம் வழங்கும் புள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு அத்திரைப்படத்தினை உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மக்களால் வரவேற்கப்படுமாறு செய்யலாம்.மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு சிறந்த திரைப்படமாகத் தோன்றும் திரைப்படங்கள் உலக மக்களாலும் ரசிக்கப்படலாம்.
- நாம் இதுவரை காலங்களும் பார்த்து ரசித்த திரைப்படங்களினை ஒரு பட்டியலாகச் சேகரித்து பின்னர் நமது விருப்பத்திற்கேற்றாற் போல புள்ளிகளை வழங்கலாம்.
- மேலும் நாம் பார்த்த படங்களின் விமர்சனங்களையும் எழுதலாம்.
பிற விபரங்கள்
[தொகு]சர்வதேச சந்தைப்படுத்துதலை இந்தத் தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் இறுவட்டு விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது அல்லது இறுவட்டு வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன.
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Conditions of Use". IMDb. Archived from the original on January 4, 2022. பார்க்கப்பட்ட நாள் January 3, 2022.
- ↑ "IMDb | History, Features, & Facts". Encyclopædia Britannica (in ஆங்கிலம்). Archived from the original on November 2, 2020. பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
- ↑ "Alexa Top 1000 Most Visited Websites". HTMLSTRIP. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.