ஐ. கே. குஜரால் பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | பஞ்சாபை வளமிக்க அறிவுசார் சமூகமாக முன்னேற்றுதல். |
---|---|
வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | சனவரி 16, 1997இல் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி |
சார்பு | UGC, ACU, IAU, AIU, AICTE, NAAC, COA, PCI, 30°19′52″N 75°29′25″E / 30.33103°N 75.490268°E |
மாணவர்கள் | 5 இலட்சம் |
அமைவிடம் | |
சேர்ப்பு | பமாகு, ஐசியூ, ஏசியூ, ஏஐயூ, அஇதொககு, என்ஏஏசி,சிஓஏ,பிசிஐ |
இணையதளம் | www |
ஐ. கே. குஜரால் பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம் (I. K. Gujral Punjab Technical University, IKGPTU) (முன்பாக பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம் (PTU)) பஞ்சாபின் ஜலந்தரில் கபூர்த்தலா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகமாகும். பஞ்சாப் மாநிலத்தில் தொழினுட்ப, மேலாண்மை, மருந்தாள்மை கல்வியை முன்னெடுக்க சனவரி 16, 1997இல் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. கல்வி மற்றும் ஆய்வுப் பல்கலைக்கழகமாக உள்ள ஐ.மே.குஜரால் பல்கலைக்கழகத்திற்கு முன்னணி தொழினுட்பங்களுக்கு உயர்திறன் மையங்களை கட்டமைக்க பணிக்கப்பட்டுள்ளது.