கொழும்பு

கொழும்பு
කොළඹ
Colombo
சீமா மாளிகையில் புத்தர் சிலைகள்
கோட்டை கிராண்ட் ஓரியென்டல் ஓட்டல்
காலிமுகத் திடல் (நடு), சங்கிரி-லா ஓட்டல், ஓன் கோல் பேசு (இடது), இந்தியப் பெருங்கடல் (வலம்)
கொழும்பு-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கொழும்பு
சின்னம்
கொழும்பு is located in Colombo District
கொழும்பு
கொழும்பு
கொழும்பு is located in இலங்கை
கொழும்பு
கொழும்பு
கொழும்பு is located in ஆசியா
கொழும்பு
கொழும்பு
ஆள்கூறுகள்: 6°56′04″N 79°50′34″E / 6.93444°N 79.84278°E / 6.93444; 79.84278
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
அரசு
 • மாநகர சபைகொழும்பு மாநகர சபை
 • தலைமையகம்நகர மண்டபம்
 • நகர முதல்வர்வெற்றிடம்
பரப்பளவு
 • தலைநகரம் (செயலாட்சி, நீதித்துறை)37.31 km2 (14.41 sq mi)
 • நிலம்699 km2 (270 sq mi)
 • மாநகரம்
3,684 km2 (1,422 sq mi)
ஏற்றம்
1 m (3 ft)
மக்கள்தொகை
 (2011[1])
 • தலைநகரம் (செயலாட்சி, நீதித்துறை)7,52,993
 • அடர்த்தி20,182/km2 (52,270/sq mi)
 • நகர்ப்புறம்
23,23,826
 • பெருநகர்
56,48,000
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே)
அஞ்சல்
0xxxx
இடக் குறியீடு011
இணையதளம்colombo.mc.gov.lk

கொழும்பு (Colombo, சிங்களம்: කොළඹ) என்பது இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும்,[2] மக்கள்தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமும் ஆகும். கொழும்பு மாநகரத்தின் மக்கள்தொகை 5.6 மில்லியன்.[3][4][5][6] நகராட்சியில் மக்கள்தொகை 752,993 ஆகும்.[1] கொழும்பு இலங்கைத் தீவின் நிதி மையமும், சுற்றுலா மையமும் ஆகும்.[7] கொழும்பு நகரம் தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது, அத்துடன் இலங்கையின் அரசமைப்புத் தலைநகரான சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, தெகிவளை-கல்கிசை ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய கொழும்புப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பின் புறநகராதலால், கொழும்பு பொதுவாக இலங்கையின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இது மேல் மாகாணத்தின் நிருவாகத் தலைநகரமும், கொழும்பு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[8]

1815 இல் இலங்கை பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, கொழும்பு தீவின் தலைநகராக மாற்றப்பட்டது,[9] 1948 இல் நாடு விடுதலை பெற்றபோது கொழும்பு இதன் தலைநகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1978-இல், அன்றைய அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பணிகள் சிறீ ஜெயவர்தனபுர கோட்டைக்கு மாற்றப்பட்டபோது, கொழும்பு இலங்கையின் வணிகத் தலைநகராக நியமிக்கப்பட்டது.

சொற்பிறப்பு

[தொகு]

கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள்.[10] கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும் [11] கிறித்தோபர் கொலம்பசு நினைவாகக் கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது [சான்று தேவை]. இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார். அவரின் போர்த்துகீசிய பெயர் கிறிஸ்டாவோ கொழும்பு. இவர் மேற்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைய திட்டமிட்டார். அச்சமயத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்த போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா இந்தியாவின் கிழக்குகரையில் உள்ள கோழிக்கோடு நகரை 1498 மே 20ல் அடைந்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பசு 1492 அக்டோபர் 12ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அச்சமயத்தில் போர்த்துகிசீயரான லொரன்சோ டி அல்மெய்டா காலி துறைமுகத்தை 1505ல் அடைந்தார்.[12] 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு துறைமுகம் அல்லது கோட்டை என்று பொருள் கூறுகிறது. அதனால் கொழம்ப என்பதே கொழும்புவுக்கான மூலமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[13][14]

வரலாறு

[தொகு]

