காயத்ரி

காயத்ரி
ரவி வர்மாவின் ஓவியம். படச் சித்தரிப்புகளில் காயத்ரி ஐந்து தலைகள், ஐந்து ஜோடிக் கைகளுடன் தாமரை மலரின் மேல் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்
அதிபதிகாயத்ரி மந்திரத்தின் கடவுள்,வேத மந்திரங்கள், பாடல்களுக்கான தெய்வம்.
தேவநாகரிगायत्री
தமிழ் எழுத்து முறைகாயத்ரி
வகைதேவி
சைவத்தின் படி பார்வதி)
ஸ்கந்த புராணத்தின் படி சரசுவதி
இடம்கயிலை மலை, பிரம்ம லோகம்,விஸ்வக்ரம லோகம்
மந்திரம்காயத்ரி மந்திரம்
துணைசைவ புராணங்களின்படி சதாசிவ மூர்த்தி)
ஸ்கந்த புராணத்தின்படி பிரம்மா )
விஸ்வகர்மா
விழாக்கள்காயத்ரி ஜெயந்தி, நவராத்திரி நோன்பு

காயத்ரி ( சமஸ்கிருதம் : गायत्री, IAST : gāyatrī) என்பது பிரபலமான காயத்ரி மந்திரத்தின் உருவகப்படுத்தப்பட்ட வடிவமாகும், இது வேத நூல்களில் சொல்லப்பட்ட பாடல் உருவகமாகும்.[1] காயத்திரி என்பவர் சாவித்ரி மற்றும் வேதமாதா (வேதங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகிறார். காயத்ரி பெரும்பாலும் வேதங்களில் சூரிய தெய்வமான சவித்ருவுடன் தொடர்புடையவர்.[2][3] சைவ மத நூல்கள் சிவனின் உயர்ந்த வடிவமான ஐந்து தலைகள் மற்றும் பத்து கைகள் உள்ள சிவனின் ஒரு அம்சமான சதாசிவத்தின் மனைவியாக காயத்ரியை அடையாளம் காண்கின்றன.[4][5] மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, காயத்ரி என்பது பிரம்மாவின் மனைவியின் பெயர்.

வளர்ச்சி

[தொகு]
காயத்ரி தெய்வத்தின் நவீன சித்தரிப்பு.

காயத்ரி என்பது தொடக்கத்தில் 24 எழுத்துக்களைக் கொண்ட ரிக் வேதத்தின் ஒரு யாப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது.[6]குறிப்பாக, இது காயத்ரி மந்திரத்தையும், காயத்ரி தேவியையும் அந்த மந்திரமாக உருவகப்படுத்தியதையும் குறிக்கிறது. இந்த மும்மை வடிவத்தில் இயற்றப்பட்ட காயத்ரி மந்திரம் மிகவும் பிரபலமானது. பெரும்பாலான அறிஞர்கள் காயத்ரியை காயத்ராவின் பெண்பால் வடிவமாக அடையாளம் காண்கின்றனர், இது வேத சூரிய கடவுளின் மற்றொரு பெயர், இது சாவித்ரி மற்றும் சவித்ருவின் ஒத்த சொற்களில் ஒன்றாகும்.[7] இருப்பினும், மந்திரமானது காயத்ரி தேவியாக -உருவகமாக மாற்றப்பட்ட காலம் இன்னும் அறியப்படவில்லை. காலங்கள் தோறும் இது வளர்ந்து வந்ததைத் தீர்மானிக்கப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

சைவ காயத்ரி

[தொகு]
சதாசிவன்

சைவ சித்தாந்தத்த கண்ணோட்டத்தின் படி காயத்ரி யாவருக்கும் மேலான பரமேஸ்வரனான சதாசிவனின் மனைவியாவார்.[5][8] சிவசூர்யா என்ற சூரிய வடிவத்தில் வெளிப்படும் நித்திய ஆனந்தமான முழுமையான பரமசிவனின் மனைவியாக காயத்ரியை சைவ மதம் பார்க்கிறது.[9][10] அவர் சர்வ வல்லமையுள்ள சதாசிவ மூர்த்தி, அவரின் ஒரு பெயர் பார்கா.[11] சதாசிவனின் துணைவியார் மனோன்மணி, அவருக்குள் கணவர் பார்காவின் சக்தியைக் கொண்டவர்; இவரும் காயத்ரி மந்திரமும் வேறு வேறு இல்லை.[12][13] ஐந்து தலைகள்,பத்து கரங்களைக் கொண்ட காயத்ரியின் பிரபலமான வடிவம் ஆரம்பத்தில் வட இந்தியாவில் மனோன்மனியின் சைவ உருவப்படமாக பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்பட்டது.[4][5] காயத்ரியைப் பற்றிய சைவ கண்ணோட்டமானது காயத்ரி வழிபாடு, வேத நடைமுறைகளில் சைவத்துடனான சேர்ப்பு, ஆகியவை பிற்கால வளர்ச்சியாக அறியப்படுகிறது.பிற்கால புராணங்கள் காயத்ரியின் அச்சமூட்டக்கூடிய தோற்றமும் விருத்திராசூரன் என்ற அரக்கனை கொன்ற செயலும் ஆதி பராசக்தியுடன் அவளை ஒரு சேர வைத்து அடையாளப்படுத்துகின்றன்.[14]

புராணக் காயத்ரி

[தொகு]

