சர்வதேச நிதி கூட்டுத்தாபனம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
IFC சின்னம் | |
உருவாக்கம் | 1956 |
---|---|
வகை | அபிவிருத்தி நிதி நிறுவனம் |
சட்ட நிலை | உடன்படிக்கை |
நோக்கம் | தனியார் துறை அபிவிருத்தி, வறுமை குறைப்பு |
தலைமையகம் | வாசிங்டன், டி. சி. |
உறுப்பினர்கள் | 184 நாடுகள் |
உப தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி | ஜின் யாங் Cai |
தாய் அமைப்பு | உலக வங்கிக் குழுமம் |
வலைத்தளம் | ifc.org |
சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (International Finance Corporation-IFC) வளர்ந்து வரும் நாடுகளில் துறை அபிவிருத்தியை ஊக்குவிக்க முதலீடு, ஆலோசனை மற்றும் சொத்து மேலாண்மை போன்ற சேவைகளை வழங்கிவரும் ஒரு பன்னாட்டு நிதிநிறுவனம். இது உலக வங்கிக் குழுமத்தின் ஒரு அங்கம் வகிக்கிறது. இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன், டி. சி இல் அமைந்துள்ளது. இது மேலதிக பொருளாதார அபிவிருத்திக்காக, உறுதியாக இலாபம் பெரும் நோக்கில் வறுமை குறைப்பு, அபிவிருத்தி மேம்பாடு போன்ற வணிக திட்டங்களில் முதலீடு செய்தலை அடிப்படையாக கொண்டு உலகவங்கிக் குழுவின் தனியார் துறைக் கையகமாக 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது [1][2][3]. இந் நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளானது, மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்காகவும் சிறந்த வாழ்க்கை தரத்தை அடைவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்குதல், தனியார்துறை நிதி ஆவணங்களைத் திரட்டுதல், சந்தைபடுத்தலில் போட்டி மற்றும் அணுகல் மேம்பாடு, வேறு தனியார் துறை நிறுவனங்களுக்கு வணிக ஆதரவு வழங்கல், வறுமைக்குள்ளான அல்லது பாதிக்கப்பட்டோருக்காக வேலை உருவாக்கம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்குதல் ஆகும்[4]. 2009 ஆம் ஆண்டிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காகக் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. இதன் குறிக்கோள்கள் விவசாய மேம்படுத்த வாய்ப்புகளை அதிகரித்தல், சுகாதாரம் மற்றும் கல்வியை அதிகரித்தல், வணிக வாடிக்கையாளர்களுக்கானப் பொருளுதவி மற்றும் நிதி அணுகலை அதிகரித்தல், உள்கட்டமைப்பு முன்னெடுப்பு, சிறு தொழில்களின் வருவாய் வளர உதவுதல் மற்றும் காலநிலை சுகாதாரத்துக்கான முதலீடு என்பனவாகும்[5].
ஐஎப்சி, அதன் உறுப்பு நாடுகளுக்குச் சொந்தமானதும் அந் நாடுகளின் அதிகாரத்துக்குட்பட்டதுமாகும். எனினும் தலைவர் மற்றும் அலுவலர் அடங்கிய ஒரு செயற்குழு மூலமாகச் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது பல நாடுகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு, மூலதனம் வழங்கல் மற்றும் வாக்குரிமை வழங்கலுக்கான ஒரு கூட்டுத்தாபனம் ஆகும். முதலில் பாரிய நிதி தேவைக்காக ஐ.எப்.சி தனியாக நிறுவப்பட்டு, உலக வங்கிக் குழுவில் ஒருங்கிணைந்தது. இறுதியில் தன்னாட்சி நிதி நிறுவன செயற்பாடுகளைச் செயல்படுத்த மற்றும் சுயாதீன முதலீட்டு முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்றது. இது வரிசைப்படுத்தப்பட்ட சில கடன் மற்றும் சமபங்கு நிதிச் சேவைகளை வழங்குகிறது. நிறுவனங்கள் தங்கள் முகாமைத்துவ பங்குக்கொள்ளலின் போது ஏற்படும் ஆபத்துத் தன்மையை எதிர்கொள்ளவும் உதவுகிறது. மேலும் முடிவெடுத்தல், சூழல் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை மதிப்பிடுதல், பொறுப்பாய் இருத்தல் போன்றவற்றில் நிறுவனங்களுக்கு இக் கூட்டுத்தாபனம் ஆலோசனை வழங்குகிறது. மேலும் தனியார் துறை வளர்ச்சிக்காக கட்டிட கட்டுமானம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடனான கூட்டமைப்புகளுக்கான அறிவுரைகளையும் அரசுகளுக்கு வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு சுயாதீனமான மதிப்பீட்டாளர் மூலம் மதிப்பிடப்படுகிறது. இது முதலீடுகளை நன்றாக பயன்படுத்தி வறுமையை குறைத்துள்ளதென அதன் 2011 ஆண்டிற்கான அதன் மதிப்பீட்டு அறிக்கைத் தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இத்தாபனத்தின் சிறந்த மூலோபாய திறன் மற்றும் வறுமை குறைப்பு அணுகுமுறை ஆகியவற்றை மேலும் தெளிவாக வரையறுத்துச் செயற்பட வேண்டுமென பரிந்துரைத்தது. 