கொழும்பு இயற்கையான ஓர் துறைமுகத்தைப் பெற்றிருப்பதால், 2000 வருடங்களுக்கு மேலாக இது கிரேக்கர், பாரசீகர், அராபியர் மற்றும் சீன வணிகர்களால் அறியப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு பணயம் செய்த இப்னு பதூதா இதனை "கலன்பு" எனக்குறிப்பிட்டார்.[15] வர்த்தகத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்ட பல்லின இசுலாமியர்கள், 8ம் நூற்றாண்டுகளில் கொழும்பில் தங்கி வாழத் தொடங்கினர். அவர்களின் வியாபாரத்திற்கும், சிங்கள இராசதானிகளுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் துறைமுகம் உதவியது. அவர்களின் சந்ததியர் தற்போது உள்ளூர் இலங்கைச் சோனகருடன் ஒன்றாகிவிட்டனர்.[9][16]

போத்துக்கேயர் காலம்

[தொகு]

லொரன்சோ டி அல்மெய்டா தலைமையிலான போத்துக்கேய நாடுகாண் பயணிகள் 1505இல் முதலாவதாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் கோட்டை அரசன் எட்டாம் பராக்கிரமபாகுவுடன் (1484–1508) கறுவாய் வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டமையால், கொழும்பு உட்பட்ட தீவின் கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வழியேற்பட்டது.

ஒல்லாந்தர் காலம்

[தொகு]

1638இல் ஒல்லாந்து கண்டியில் அரசாண்ட இரண்டாம் இராசசிங்க மன்னனுடன் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, போர்த்துக்கேயருக்கு எதிரான போரில் அரசனுக்கு உதவியும், இலங்கைத் தீவில் பாரிய வர்த்தக பொருட்களின் ஏகபோக உரிமையும் பரிமாறப்பட்டன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தரையும், கண்டியினரையும் எதிர்த்தபோதும், அவர்களின் பலமிக்க இடங்கள் மெதுவாக 1639 ஆரம்பத்தில் தேற்கடிக்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலம்

[தொகு]

1796இல் பிரித்தானியர் கொழும்பைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய படைகளின் புறக்காவலாகக் கண்டி இராட்சியம் கைப்பற்றும் 1815 இல் வரை காணப்பட்டது. ஆங்கிலேயர் கொழும்பை தங்கள் புதிதாக உருவாக்கிய பிரித்தானிய இலங்கையின் முடிக்குரிய மண்டல தலைநகராக்கினர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கொழும்பை முக்கிய படை அரணாகப் பாவித்ததுபோல் அல்லாமல், ஆங்கிலேயர் வீடுகளையும் மக்கள் கட்டுமானங்களையும் கோட்டையினைச் சுற்றிக் கட்டி, தற்போதைய கொழும்பு நகரை உருவாக்கினர்.[9]

புவியியல் மற்றும் காலநிலை

[தொகு]

கொழும்பின் புவியியல் நிலமும் நீரும் கலந்த ஒன்றாகும். நகரத்தில் பல கால்வாய்கள் காணப்படுகின்றன. நகரத்தின் இதயப்பகுதியில் 160 ஏக்கர் பரப்பில் உள்ள பெய்ரா ஏரி காணப்படுகின்றது.[17] இவ்வேரி கொழும்பு நகரை பாதுகாக்க குடியேற்றவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. நகரின் வடக்கு வடகிழக்கு எல்லையானது களனி ஆற்றினால் வரையறுக்கபடுகிnறது. கொழும்பு கோப்பென் வகைப்பாட்டு முறையில் வெப்பமண்டலத்துக்குரிய காலநிலையை பெற்றுள்ளது. ஆண்டு முழுதும் அதிக வெப்பமில்லா சீரான காலநிலையை பெற்றுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இதன் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசு அளவுக்கு இருக்கும் [18]. பருவக்காலமான மே-ஆகத்து வரையும் அக்டோபர்-சனவரி வரையும் அதிக மழைப்பொழிவை பெறும். ஆண்டு சராசரி மழையளவு 2,400 மிமீ ஆகும் [19].

