சயனோசன் அசைடு

சயனோசன் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பனோநைட்ரிடிக் அசைடு
வேறு பெயர்கள்
சயனோ அசைடு
இனங்காட்டிகள்
764-05-6;
InChI
  • InChI=1S/CN4/c2-1-4-5-3
    Key: KWEDUNSJJZVRKR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136583
  • C(#N)N=[N+]=[N-]
பண்புகள்
CN4
வாய்ப்பாட்டு எடை 68.04 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சயனோசன் அசைடு (Cyanogen azide) என்பது CN4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை N3CN என்றும் எழுதுகிறார்கள். கார்பனும் நைட்ரசனும் சேர்ந்து எண்ணெய்ப் பசை கொண்ட சேர்மமாக உருவாகும் இந்த அசைடு மட்டுமே அறை வெப்பநிலையில் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. உயர் வெடிக்குந் தன்மை கொண்ட இச்சேர்மம் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. பொதுவாக நீர்த்த நிலையில் சயனோசன் அசைடு சேர்மத்தை கையாள்கிறார்கள் [1][2][3]. 1960 களின் முற்பகுதியில் டு பாண்ட்டு என்ற அமெரிக்க வெடிமருந்து நிறுவனத்தில் எப்.டி. மார்சு முதன் முதலில் இதைத் தயாரித்தார் [1][4]. நீர்த்த கரைசலைத் தவிர்த்து அடர்த்தியான நிலையில் இதைக் கையாள்வது மிகவும் அபாயகரமானதாகும். டையமினோடெட்ரசோல்கள் போன்ற வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் செயல்முறையில் இதை பயன்படுத்தும்போது வினைத் தளத்திலேயே இச்சேர்மம் உருவாக்கிக் கொள்ளப்படுகிறது [5][6][7][8][9][10]. சோடியம் அசைடுடன் சயனோசன் குளோரைடு [1] அல்லது சயனோசன் புரோமைடு [4] போன்ற சேர்மங்களில் ஒன்றை அசிட்டோநைட்ரைல் போன்ற ஒரு கரைப்பானில் கரைத்து அறைவெப்பநிலைக்கு குறைவான வெப்பநிலையில் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள். இத்தயாரிப்பு வினை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் உருவாகும் உடன் விளைபொருட்கள் சிறு அதிச்சியையும் உணர்ந்து வெடிக்குந்தன்மை கொண்டவையாகும் [4][9].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Marsh, F. D.; Hermes, M. E. (October 1964). "Cyanogen Azide". Journal of the American Chemical Society 86 (20): 4506–4507. doi:10.1021/ja01074a071. 
  2. Goldsmith, Derek (2001). "Cyanogen azide". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/047084289X.rc268/abstract. பார்த்த நாள்: 27 April 2017. 
  3. Houben-Weyl Methods of Organic Chemistry Vol. E 21e, 4th Edition Supplement: Stereoselective Synthesis: Bond Formation, C-N, C-O, C-P, C-S, C-Se, C-Si, C-Sn, C-Te. Thieme. 14 May 2014. p. 5414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-182284-0.
  4. 4.0 4.1 4.2 Marsh, F. D. (September 1972). "Cyanogen azide". The Journal of Organic Chemistry 37 (19): 2966–2969. doi:10.1021/jo00984a012. 
  5. Gordon W. Gribble; J. Joule (3 September 2009). Progress in Heterocyclic Chemistry. Elsevier. pp. 250–1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-096516-1.
  6. Science of Synthesis: Houben-Weyl Methods of Molecular Transformations Vol. 17: Six-Membered Hetarenes with Two Unlike or More than Two Heteroatoms and Fully Unsaturated Larger-Ring Heterocycles. Thieme. 14 May 2014. p. 2082. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-178081-2.
  7. Barry M. Trost (1991). Oxidation. Elsevier. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-040598-8.
  8. Lowe, Derek. "Things I Won't Work With: Cyanogen Azide". Science Translational Medicine. American Association for the Advancement of Science. Archived from the original on 2 July 2020. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  9. 9.0 9.1 Joo, Young-Hyuk; Twamley, Brendan; Garg, Sonali; Shreeve, Jean'ne M. (4 August 2008). "Energetic Nitrogen-Rich Derivatives of 1,5-Diaminotetrazole". Angewandte Chemie International Edition 47 (33): 6236–6239. doi:10.1002/anie.200801886. 
  10. Audran, Gérard; Adiche, Chiaa; Brémond, Paul; El Abed, Douniazad; Hamadouche, Mohammed; Siri, Didier; Santelli, Maurice (March 2017). "Cycloaddition of sulfonyl azides and cyanogen azide to enamines. Quantum-chemical calculations concerning the spontaneous rearrangement of the adduct into ring-contracted amidines". Tetrahedron Letters 58 (10): 945–948. doi:10.1016/j.tetlet.2017.01.081. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனோசன்_அசைடு&oldid=3553035" இலிருந்து மீள்விக்கப்பட்டது