2011 ல் நிறுவனத்தின் மொத்த முதலீடு $ 18,66 பில்லியன் என்று இருந்தது. இது 2011 ல் 642 திட்டங்களுக்கு ஆலோசனை சேவைகள் வழங்க $ 820 மில்லியனும் $24.5 பெறுமதியான திரவ சொத்துக்களையும் கொண்டிருக்கிறது. இதன் நிதிநிலை நன்றாகவுள்ளது. 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் இரு கடன் மதிப்பீடு முகவர் நிறுவனங்களிடம் இருந்து உயர் சான்றளிப்பைப் பெற்றுள்ளது.
வரலாறு
[தொகு]இது 1944 ல் பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வடிவமைக்கப்பட்டது. புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியாக மட்டும் இருந்துவந்த உலக வங்கியானது 1946 ஆம் ஆண்டு செயற்படத் தொடங்கியது. ராபர்ட் எல் கார்னர் 1947 ஆம் ஆண்டு உலக வங்கியில் ஒரு மூத்த நிர்வாகியாக சேர்ந்தார். அவர் தனியார் வர்த்தக நிறுவனங்களும் சர்வதேச அபிவிருத்திக்கு முக்கிய பங்களிக்கமுடியுமென கருத்து தெரிவித்தார். 1950 ஆம் ஆண்டில், கார்னர் மற்றும் அவரது சக வங்கி பணியாளர்களினால் வளரும் நாடுகளில் தனியார் முதலீடுகள் உருவாக்கும் நோக்கத்திற்காக ஒரு புதிய நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டது. நிறுவனங்களின் மேலாண்மையில் தலையிடாமலும், அரசாங்கத்தில் இருந்து உத்தரவாதங்கள் இல்லாமலும், மூன்றாம் தரப்பு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடனும், உலக வங்கியுடன் இணைந்து தனியார் நிறுவனங்களில் முதலீட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்கில் சர்வதேச கூட்டுத்தாபனம் அமைவதை ஐக்கிய அமெரிக்க அரசு வரவேற்றது. 1955 இல், உலக வங்கி தலைவர் யூஜின் ஆர் பிளாக், இந் நிறுவனம் அரசாங்கங்களுக்கு கடன் அளிக்காது; தனியார் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும்; ஆனால் அவற்றின் திட்டங்களை நிர்வகிக்காது எனக் கூறினார்[6] . 1956 ஆம் ஆண்டில் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் கார்னர் தலைமையின் கீழ் ஆரம்பத்தில் 12 ஊழியர்களை கொண்டு $100 மில்லியன் (2012 ஆம் ஆண்டு 844,9 மில்லியன் டாலர்கள்). மூலதனத்துடன் செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது[7]). 1957 இல் அதன் தொடக்க முதலீடான $2 மில்லியனை (2012 $ 16.4 மில்லியன்) பிரேசிலைச் சேர்ந்த சீமென்ஸ் & ஹால்ஸ்கெயிடமிருந்து (இப்போது சீமன்ஸ் ஏஜி ) அங்கீகரிக்கப்பட்ட கடனாகப் பெற்றது. [2]
1965 ஆம் ஆண்டு, $ 600,000 மில்லியன் (2012 இல் $4.4 மில்லியன்[7]) முதலீட்டை இடாய்ச் வங்கி (Deutsche Bank) மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றது. 1970 களின் தொடக்கத்தில், பங்கு சந்தைகள், வங்கிகள் மற்றும் வளரும்நாடுகளில் உள்ள பிற நிதி அபிவிருத்தியிலும் செயற்படுவதற்காகத் தன் சொந்த முதலீட்டு சந்தைத் துறையை அமைத்துக்கொண்டது. முதலாவதாக இந்தோனேசியாவுக்கு ஆலோசனைச் சேவைகளை வழங்கியது. அதன்பிறகு, இந் நிறுவனம் அதன் ஆலோசனை சேவைகளை முறைப்படுத்தியது. இந்த ஆண்டிலிருந்து 1977 வரை தொடர்ந்து அதன் உறுப்பு நாடுகளில் தனது அலுவலகங்களை உருவாக்குவதன் மூலம் அதன் நடவடிக்கைகளை பரவலாக்கியது. அதனால் 2008 ஆம் ஆண்டு, அதன் ஊழியர்களில் அரைப்பங்கினர் மட்டுமே வாஷிங்டன், டிசியிலுள்ள தலைமையகத்தில் இருந்து செயல்பட்டனர்[2].