தட்பவெப்ப நிலைத் தகவல், Colombo, Sri Lanka
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.2
(95.4)
35.6
(96.1)
36.0
(96.8)
35.2
(95.4)
32.8
(91)
33.5
(92.3)
32.2
(90)
32.2
(90)
32.2
(90)
33.6
(92.5)
34.0
(93.2)
34.2
(93.6)
36.0
(96.8)
உயர் சராசரி °C (°F) 30.9
(87.6)
31.2
(88.2)
31.7
(89.1)
31.8
(89.2)
31.1
(88)
30.4
(86.7)
30.0
(86)
30.0
(86)
30.2
(86.4)
30.0
(86)
30.1
(86.2)
30.3
(86.5)
30.64
(87.16)
தினசரி சராசரி °C (°F) 26.6
(79.9)
26.9
(80.4)
27.7
(81.9)
28.2
(82.8)
28.3
(82.9)
27.9
(82.2)
27.6
(81.7)
27.6
(81.7)
27.5
(81.5)
27.0
(80.6)
26.7
(80.1)
26.6
(79.9)
27.38
(81.29)
தாழ் சராசரி °C (°F) 22.3
(72.1)
22.6
(72.7)
23.7
(74.7)
24.6
(76.3)
25.5
(77.9)
25.5
(77.9)
25.2
(77.4)
25.1
(77.2)
24.8
(76.6)
24.0
(75.2)
23.2
(73.8)
22.8
(73)
24.11
(75.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.4
(61.5)
18.9
(66)
17.7
(63.9)
21.2
(70.2)
20.7
(69.3)
21.4
(70.5)
21.4
(70.5)
21.6
(70.9)
21.2
(70.2)
21.0
(69.8)
18.6
(65.5)
18.1
(64.6)
16.4
(61.5)
பொழிவு mm (inches) 58.2
(2.291)
72.7
(2.862)
128.0
(5.039)
245.6
(9.669)
392.4
(15.449)
184.9
(7.28)
121.9
(4.799)
119.5
(4.705)
245.4
(9.661)
365.4
(14.386)
414.4
(16.315)
175.3
(6.902)
2,523.7
(99.358)
ஈரப்பதம் 69 69 71 75 78 79 78 77 78 78 76 73 75
சராசரி பொழிவு நாட்கள் 5 5 9 14 16 16 12 11 15 17 15 10 145
சூரியஒளி நேரம் 248.0 248.6 275.9 234.0 201.5 195.0 201.5 201.5 189.0 201.5 210.0 217.0 2,623.5
Source #1: உலக வானிலையியல் அமைப்பு,[20] ஆங்காங் வான்காணகம்[21]
Source #2: NOAA[22]

மக்கள் தொகையியல்

[தொகு]

கொழும்பு பல்லின, பல கலாசார நகரம். கொழும்பின் சனத்தொகை சிங்களவர், தமிழர், இலங்கைச் சோனகர் போன்றோரைக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்துக்காரர், மலாயர், இந்திய வம்சாவழியினர் மற்றும் குறிப்பிட்டளவு வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் எனப் பல்வேறுபட்ட இனக் குழுக்களையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு சனத்தொகை கூடிய 642,163 மக்கள் வாழும் நகரமாகும்.[23] 1866 இல் கிட்டத்தட்ட 80,000 பேர் காணப்பட்டனர்.[24] 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.[23]

இல இனம் சனத்தொகை மொத்த %
1 சிங்களவர் 265,657 41.36
2 இலங்கைத் தமிழர் 185,672 28.91
3 இலங்கைச் சோனகர் 153,299 23.87
4 இலங்கையின் இந்தியத் தமிழர் 13,968 2.17
5 இலங்கை மலேயர் 11,149 1.73
6 பறங்கியர் 5,273 0.82
7 கொழும்புச் செட்டி 740 0.11
8 பரதர் 471 0.07
9 மற்றவர்கள் 5,934 0.96
10 மொத்தம் 642,163 100

அரசு

[தொகு]
புதிய பரோக் பாணியில் கட்டப்பட்டுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடம் தற்போது குடியரசுத் தலைவரின் செயலகமாக விளங்குகிறது.
கறுவாத் தோட்டத்திலுள்ள கொழும்பு நகர மன்றம்.

