கடவுளின் குழந்தை
கடவுளின் குழந்தை | |
---|---|
இயக்கம் | தாதா மிராசி |
தயாரிப்பு | சின்ன அண்ணாமலை வெற்றிவேல் பிக்சர்ஸ் |
கதை | சின்ன அண்ணாமலை |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | கல்யாண்குமார் எம். ஆர். ராதா கே. ஏ. தங்கவேலு டி. கே. சண்முகம் நாகேஷ் ஜமுனா ஜி. சகுந்தலா லட்சுமிபிரபா சித்ராதேவி |
வெளியீடு | 29 சூலை 1960 |
நீளம் | 15733 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடவுளின் குழந்தை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1960 ஆம் ஆண்டு வெளியான நோபடிஸ் சைல்ட் என்ற அமெரிக்க திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]சமூகத்தால் புறக்கணிக்கபடும் ஒரு ஆதரவற்ற குழந்தை. பள்ளி ஆசிரியர் ஒருவரின் பாதுகாப்பில் வளர்கிறது. இறுதியில் தன் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைகிறது.
நடிகர்கள்
[தொகு]பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் திரைப்பட வரவுகளின் தரவுத்தளத்தைக் கொண்டு உருவாக்கபட்ட பட்டியல்.
|
|
தயாரிப்பு
[தொகு]வெற்றிவேல் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் சின்ன அண்ணாமலை தயாரித்த இந்தப் படத்தை சண்முகா பிக்சர்ஸ் விநியோகம் செய்தது. தாதா மிராசி படத்தை இயக்கினார்.[2] ஜம்புலிங்கம் படத்தொகுப்பையும் எம். கர்ணன் ஒளிப்பதிவையும் செய்தனர். படத்தின் திரைக்கதையையும், உரையாடலையும் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை எழுதியுள்ளார். கலை இயக்கத்தை வர்தூர்கர் செய்தார். தங்கராசும், ஜெயராமனும் நடன அமைப்பாளர்களாக இருந்தனர். ஒளிப்படங்களை ஆர். வெங்கடாச்சாரி எடுத்தார்.
இசை
[தொகு]இப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைக்க, பாடல் வரிகளை நாமக்கல் கவிஞர், கு. மா. பாலசுப்பிரமணியம், நாமக்கல் ஆர். பாலு, கே. டி. சந்தானம் ஆகியோர் எழுதினர்.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "பளிங் சபலன் சடுகுடு" | கே. ஜமுனா ராணி (ம) ஏ. ஜி. ரத்தினமாலா | கே. டி. சந்தானம் | 02:40 |
2 | "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்" | பி. பி. சீனிவாஸ் | நாமக்கல் கவிஞர் | |
3 | "இளம் தமிழா உன்னைக் காண" | திருச்சி லோகநாதன்[4] | ||
4 | "தமிழனென்று சொல்லடா" | |||
5 | "சின்னச் சின்னப் பூவே" | பி. பி. சீனிவாஸ் (ம) பி. சுசீலா | கு. மா. பாலசுப்பிரமணியம் | |
6 | "சின்னச் சின்னப் பூவே" | பி. சுசீலா | ||
7 | "பெண் உள்ளம் கடல் வெள்ளம்" | கே. ஜமுனா ராணி (ம) குழுவினர் | நாமக்கல் ஆர். பாலு | |
8 | "கண்ணா மனம் கல்லோ" | பி. சுசீலா | 04:58 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Did You Know". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 October 2017 இம் மூலத்தில் இருந்து 6 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171006163825/http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=DID-YOU-KNOW-05102017108012.
- ↑ "கால அட்டவணை கொடுத்த 'கடவுளின் குழந்தை'". Hindu Tamil Thisai. 2023-06-23. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 194.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ TAMIL OLD--Tamilan endru sollada(vMv)--T L--KADAVULIN KULANTHAI – via யூடியூப்.