1984 ஆம் ஆண்டில், நிதி தன்னாட்சிப் பெற்று சர்வதேசப் பங்குச் சந்தைகளில் தன் சொந்தப் பங்குப் பத்திரங்களை வெளியிடும் உரிமம் பெற்றது. அதனால் நிதியுதவிக்கு உலக வங்கியைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இந் நிறுவனத்திற்கு இல்லை. தனியார் வளர்ச்சி வேலைதிட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக நிறுவனத்தின் பங்குதாரர்கள் $ 1.2 பில்லியன் (2012 இல் $2.7 பில்லியன்[7]) முதலீட்டு அதிகரிப்புக்கு ஒப்புதல் கொண்டனர். 1994 ஆம் ஆண்டு முதல் 1966 வரை, சுமார் $ 7.4 (2012 இல் 11.5 பில்லியன் டாலர்கள்) பில்லியன் அமெரிக்க டாலர்கள் மின்சாரதுறை சார்ந்த 34 திட்டங்களில் நிதியாள்கை செய்து தனியார் ஆற்றல் திட்டங்களில் அதிகப்படியான முதலீடு செய்தது. 26 உறுப்புநாடுகளைச் சேர்ந்த 88 உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக $ 15 பில்லியன் (2012 இல் $ 23.2 பில்லியன் டாலர்) மொத்த செலவு). அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்தது. 1966 ஆம் ஆண்டு ஒரு ஆற்றல் திட்டத்திலும், 1981 ஆம் ஆண்டு மற்றொரு ஆற்றல் திட்டத்திலும் மட்டுமே முதலீடு செய்திருந்தது. ஆனால் 1988 க்கும் 1994 க்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் அது 32 ஆற்றல் திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்தது[8].
முதலீட்டு நடவடிக்கைகளின் நீட்டிப்புத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 1998 ல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிலைப்பாட்டினை வகுத்தது. 2001 ஆம் ஆண்டில், அதற்கான முதலீட்டு முயற்சிகளைத் தொடங்கியது[2]. அதன் நிதியுதவித் திட்டங்ககளின் பேண்தகைமை பற்றி விமர்சனங்கள் எழுந்தன. 2007 இல் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சியாரா கிளப் மற்றும் வங்கியின் தனிப்பட்ட மதிப்பீட்டு குழுவின் எதிரான ஆலோசனை ஆகிய எதிர்ப்புகளையும் மீறி, அமேசன் காட்டு பகுதியில், பிரேசிலின் மிக பெரிய மாட்டிறைச்சி தயாரிப்பாளர் பெர்ட்டினின் இறைச்சி கூடத்தின் வசதி மேம்பாட்டுக்கு $ 90 மில்லியன் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது. ஆறு மாதங்களுக்கு பின்னர் 2008, ஜூன் மாத அளவில், பெர்ட்டினின் செயற்பாட்டின் பேண்தகைமைத் தரத்தில் அதிருப்தி கொண்ட ஐஎப்சியும் உலக வங்கியும் தங்களது கடன் முதலீட்டுத் திட்டத்தை விலக்கிக் கொண்டன.[9][10]
மழைக்காடுகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகள் நிறைந்த இந்தோனிசிய நாட்டிற்குப் பனை எண்ணை (palm oil) உற்பத்திக்காக அளிக்கப்பட்ட $200 மில்லியன் அளவிலான கடனுதவி ஒப்புதலில், ஐஎப்சியின் சுற்றுச் சூழல் மற்றும் சமுதாயத் தரம் பேணப்படவில்லையென 2009 இல் முறைகேள் அதிகாரி (Ombudsman) அலுவலகத்தால் நடத்தப்பட்ட தணிக்கையறிக்கைத் தெரிவித்தது[11]
2010 இல் மொசாம்பிக்கில் அலுமினியம் உருக்கும் திட்டமொன்றுக்கு ஐஎப்சியால் அளிக்கப்பட்ட கடனுதவியை எதிர்த்து இணங்கல் ஆலோசகர் / முறைகேள் அதிகாரி அலுவலகத்தில் ஐஎப்சிக்கெதிராகத் தொண்டு நிறுவனங்கள் முறையீடு செய்தன. அலுமினியமுருக்கும் திட்டத்தால் மாசுபடும் சுற்றுச்சூழலால் அவ்விடத்தில் வசிக்கும் மக்களின் நலனைப் பாதிக்கப்படுமென்ற குற்றச்சாட்டினைத் தொண்டுநிறுவனங்கள் முன்வைத்தன[12].