மாநகராட்சி

[தொகு]

கொழும்பு தனக்கெனத் தனி அரசியலமைப்புக் கொண்ட மாநகராட்சியாகும். மேயரும் மாநகர மன்ற உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சித் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஆட்சியிலிருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் இக்கட்சியின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு [25] இக்கட்சியின் சார்பு பெற்ற சுயேட்சைக் குழுவினர் தேர்தல்களில் வென்றனர்.[26] உவைசு மொகமது இமிதியசு கொழும்பின் மேயராக நியமிக்கப்பட்டார்.[27]

மாநகராட்சி கழிவுநீரகற்றல், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்குத் தொடர்புடைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் பல்வேறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

தேசியத் தலைநகரம்

[தொகு]

போர்த்துக்கேய, டச்சு, பிரித்தானியக் குடியேற்றப்பகுதிகளாக இருந்த கடலோரப் பகுதிகளின் தலைநகரமாக 1700 களிலிருந்து இருந்து வந்துள்ளது. 1815இல் பிரித்தானியர்கள் கண்டி உடன்பாட்டின்படி முழுமையானத் தீவிற்கும் தலைநகரமாக விளங்கியது. 1980 களில் நிருவாகத் தலைநகரை ஸ்ரீ ஜெயவர்தனபுரம் கோட்டைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. இதன்படி இலங்கைப் பாராளுமன்றமும் பல அமைச்சகங்களும் துறை அலுவலகங்களும் இப்பகுதியில் கட்டப்பட்ட புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் இன்றளவிலும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பிலேயே உள்ளன.[28]

வலயங்கள்

[தொகு]

கொழும்பு 15 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

அஞ்சல் வலயம் உள்ளடங்கிய பகுதிகள்
கொழும்பு 1 கோட்டை
கொழும்பு 2 கொம்பனித் தெரு மற்றும் ஒன்றிய இடம்
கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 பம்பலப்பிட்டி
கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம் மற்றும் கிருலப்பனை
கொழும்பு 6 வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை
கொழும்பு 7 கறுவாத் தோட்டம்
கொழும்பு 8 பொரல்லை
கொழும்பு 9 தெமட்டகொடை
கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 புறக்கோட்டை
கொழும்பு 12 புதுக்கடை மற்றும் வாழைத் தோட்டம்
கொழும்பு 13 கொட்டாஞ்சேனை மற்றும் புளூமெண்டால்
கொழும்பு 14 கிராண்டுபாஸ்
கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி மற்றும் மாதம்பிட்டி

பொருளாதாரம்

[தொகு]

பெரிய கூட்டுத்தாபனங்களின் தலைமையகங்கள் கொழும்பில் காணப்படுகின்றன. சில வேதியியல், ஆடைகள், கண்ணாடி, சீமெந்து, தோல் பொருட்கள், தளபாடம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் தொழிற்கூடங்கள் இங்கு காணப்படுகின்றன. தெற்காசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான உலக வர்த்தக மையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம் நகரத்தின் நரம்பு போன்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.

உட்கட்டமைப்பு

[தொகு]
உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்கள் மற்றும் வரலாற்றுப் புகழ் மிக்க கார்கீல்சு கட்டிடத்தின் தோற்றம்

கொழும்பு ஒரு நவீன நகரத்தின் பெரும்பாலான வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கொழும்பின் உட்கட்டமைப்பு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்து என்பன ஓரளவு நல்ல தரத்தில் உள்ளது. இலங்கையின் முக்கிய வணிக வளாகங்களில் பெரும்பாலானவை இங்கு உள்ளன. பல ஆடம்பரமான விடுதிகள், கூடலகங்கள் மற்றும் உணவகங்களும் இங்கு அமைந்துள்ளன. சமீப காலங்களில் நிலத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததன் காரணமாக அடுக்குமாடி வீடுகள் பல்கிப் பெருகி விட்டது.

