கிராசைட்டு

கிராசைட்டு
Crossite
கலிபோர்னியவின் கிராசைட்டு
பொதுவானாவை
வகைஆம்பிபோல் - இனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுNa2(Mg,Fe)3(Al,Fe)2Si8O22(OH)2
இனங்காணல்
நிறம்நீலம், நீலப்பச்சை
மோவின் அளவுகோல் வலிமை6
கீற்றுவண்ணம்இளம் நீலம்

கிராசைட்டு (Crossite) என்பது Na2(Mg,Fe)3(Al,Fe)2Si8O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இனோசிலிக்கேட்டு இரட்டைச் சங்கிலி கட்டமைப்பில் உவர் ஆம்பிபோல் குழுவைச் சேர்ந்த கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஓர் அரிய வகைக் கனிமமான இது சோடியம் மிகுந்த ரைபெக்கைட்டு என்ற ஆம்பிபோலின் துணைக்குழுவில் சேர்க்கப்படுகிறது. மேலும் ஆம்பிபோல் குழு கனிமங்களில் உள்ள கிளாவ்கோபேன் மற்றும் மக்னீசியோரைபெக்கைட்டு இரண்டுக்கும் இடைப்பட்டநிலை கனிமமாகவும் கருதப்படுகிறது [1]. 1907 இல் மதிப்பிழந்தது என்பது அனைத்துலக கனிமவியல் சங்கத்தின் நிலையாகும்.

அமெரிக்க நிலவியல் அளக்கைத் துறையின் பாறையியல் அறிஞர் சார்லசு விட்மான் கிராசு என்பவர் கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு கிராசைட்டு என்ற பெயர் வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராசைட்டு&oldid=4127802" இலிருந்து மீள்விக்கப்பட்டது