வங்கியின் சுதந்திர மதிப்பீட்டு குழு மூலம் ஆண்டுதோறும் ஐஎப்சி மதிப்பீடு செய்யப்படுகிறது. 2011 இல் "வறுமை கண்ணோட்டம் மற்றும் முடிவுகள் மதிப்பிடுகை" என்ற தலைப்பில் ஒருமதிப்பீட்டு அறிக்கையை இக்குழு வெளியிட்டது. உள்ளார்த்தமாக வளர்ச்சி முறைகளை வலியுறுத்தும் ஐஎப்சியின் திட்டங்கள் நல்ல முறையில் நடைபெற்றுள்ளன; அதன் விளைவாக வறுமையினளவு குறைக்கப்பட்டுள்ளது; ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கான செயற்திட்டங்களில் வறுமைநிலை குறித்த தாக்கங்களைப் பற்றிக் கவனங்கொள்ளப்படவில்லையென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மதிப்பீடு குழுவால் வறியவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வாய்ப்புகளை அடையாளங்காண முடியாததால், வறுமையையும் வறுமைக் குறைப்பின் தாக்கங்களையும் தெளிவாக வரையறை செய்து வறுமைக் குறைப்பிற்காக மேம்பட்ட அணுகுமுறையை கடைபிடிக்கவும், வறுமைக் குறைப்பு முயற்சிகளில் புரிதல், அளவிடல், அறிக்கை குறித்து வெளியாருடனான கலந்தாய்வுக்காக ஒரு கட்டமைமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இக்குழு பரிந்துரைத்தது.[13]
2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி
[தொகு]2008 ஆண்டின் நிதி நெருக்கடிக்குப் பின்னர் வளரும் நாடுகள் நிதி நிலைமையைச் சமாளிக்க இத் தாபனம் உதவியது. அதற்காக $16.2 பில்லியன் ஒதுக்குத் தொகைக் கடனை (line of credit) சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கியது (இத் தொகை 2007 ஆண்டை விட 34% அதிகம்). $ 200 மில்லியன் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலதன அதிகரிப்பைச் செய்து அதில் $ 130 மில்லியனை வளரும் நாடுகளின் பிரநிதித்துவத்தை மொத்த 39.48% 6.07% அதிகரிக்கச் செய்த புதுப் பங்குகளாக வழங்கியது.[1][2]
நிர்வாகம்
[தொகு]இத்தாபனம் உறுப்பினர் நாட்டிலிருந்து தலா ஒரு உறுப்பினரை (பெரும்பாலும் நாட்டின் நிதி மந்திரி அல்லது திறைசேரி செயலாளர்) ஆளுநராகக் கொண்ட ஆளுனர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது[1]. ஒவ்வொரு உறுப்புநாடும் பொதுவாக ஒரு ஆளுனர் மற்றும் இன்னும் ஒரு மாற்று நபரையும் நியமனம் செய்கிறது[14]. நிறுவனத்தின் அதிகாரம் அதன் ஆளுநர் குழுவிடம் இருந்தாலும் கடன் மற்றும் வணிக முதலீடு செய்யும் அன்றாடச் செயற்பாடுகளின் அதிகாரமானது இயக்குநர் குழுவிடம் தரப்படுகிறது. 25 செயலாட்சி இயக்குநர்கள் கொண்டுள்ள இயக்குநர் குழு, நிறுவனத்தின் தலைமையகத்தில் செயல்படுகிறது. உலக வங்கிக் குழுமத்தின் தலைவரே இக்குழுவின் தலைவராவார்.[15][16] அனைத்து 184 உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இயக்குநர்கள் உள்ளனர். வாக்கெடுப்பின் போது அந்தந்த உறுப்புநாடுகளின் பங்கு முதலீட்டைப் பொறுத்து அந்த நாட்டின் இயக்குநரின் வாக்கு மதிப்பிடப்படுகிறது. [15]