கொழும்பு துறைமுகம்

[தொகு]
கொழும்பு துறையில் உள்ள கொள்கலன்கள்

இலங்கையின் பெரிய துறைமுகம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. குடியேற்ற காலத்தில் கொழும்பு துறைமுக நகரமாகவே அமைக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் கடற்படைத்தளம் இத்துறைமுகத்தில் உள்ளது. 2008ல் இத்துறைமுகம் 3.75 மில்லியன் எண்ணிக்கையுள்ள 20 அடி நீளமுள்ள கொள்கலன்களை கையாண்டது. இது 2007ல் கையாண்ட அளவை விட 10.6% அதிகமாகும். 3.75 மில்லியன் கொள்கலன்களில் 817,000 இலங்கையுடையதாகும், மற்றவை இங்கு வைத்துக் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டதாகும். கொள்கலன்களை கையாளும் திறனைத் துறைமுகம் முழுஅளவில் நெருங்கிவிட்டாதல் இடப்பற்றாக்குறையை சமாளிக்க துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.[29]

போக்குவரத்து

[தொகு]

கொழும்பில் பொது போக்குவரத்து நல்ல முறையில் உள்ளது. பேருந்துகளை அரசும் தனியாரும் நடத்துகின்றனர். மூன்று முதன்மையான பேருந்து முனையங்கள் பேட்டை பகுதியில் உள்ளன. பாசுடின் மாவத்த தொலைதூர பேருந்துகளுக்கானது. மத்திய, குணசிங்கபுரா முனையங்கள் உள்ளூர் பேருந்துக்களுக்கானது. மத்திய பேருந்து நிறுத்தம் பேருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது.

கொழும்பு தொடருந்து மூலம் நாட்டின் பல இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையம் தொடருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. 1970 வரை நகரில் டிராம் போக்குவரத்து இருந்தது. வாடகை மகிழுந்து, தானியங்கி மூவுருளி உந்து (மூன்று சக்கர வண்டி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) போன்றவையும் நகர போக்குவரத்துக்கு உதவுகின்றன. தானியங்கி மூவுருளி உந்து தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்றன, வாடகை மகிழுந்து தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

இரத்மலானை விமான நிலையம் அனைத்து உள்ளூர் விமான சேவைகளையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நகரிற்கு வழங்குகிறது.

சாலைகள்

[தொகு]

பேருந்து

[தொகு]

தொடருந்து

[தொகு]
  • பிரதான பாதை - கொழும்பிலிருந்து பதுளை வரை.
  • தெற்குப் பாதை - கொழும்பிலிருந்து மாத்தறை வரை.
  • வடக்குப் பாதை - கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையானது, இது பொல்காவல சந்தியில் பிரதான பாதை இருந்து விலகிச்செல்கிறது. தற்போது கொழும்பு - வவுனியா வரை மட்டுமே செயற்படுகிறது.
  • புத்தளம் பாதை - கொழும்பிலிருந்து புத்தளம் வரை.
  • களனிப் பள்ளத்தாக்குப் பாதை - கொழும்பிலிருந்து எட்டியாந்தோட்டை வரையானது, தற்போது அவிசாவெலை வரை மட்டுமே செயற்படுகிறது.
  • மன்னார் பாதை (முன்னதாக இலங்கை-இந்தியப்பாதை) - கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையானது, மதவாச்சிய சந்தியிலில் வடக்குப் பாதையிலிருந்து பிரிந்து செல்கிறது - செயற்பாட்டில் இல்லை.

படகுச் சேவைகள்

[தொகு]
  • ஓர் ஆடம்பரப் படகான ஸ்கோஷியா பிரின்ஸ், இந்தியாவின் தூத்துக்குடிக்கு ஒரு படகு சேவையை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான படகுச் சேவைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.[30]

கல்வி

[தொகு]

கொழும்பு கல்வி நிறுவனங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. கொழும்பில் பல பொதுப் பாடசாலைகளில் சில அரசாங்கத்திற்கும் சில தனியாருக்கும் சொந்தமானவை. இவற்றில் பல பிரித்தானிய ஆட்சிக்காலமான 1800களைச் சேர்ந்தவை.[31]

கட்டடக்கலை

[தொகு]

கொழும்பு நூற்றாண்டு கால மற்றும் பலதரப்பட்ட வடிவங்களையும் கொண்டு பல கட்டடக்கலைக் கொண்டு காணப்படுகின்றது. பல குடியேற்ற கால போத்துக்கேய, ஒல்லாந்து, பிரித்தானிய கட்டடங்களுடன் உள்நாட்டு பெளத்த, இந்து, இசுலாமிய, இந்திய மற்றும் தற்கால கட்டடக்கலைகள் கொண்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்பகுதியான "கோட்டை" பகுதியில் பலதரப்பட்ட கட்டடங்களைக் காணலாம். இங்கு புதிய வானளாவி மற்றும் 1700களில் கட்டப்பட்ட வரலாற்றுக் கட்டடங்களையும் காணலாம்.[32]

