கிலோமீட்டர்

மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்
100,000 செண்டிமீட்டர் = 1 கிலோமீட்டர்
10,000 இடெசிமீட்டர் = 1 கிலோமீட்டர்
1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்

சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலோமீட்டர்&oldid=3777219" இலிருந்து மீள்விக்கப்பட்டது