செயலாட்சித் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாபனத்தின் தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்கின்றார்[1]. உலக வங்கி குழு தலைவர் ஜிம் யோங் கிம், ஜின் யாங் காய் -ஐ புதிய செயலாட்சித் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்ததையடுத்து அக்டோபர், 2012 இல், ஜின் யாங் காய் அப்பதவியேற்றார். கோல்ட்மேன் சாக்சில் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்த காய், நிதித் துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர். இவர் ஒரு சீனக் குடிமகன் ஆவார்.[17][18]
உலக வங்கி குழுவின் மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பல திட்டங்களில் செயற்பட்டாலும் தன்னாட்சி பெற்ற தாபனமாததால் அதற்கென்று வகுக்கப்பட்ட உடன்பாட்டு விதிகளுக்குட்பட்டு தனித்தே செயல்படுகிறது[15] . 3,400 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்குகிறது. அதில் பாதி ஊழியர்கள் அதன் உறுப்பு நாடுகளுகளிலுள்ள அலுவலகங்களில் பணிபுரிகின்றனர்.[1]
உறுப்பினர்கள்
[தொகு]ஐஎஃப்சி, அதன் 184 உறுப்புநாடுகளுக்குச் சொந்தமானது. இந்த உறுப்புநாடுகள் தாபனத்திற்குத் தேவையான மூலதனத்தை அளிக்கின்றன; கொள்கை வகுக்கும் விஷயங்களில் வாக்களிக்கின்றன; மேலும் தாபனத்தின் முதலீட்டுச் செயற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கின்றன. ஒவ்வொரு உறுப்புநாடும் தாபனத்தின் பங்குதாரர் ஆகும். ஒரு உறுப்புநாடு கொண்டிருக்கும் பங்குகளின் சதவீதம் அந்நாடு ஐஎப்சியின் மூலதனத்திற்கு அளித்திருக்கும் தொகையைப் பொறுத்தமையும்.
2011 ஆண்டு நிலவரப்படி, ஐக்கிய அமெரிக்கா 24% பங்குகள் கொண்ட மிக பெரிய ஒற்றை பங்குதாரராகவும், ஜப்பான் 6% பங்குகளும், ஜெர்மனி, பிரான்சு, மற்றும் ஐக்கிய இராச்சியம் 5% பங்குகளும் கொண்டுள்ளன[1]. தாபனத்தின் பங்கு மூலதனம் ஜூன் 30, 2011 ஆம் ஆண்டளவில் சுமார் 2.4 பில்லியன் டாலர்களாகும்; இதில் 51% பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஏழு பெரிய உறுப்புஅரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது[1][15]. உலக வங்கி உறுப்பினர்கள் மட்டுமே (குறிப்பாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி உறுப்பினர்களுக்கு) ஐஎப்சியில் உறுப்பினர் ஆக முடியும்[1][14][19].