பண்பாடு

[தொகு]

வருடாந்த கலாசார நிகழ்வுகள்

[தொகு]

கொழும்பின் மிக முக்கிய பிரதான கொண்டாட்டம் புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் இறப்பு ஆகிய எல்லாம் ஒரேநாளில் நிகழும் சம்பவ தினமாகும்.[33] சிங்களத்தில் இது வெசாக் என அழைக்கப்படுகிறது.[33]

கிறித்தவம்

[தொகு]

கொழும்பு நகரில் உள்ள கிறித்தவ சபைகளுள் கத்தோலிக்க சபை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்குதான் இலங்கையின் ஒரே உயர்மறைமாவட்டமான கொழும்பு உயர்மறைமாவட்டம் அமைந்துள்ளது. அதன் கீழ் தனித்தனி ஆயர்களின் கண்காணிப்பில் உள்ள பிற மறைமாவட்டங்கள் பின்வருமாறு:

  • அனுராதபுரம்
  • பதுளை
  • யாழ்ப்பாணம்
  • மட்டக்களப்பு
  • மன்னார்
  • திருகோணமலை
  • இரத்தினபுரி
  • கண்டி
  • காலி
  • சிலாபம்
  • குருணாகல்

முதலில் இலங்கை முழுவதும் இந்தியாவின் கொச்சி மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1834, திசம்பர் 3ஆம் நாளில் இலங்கையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு தனி மறைமாவட்டத்தைத் திருத்தந்தை 16ஆம் கிரகோரி நிறுவினார். அம்மறைமாவட்டம் "சிலோன் மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், 1845, பெப்ருவரி 17ஆம் நாள் சிலோன் மறைமாவட்டம் "கொழும்பு மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது.

1886, செப்டம்பர் முதல் நாள் கொழும்பு மறைமாவட்டம் "உயர்மறைமாவட்டம்" (Archdiocese) என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு, பிரதேச முதன்மை மறைமாவட்டம் ஆயிற்று. அது திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது.

பின்னர், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கொழும்பு உயர்மறைமாவட்டம் என்னும் பெயரை 1944, திசம்பர் 6ஆம் நாள் "சிலோனின் கொழும்பு உயர்மறைமாவட்டம்" (Archdiocese of Colombo in Ceylon) என்று மாற்றினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஆறாம் பவுல் மீண்டும் பெயரை "கொழும்பு உயர்மறைமாவட்டம்" என்று மாற்றினார். அப்பெயரே இன்றுவரை நிலைத்துள்ளது.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) ஆவார். இவர் 2009இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2010, நவம்பர் 20ஆம் நாள் மால்கம் ரஞ்சித் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பரப்பளவு 3836 ச.கி.மீ (1482 ச.மைல்) ஆகும். அந்நிலப்பரப்பில் வாழ்கின்ற 5,760,148 மக்களுள் 652,200 பேர் கத்தோலிக்கர் (11.3%) என்று வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ஆண்டேடு (Annuario Pontificio) (2009) கூறுகிறது.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் கோவில் புனித லூசியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனுள் "இலங்கை அன்னை மரியா" (Basilica of Our Lady of Lanka) தேவத்தா பகுதியிலும் புனித அந்தோனியார் தேசிய திருத்தலம் கொச்சிக்கடையிலும் உள்ளன.

