க. சொக்கலிங்கம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார்.
கல்வியும் ஆசிரியர் அதிபர் பணியும்
[தொகு]சொக்கன் தமது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யாழ்ப்பணம் வண்ணார்பண்னை நாவலர் பாடசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் ஆசிரியப் பயிற்சியை பலாலி ஆசிரியகலாசாலையிலும் (1950-1951)பெற்றார் பின்னர் தமிழ் வித்துவான் பட்டத்தை(Diploma in Tamil-1953) பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கலைமாணிப் பட்டத்தை(1968-B.A)இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலைமாணிப் பட்டத்தை (1977-M.A)ஈழத்து தமிழ் நாடகவளர்ச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டும் பெற்றுக்கொண்டார். கலாநிதிப்பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கி இவரைக் கௌரவித்தது,
தமது 21 ஆவது வயதில் வதுளை உவாக்கல்லூரியில் உதவி ஆசிரியராக தமது பணியைத் தொடங்கிய இவர் 1963 -1973 ஆம் ஆண்டுகளில் யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்1973 சிலாபம் கத்தோலிக்க மகாவித்தியாலய அதிபராகப் பணியேற்ற சொக்கன் கோண்டாவில் இராமகிருஷ்ணாவில் கொத்தணி (கல்வி நிர்வாக சேவை) அதிபராகக் கடமையாற்றி 38 ஆண்டுகள் பணிக்குப் பின் 1990 ஆம் ஆண்டு ஒய்வைப் பெற்றுக்கொண்டார் . இடையில்1976- 1979 இல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் 1982 -1983-ஆம் -ஆண்டில் பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராயும் பணியாற்றிய சொக்கன் தனது பணி ஓய்வுக்குப் பின் யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை வருகை விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) 1992-1993 பணிசெய்தமை குறிப்பிடத்தக்கது
சிறுகதைகள்
[தொகு]225 மேற்பட்ட சிறுகதைகள் கடல்-15 கதைகளின் தொகுப்பு -1972 சொக்கன் சிறுகதைகள்- 10 கதைகளின் தொகுப்பு-2004 கணிசமான சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். (சொக்கன் 60 -பார்க்க)
நாவல்கள்
[தொகு]மலர்ப்பலி- ஈழகேசரி-1949-9.1 1949 முதல்27 .3. 49 வரை தொடராக வந்தது செல்லும் வழி இருட்டு (1959 இல் தினகரனில் வெளியானது பின் வீரகேசரிப் பிரசுரமாக!973ஆம் ஆண்டுவெளிவந்தது.) சீதா(1963)வீரகேசரி பிரசுரம்-1974 சலதி -1985 பக்திக்சந்த் -1985(மொழிபெயர்ப்பு நாவல்)
குறுநாவல் ஞானக்கவிஞன்- 1966 முகங்கள்-ஈழமுரசு -1986
நாடகங்கள்
[தொகு]சங்கிலியன் 1951 இரட்டை வேஷம் 1962 இலக்குமணன் சீற்றம் 1952 கவரி வீசிய காவலன் 1972 மண்ண்டோதரி ஈழமுரசு-5.2.84முதல் 5.8.1984 வரை தொடராக வந்தது
நாட்டிய நாடக எழுத்துரு கானல் வரி -1976 கர்ணன்1977 சீதாபஹரணம்1978
நூல்வடிவில் வெளிவந்த நாடகங்கள்
சிலம்பு பிறந்தது-1962 சிங்ககிரிக்காவலன்- -1963 ஞானக் கவிஞன்-1966 தெய்வப்பாவை-1968 நாவலர் நாவலரான கதை-1969 மாருதப்பிரவல்லி-1990 மானத்தமிழ் மறவன் -1993
கவிதை நூல்கள்
[தொகு]நெடும்பா 3 -1982 வீரத்தாய்-1972 நல்லூர் கந்தன் திருப்புகழ் 1989 நல்லூர் நான்மணி மாலை-1966 முன்னீச்சர வடிவழ்காம்பிகை அந்தாதி சைவப் பெரியாரின் சால்பை உரைத்திடுவோம் கவிதைக் கதம்பம் 1974
ஆய்வுநூல்
[தொகு]ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி -1979
ஆய்வுக் கட்டுரைகள்
[தொகு]பாரதி பாடிய பராசக்தி-1974 இருபெரு நெறிகள் நல்லைநகர் தந்த நாவலர் மறுமலர்ச்சி. காலமும் கருத்தும்-தினகரன் -27 .6.1980 தொடக்கம் 26.10 80 வரை தொடராகவந்தது இலக்கியக் கருவூலம் 2001
இலக்கண நூல்கள்
[தொகு]இலக்கணத் தெளிவு உரைநடைத்தெளிவு- ஓர் அறிமுகம்-1999 தொடரியங்கள்.
