கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் | |
---|---|
இயக்கம் | ரூசோ சகோதரர்கள்[1] |
தயாரிப்பு | கேவின் பேகே[2] |
மூலக்கதை | |
திரைக்கதை | கிறிஸ்டோபர் மார்கஸ் இசுடீபன் மெக்பீலி |
இசை | ஹென்றி ஜாக்மேன் |
நடிப்பு | கிறிஸ் இவான்ஸ் ஸ்கார்லெட் ஜோஹான்சன் செபாஸ்டியன் இஸ்டான் அந்தோணி மேக்கி சாமுவேல் எல். ஜாக்சன் கோபி ஸ்மல்டேர்ஸ் பிராங்க் கிரில்லோ எமிலி வான்காம்ப் ஹேலி அட்வெல் ராபர்ட் ரெட்ஃபோர்ட் |
ஒளிப்பதிவு | ரெண்ட் ஓபலோச் |
படத்தொகுப்பு | ஜெப்ரி போர்ட் மத்தேயு சிமிட் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 13, 2014(எல் கேப்டன் திரையரங்கம் ) ஏப்ரல் 4, 2014 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $170–177 மில்லியன் |
மொத்த வருவாய் | $714.4 மில்லியன்[3] |
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்[4] (ஆங்கில மொழி: Captain America: The Winter Soldier) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் வரைகதை நிறுவனத்தின் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
இது 2011 இல் வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியும்,[5] மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் ஒன்பதாவது திரைப்படமும் ஆகும். அந்தனி உறூசோ மற்றும் சோ உறூசோ ஆகியோர் இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லெட் ஜோஹான்சன், செபாஸ்டியன் இஸ்டான், அந்தோணி மேக்கி, கோபி ஸ்மல்டேர்ஸ், பிராங்க் கிரில்லோ, எமிலி வான்காம்ப், ஹேலி அட்வெல், ராபர்ட் ரெட்ஃபோர்ட் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்தள்ளனர்.
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் மார்ச்சு 13, 2014 இல் லாஸ் ஏஞ்சலிலும் மற்றும் ஏப்ரல் 4, 2014 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது திரைப்படமாக வெளியானது. இப் படம் விமர்சன மற்றும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் 714 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. இது 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது மேலும் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரையைப் பெற்றது. இதன் தொடர்சியாக 2016 ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் என்ற திரைப்படம் வெளியானது.
நடிகர்கள்
[தொகு]- கிறிஸ் இவான்ஸ்[6][7] - ஸ்டீவ் ரோஜர்ஸ்/கேப்டன் அமெரிக்கா
- ஸ்கார்லெட் ஜோஹான்சன்[8] - நடாஷா ரோமானோப்/பிளாக் விடோவ்
- செபாஸ்டியன் இஸ்டான்[9] - பக்கி பார்ன்ஸ்
- அந்தோணி மேக்கி[10][11][12] - சாம் வில்சன்/பால்கன்
- கோபி ஸ்மல்டேர்ஸ்[13] - மரியா ஹில்
- பிராங்க் கிரில்லோ[14] - ப்ரோக் ரம்லோ
- எமிலி வான்காம்ப் - ஷரோன் கார்ட்டர்
- ஹேலி அட்வெல் - பெக்கி கார்ட்டர்
- ராபர்ட் ரெட்ஃபோர்ட் - அலெக்சாண்டர் பியர்ஸ்
- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி
படப்பிடிப்பு
[தொகு]ஏப்ரல் 1, 2013 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ராலே மன்ஹாட்டன் பீச்சில் ஸ்டுடியோவில் முதன்மை புகைப்படபிடிப்பு நடந்தது. மே 14, 2013 அன்று, தயாரிப்பு படப்பிடிப்பு நேஷனல் மால் மற்றும் தியோடர் ரூஸ்வெல்ட் பாலதில் நடைபெற்றது.