சில புராணங்களில், காயத்ரி என்பது பிரம்மாவின் மனைவி சரஸ்வதியின் மற்ற பெயர்களுள் ஒன்று என்று கூறப்படுகிறது.[15] மத்சய புராணத்தின் படி, பிரம்மாவின் இடது பாதி ஒரு பெண்ணாக வெளிப்பட்டது, அவர் சரஸ்வதி, சாவித்ரி மற்றும் காயத்ரி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறார்.[16] கூர்ம புராணத்தில், கௌதமரிஷி காயத்ரி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டதால் அவரது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட தடைகளை அகற்ற முடிந்தது. காயத்ரி பிரம்மாவின் மனைவி என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது, அவரை சரஸ்வதியின் ஒரு வடிவமாக்குகிறது.[17]

காயத்ரி சரவதியிலிருந்து வேறுபட்டவர், பிரம்மாவை மணந்தார் என்று சில புராண வசனங்கள் கூறுகின்றன. அவர்களைப் பொறுத்தவரை, பிரம்மாவின் முதல் மனைவி சாவித்ரி, காயத்ரி இரண்டாவது. காயத்ரியின் பிரம்மாவுடன் திருமணத்தை அறிந்த சாவித்ரி கோபமடைந்து, திருமணத்தில் கலந்துகொண்ட அனைத்து தேவர், தெய்வங்களையும் சபித்ததாக கதை தொடர்கிறது.[18][6] இருப்பினும், பத்ம புராணம் அதே கதையை சிறிய மாற்றங்களுடன் விவரிக்கிறது. சாவித்திரியை பிரம்மா, விஷ்ணு மற்றும் லட்சுமி சமாதானப்படுத்திய பிறகு, காயத்ரியை தனது சகோதரியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறாள்.[19]

மேலும் காயத்ரிஒரு அரக்கனைக் கொல்லக் கூடிய ஒரு வலிமையான தெய்வமாக வளர்ந்தார். வராக புராணம், மகாபாரதத்தின் படி தேவி காயத்ரி விருத்திரனுக்கும் வேத்ராவதி நதிக்கும் பிறந்த மகனாகிய அரக்கன் விருத்திராசூரனை ஒரு நவமி நாளில் அழித்தொழிக்கிறார்.[20][21]

சித்தரிப்பு

[தொகு]
  1. Bradley, R. Hertel; Cynthia, Ann Humes (1993). Living Banaras: Hindu Religion in Cultural Context. SUNY Press. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791413319.
  2. Constance Jones, James D. Ryan (2005), Encyclopedia of Hinduism, Infobase Publishing, p.167, entry "Gayatri Mantra"
  3. Roshen Dalal (2010), The Religions of India: A Concise Guide to Nine Major Faiths, Penguin Books India, p.328, entry "Savitr, god"
  4. 4.0 4.1 Margaret Stutley (2006). Hindu Deities: A Mythological Dictionary with Illustrations. Munshiram Manoharlal Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121511643.
  5. 5.0 5.1 5.2 Omacanda Hāṇḍā (1992). Śiva in art: a study of Śaiva iconography and miniatures. Indus Pub. House.
  6. 6.0 6.1 Bansal, Sunita Pant (2005). Hindu Gods and Goddesses. Smriti Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187967729.
  7. Ramachandra Rao, Saligrama Krishna (1998). R̥gveda-darśana: Gāyatri mantra. Kalpatharu Research Academy. p. 77.
  8. B.N. Sharma (1976). Iconography of Sadasiva. Abhinav Publications. pp. 25–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170170372.
  9. Vallyon, Imre (2012). Planetary Transformation: A Personal Guide To Embracing Planetary Change. Bookbaby. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780909038908.
  10. CHETTY, D. GOPAUL (1923). NEW LIGHT UPON INDIAN PHILOSOPHY OR SWEDENBORG AND SAIVA SIDDHANTA.
  11. Frawley, David (2015). Shiva: The Lord of Yoga. Lotus Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780940676299.
  12. Uma Devi, Mudigonda (1990). Palkuriki Somanatha: His Contribution to Sanskrit Literature. Rasagangotri. pp. 123–183.
  13. Sankaracharya (2000). Śrī Dakshināmūrti stotram: stava rajaṁ, astakam, samsmaranam and upanishat (stepping stone to Vedant). Sānkhyāyana Vidyā Parishat. pp. 6–7.
  14. Jagdish Lal Shastri, Arnold Kunst (1985). Ancient Indian Tradition & Mythology, Volume 31. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780895817778.
  15. Guru Granth Sahib an Advance Study. Hemkunt Press. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170103219.
  16. Sarasvatī, Riverine Goddess of Knowledge: From the. Brill. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004158146.
  17. Researches Into the Nature and Affinity of Ancient and Hindu Mythology by Vans Kennedy. Longman, Rees, Orme, Brown and Green.
  18. Sharma, Bulbul (2010). The book of Devi. Penguin Books India. pp. 72–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143067665.
  19. Holdrege, Barbara A. (2012). Hindu Mythology, Vedic and Puranic. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438406954.
  20. B K Chaturvedi (2017). Varaha Purana. Diamond Pocket Books Pvt Ltd. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128822261.
  21. Bibek (2002). The holy Puranas Volume 2 of The Holy Puranas: Markandeya, Agni, Bhavishya, Brahmavaivarta, Linga, Varaha. B.R. Pub. Corp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176462969.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி&oldid=3877904" இலிருந்து மீள்விக்கப்பட்டது