கும்பகோணம் பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில்

பேட்டைத்தெரு ராமபக்த ஆஞ்சநேயர் கோயில்

கும்பகோணத்தில் உள்ள அனுமார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1] இக்கோயில் ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

இருப்பிடம்

[தொகு]

கும்பகோணம் நகரில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பேட்டைக்கடைத்தெருவில் தாலுகா காவல் நிலையத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது.

சன்னதிகள்

[தொகு]

அரசலாற்றின் தென் கரையில் யாகத்தினை விஷ்ணு சக்கரத்துடன் காத்து அசுரப்பெண்ணை தடுத்தாட்கொண்டு சக்கராயி எனப் பெயரிட்டு அருள்புரிந்து காவல் தெய்வமாக விளங்கச்செய்த ஆஞ்சநேயர் என்று சிறப்பாகக் கூறுகின்றனர். இந்த ஆஞ்சநேயரை சுதர்சன ஆஞ்சநேயர் என்றும் சக்கராயி ஆஞ்சநேயர் என்றும் அழைக்கின்றனர். ராமர், வரதராஜர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் என்ற நிலையில் தனித்தனியாகக் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பேட்டை கடைத்தெரு சக்கராயி அம்மன் கோவில் தல வரலாறு