படப்பிடிப்பு நடந்த இடங்கள்
[தொகு]- நேஷனல் மால்
- தியோடர் ரூஸ்வெல்ட் பாலம்
- வில்லார்ட் சர்வதேச வாஷிங்டன்
- கைஹோஹா ஹைட்ஸ், ஓஹியோ
- தென்மேற்கு, வாஷிங்டன், D.C
- கிளவ்லேண்ட் பொது நூலகம்
- கிளவ்லேண்ட் மத்திய ரிசர்வ் வங்கி
- கிளவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகம்
- கிளவ்லேண்ட் ஆர்கேட்
- டோவேர் சிட்டி சென்றர்
- கலை கிளீவ்லாந்து அருங்காட்சியகம்
- வெஸ்டர்ன் ரிசர்வ் வரலாற்று சங்கம்
- பில்கிரிம் கூட்டங்களை சர்ச் (கிளீவ்லன்ட்)
விளம்பரம்
[தொகு]ஜூலை 2013 ல், மார்வெல் ஸ்டுடியோ ஒரு சேதமடைந்த மற்றும் நிறமாற்றமடைந்த கேப்டன் அமெரிக்கா கவசத்தைச் சித்தரிக்கும் ஒரு விளம்பர சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது.
தொடர்ச்சியான தொடர்கள்
[தொகு]கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sneider, Jeff (June 6, 2012). "Russo brothers tapped for 'Captain America 2': Disney and Marvel in final negotiations with 'Community' producers to helm pic". Variety. Archived from the original on December 16, 2012. பார்க்கப்பட்ட நாள் July 3, 2012.
- ↑ Rice, Jerry (February 22, 2013). "'Marvel's Feige keeps tentpole fare fresh". Variety. Archived from the original on February 25, 2013. பார்க்கப்பட்ட நாள் February 22, 2013.
- ↑ McClintock, Pamela (April 5, 2014). "Box Office: 'Captain America: Winter Soldier' Nabs Record $37 Million Friday". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து April 8, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408100727/http://www.hollywoodreporter.com/news/box-office-captain-america-winter-693926.
- ↑ "Captain America: The Winter Soldier (2014)". British Board of Film Classification. Archived from the original on March 28, 2014. பார்க்கப்பட்ட நாள் March 13, 2014.
- ↑ Marshall, Rick (April 14, 2011). "'Captain America' Writers Talk Sequel, Post-'Avengers' Plans, And The Marvel Movie-Verse". MTV Splash Page. Archived from the original on August 10, 2011. பார்க்கப்பட்ட நாள் April 14, 2011.
- ↑ Chitwood, Adam (September 11, 2012). "Chris Evans Says 'Captain America: The Winter Soldier' Starts Filming March 2013". Collider. Archived from the original on September 13, 2012. பார்க்கப்பட்ட நாள் September 11, 2012.
- ↑ Chitwood, Adam (September 18, 2012). "Chris Evans Talks 'Captain America: The Winter Soldier'; Says Sequel Will Get Into Material That Was Cut from 'The Avengers'". Collider. Archived from the original on September 18, 2012. பார்க்கப்பட்ட நாள் September 18, 2012.
- ↑ Lussier, Germain; Riefe, Jordan (September 29, 2013). "Scarlett Johansson Dishes on 'Top Chef' and Porn". Refinery29.com. Archived from the original on October 6, 2013. பார்க்கப்பட்ட நாள் February 12, 2013.
- ↑ Orange, B. Alan (July 25, 2013). "Sebastian Stan Talks Captain American: The Winter Soldier". MovieWeb இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 17, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6JhVHFZkP?url=http://www.movieweb.com/news/exclusive-sebastian-stan-talks-captain-america-the-winter-soldier.
- ↑ Beale, Lewis (September 12, 2012). "'Hurt Locker's Anthony Mackie in '10 Years'". Newsday. Archived from the original on September 18, 2012. பார்க்கப்பட்ட நாள் September 14, 2012.
- ↑ Wigler, Josh (September 17, 2012). "'Captain America' Actor Anthony Mackie Hasn't Seen His Falcon Costume Yet". MTV Splash Page. Archived from the original on September 20, 2012. பார்க்கப்பட்ட நாள் September 17, 2012.
- ↑ Vineyard, Jennifer (September 17, 2012). "Anthony Mackie Talks Captain America, Praises Channing Tatum's Butt". New York Vulture Blog. Archived from the original on September 19, 2012. பார்க்கப்பட்ட நாள் September 18, 2012.
- ↑ Couric, Katie (April 3, 2014). Cobie Smulders on New 'Captain America'. Katie (video). YouTube. Event occurs at 1:25. Archived from the original on June 1, 2014. பார்க்கப்பட்ட நாள் April 11, 2014.
- ↑ Graser, Marc (October 29, 2012). "Frank Grillo to play Crossbones in 'Captain America' sequel". Variety. Archived from the original on March 25, 2019. பார்க்கப்பட்ட நாள் October 29, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]