பாட நூல்கள்
[தொகு]மனோன்மணி-1958 கட்டுரைப் பூந்துனர் கட்டுரைக்கோவை இந்துசமயபாடம் தமிழ் இலக்கிய விளக்கம் இந்துநாகரிகம் பாகம் 1 ,2 ,3 திருக்குறள் உரை
பயண அனுபவநூல்
[தொகு]அக்கரைச்சீமையின் அனுபவங்கள் 2002
சிறுவருக்கான நூல்கள்
[தொகு]முயலாரின் சாகசங்கள் படிப்பதெப்படி
அறிஞர் பற்றிய நூல்கள்
[தொகு]பைந்தமிழ் வளர்த்த பதின்மர்-1972 தமிழ் பேரன்பர் வித்துவான் க. சேந்தனார்-1984 சேர்.பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்-1976 விபுலானந்தர் பக்தி அமுதம்-1984 இராபகதூர் சி.வை, தாமோதரம் பிள்ளை-தினகரன்.-28 .11.1982 தொடக்கம் 30 .1 .1983 வரை தொடராக வந்தது சைவம் வளர்த்த தையலர்-1977
தன் வரலாறு
[தொகு]பாலையும் சோலையும் -2002
வானொலிப் பங்கு
[தொகு]இலங்கை வானொலிக்கு நாடகங்கள், உரைச் சித்திரங்கள் பலவற்றை எழுதியதுடன் அதன் தமிழ் இந்துசமய நிகழ்ச்சியின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தார்
கழகங்களில் பொறுப்பு
[தொகு]யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர்1959 முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கிய உறுப்பினரில் ஒருவர் அகில இலங்கைத் திருமுறை மன்றத்தின் தலைவர்1989- 1994 இலங்கை கம்பன் கழகம்- இணைச் செயலாளர்-1963-1966 இலங்கைச் சேக்கிழார் மன்றம் செயலாளர் 1965-1974 முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் செயலாளர்1977 -1990 யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்- செயலாளர் 1990 -2002
பெற்ற பரிசில்கள்
[தொகு]கடைசி ஆசை -சிறுகதை.மின்னொலி சஞ்சிகை முதற்பரிசு -1946 பிரயாணம்.தினகரன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.1960 சிலம்பு பிறந்தது -முதற் பரிசு.இலங்கக் கலைக் கழகம்.1960 சிங்ககிரிக்காவலன் .முதற்பரிசு இலங்கக் கலைக் கழகம்.1961 தபாற்காரச் சாமியார்- வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு-1966 நெடும்பா 3 இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது -1986 மானத்தமிழ் மறவன் -இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது கடல்.-இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு-1972 சலதி- இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு-1987 ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி -இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு-1978
இவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்
[தொகு]தமிழ்மாமணி- ஆறுமுகநாவலர் சபை இலக்கியச் செம்மல்- இந்து கலாசார அமைப்பு சாகித்திய இரத்தினம்-இலங்கை அரசின் கலைக் கழகம்-2003 வடக்கு கிழக்கு மாகண கல்வியமைச்சு. -ஆளுனர் விருது நல்லூர் பாலகதிர்காம தேவஸ்தானம் .குகஸ்ரீ
புனைபெயர்கள்
[தொகு]சொக்கன்,ஆராவமுதன்,திரிபுராந்தகன்,சோனா,சுடலையூர் சுந்தரம்பிள்ளை,வேனிலான்,சட்டம்பியார், பேய்ச்சாத்தான்,திருஅள்ளுவர்,பரிமேலழகியார், கற்றுக்குட்டி,ஞானம்,சாம்பவன்,தேனி ,எதார்த்தன் பாலன், ஜனனி
உசாத்துணை நூல்கள்
[தொகு]- சொக்கன் 60 மணிவிழா மலர் -1990
- சொக்கனின் சிறுகதைகள்- 2004
- சொக்கன் -20 .02.2005 ரொரன்டோ -கனடா