சகோதரி நகரங்கள்

[தொகு]
நாடு நகரம் மாநிலம்/மாகாணம் ஆண்டிலிருந்து
சீனா சீனா சாங்காய் சாங்காய் மாநகராட்சி 2003
உருசியா உருசியா சென் பீட்டர்ஸ்பேர்க் வடமேற்கு கூட்டாட்சி மாவட்டம் 1997
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் லீட்சு இங்கிலாந்து

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 1 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
  2. "Colombo". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 6 March 2023. பார்க்கப்பட்ட நாள் 12 May 2020.
  3. Kumarage A, Amal (1 November 2007). "Impacts of Transportation Infrastructure and Services on Urban Poverty and Land Development in Colombo, Sri Lanka" (PDF). Global Urban Development Volume 3 Issue 1. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
  4. "The 10 Traits of Globally Fluent Metro Areas" (PDF). 2013. Brookings Institution. Archived from the original (PDF) on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.
  5. "Colombo: The Heartbeat of Sri Lanka/ Metro Colombo Urban Development Project". The World Bank. 21 March 2013. Archived from the original on 12 April 2015. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.
  6. "Turning Sri Lanka's Urban Vision into Policy and Action" (PDF). UN Habitat. p. 7. Archived from the original (PDF) on 4 March 2016.
  7. "Colombo, The Famous Business Hub of Sri Lanka – Stories & Advice" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 20 December 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  8. Jayewarden. "How Colombo Derived its Name". Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2007-01-18.
  9. 9.0 9.1 9.2 "History of Colombo". Archived from the original on 2011-12-02. பார்க்கப்பட்ட நாள் 2007-03-21.
  10. "Colombo – then and now". Padma Edirisinghe (The Sunday Observer). 14 February 2004 இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930171524/http://www.sundayobserver.lk/2004/02/15/fea15.html. 
  11. World Executive Colombo Hotels and City Guide
  12. Moved பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம். Colonialvoyage.com. Retrieved on 2011-10-17.
  13. Indrapala 2007, ப. 70
  14. Gair 1998, ப. 5
  15. John, Still (1996). Index to the Mahawansa:Together with Chronological Table of Wars and Genealogical Trees. AES. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1203-7.
  16. Prof. Manawadu, Samitha. "Cultural Routes Of Sri Lanka As Extensions Of International Itineraries : Identification Of Their Impacts On Tangible & Intangible Heritage pp 3" (PDF). Archived from the original (PDF) on 2006-11-23. பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.
  17. The lake in the middle of Colombo பரணிடப்பட்டது 2007-10-19 at the வந்தவழி இயந்திரம், Lanka Library
  18. "Colombo weather". பார்க்கப்பட்ட நாள் 2006-12-02.
  19. Lowest temperature recorded was 15 degrees Celsius.Weatherbase
  20. "World Weather Information Service – Colombo". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் November 6, 2012.
  21. "Climatological Information for Colombo, Sri Lanka". Hong Kong Observatory. Archived from the original on சூன் 6, 2014. பார்க்கப்பட்ட நாள் November 6, 2012.
  22. "COLOMBO Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் November 6, 2012.
  23. 23.0 23.1 Department of Census and Statistics, Census 2001 பரணிடப்பட்டது 2007-06-10 at the வந்தவழி இயந்திரம், Additional source [1]. The totals are calculated through enumerations made from Colombo Divisional Secretariat and the Thimbirigasyaya Divisional Secretariat, which is also part of Colombo Municipal Council [தொடர்பிழந்த இணைப்பு]
  24. Port of Colombo. World Port Source. Retrieved on 2011-10-17.
  25. Colombo UNP list rejected, BBC News, February 16, 2006
  26. Independent group wins CMC, BBC News, May 21, 2006
  27. Rotational mayors as Colombo gets trishaw driver as her 1st citizen, Sunday Times, May 28, 2006
  28. The Supreme Court Of Sri Lanka பரணிடப்பட்டது 2011-11-18 at the வந்தவழி இயந்திரம், Justice Ministry
  29. Containerisation International, p.26, January 8, 2009
  30. Tuticorin-Colombo ferry sets sail – Times Of India. Timesofindia.indiatimes.com (2011-06-14). Retrieved on 2011-10-17.
  31. "Historical Overview of Education in Sri Lanka, The British Period: (1796–1948)". Archived from the original on 2011-04-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
  32. Tours, Red Dot. "Tintagel, Colombo - Sri Lanka Hotels - Red Dot Tours". www.reddottours.com.
  33. 33.0 33.1 Venerable Mahinda. "Significance of Vesak". www.buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 2007-02-19.

மேலதிக வாசிப்பு

[தொகு]

பின்வரும் ஆங்கில நூல்கள் கொழும்பு பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளன.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு&oldid=4049061" இலிருந்து மீள்விக்கப்பட்டது