சேவைகள்
[தொகு]முதலீட்டு சேவைகள்
[தொகு]IFC அபிவிருத்தி இலக்குகளுக்கான மூலதனத்தை திரட்ட ஆட்சிக்குழுவுக்கான கடன் திட்ட முயற்சியை செயற்படுத்துகிறது. திட்டம் 1957 ல் உருவாக்கப்பட்டது மற்றும் 2011 ஆண்டளவில் 550 நிதி நிறுவனங்கள் சுமார் $ 38 பில்லியன் டொலர்களை 100 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நோக்கி வெவ்வேறு சந்தைகளில் செயற்படுத்தி வருகிறது. 2011 இல் $ 4.7 பில்லியன் மொத்த ஆட்சிக்குழு கடன்களை கொண்டிருந்தது இது IFC 2010 ல் ஆட்சி குழு கடன் $ 2 பில்லியன் மதிப்பு இரு மடங்கு ஆகும்.வங்கிகளில் வளர்ந்து வரும் சந்தைககளுக்கான கடன் ,எல்லைகளை கடந்து இருப்பதன் காரணமாக, 2009 ல் IFC சர்வதேசநிதி நிறுவனங்கள் மற்றும் மற்ற பங்கேற்பாளர்களுகு இணையாக கடன்களுக்கான ஆட்சிக்குழுவை தொடங்கியது. சேவை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் நிதி வழங்க தயாராக இல்லாமல்,பகுதி கடன் உத்தரவாதங்கள், போர்ட்ஃபோலியோ ஆபத்து இடமாற்றங்கள்,மற்றும் இஸ்லாமிய நிதி போன்ற கட்டமைக்கப்பட்ட அல்லது பாதுகாப்பான நிதி உற்பத்திகளில் நம்பிக்கை வெளியிட்டது.
IFC ,2010 ல் கட்டமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான நிதியாக $ 797 மில்லியனை உறுதிபடுத்தியது. அதிகரித்த கடன் ஆபத்துகளினால் நிறுவனங்கள் நிதி பெறுவதற்கு சிரமம் எதிர்கொள்கின்றன.நிறுவனங்கள் கடன் அதிகரிப்பு முயற்சியாக அடமானம் , கடன் அட்டைகள் , கடன்கள், பெருநிறுவன கடன் வாசித்தல், மற்றும் வருவாய் பிரிவு போன்ற கணிக்கப்பட்ட பண பரிமாற்றங்களுடன் சொத்துக்களை பாதுகாக்கின்றன,
IFC வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் வட்டி விகித இடர்,மாற்று விகித ஆபத்து , மற்றும் பொருளுற்பத்தி இடர் என்பவற்றை கண்டிப்பாக தடுக்க நிதி வழிதோன்றல் உற்பத்திகளை கிடைக்க செய்கிறது. இது சந்தையில் தயாரிப்பாளர்களின் இடர் முகாமைத்துவ உத்திகளின் அணுகலை அதிகரிக்க,வளர்ந்து வரும் சந்தை வணிகம் மற்றும் சர்வதேச பங்குகள் இடையே தரகராக பணியாற்றி வருகிறது. ஒரு பூரண பங்கு வகிக்கும் முகமாக ,IFC கடன் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க சர்வதேச மூலதன கடன் பெறுகிறது. இது வழக்கமாக வளர்ந்து வரும் சந்தைகளில் சந்தைகளின் உள்ளூர் நாணய மாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பத்திரங்களை வெளியிட அல்லது பரிமாற்றங்கள் செய்யக்கூடிய முதல் நிறுவனங்களில் ஒன்றாகும்.IFC புதிய சர்வதேச கடன் 2010 இல் $8.8 பில்லியன் மற்றும் 2011 இல் $9.8 பில்லியனுமாக இருந்தது. இடர்பாடுகளை நிர்வகிக்கும் போது IFC பொருளாதார ரீதியாக தீவிரமாக பணப்புழக்க நிர்வாகத்தின் ஒரு முயற்சியாகவருமானத்தை அதிகரிக்க மற்றும் அதன் முதலீடுட்டு நிதியை எளிதாக கிடைக்கும் வகையில், உறுதி செய்துள்ளது.
ஆலோசனை சேவைகள்
[தொகு]மேலும் அதன் முதலீட்டு நடவடிக்கைகள் IFC பெருநிறுவன வணிக தொடர்பான வழியின்றி, சூழல், சமூக தாக்கம், மற்றும் பேண்தகைமை ஆதரவு ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. IFC பெருநிறுவன ஆலோசனை ஆட்சி, நிர்வாக திறன், அளவிடுதல் மற்றும் நிறுவன பொறுப்பை குறிவைக்கிறது.பொருத்தமான முதலீட்டு சூழலை வளர்ப்பதற்கு நாடுகளில் ஆலோசனை முயற்சி செய்து வர்த்தக நேசம் மற்றும் எளிதாக மேம்படுத்தல் சீர்திருத்தங்கள் ஊக்கபடுத்தலை முன்னுரிமையாக கொண்டுள்ளது. இது உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொது தனியார் கூட்டு மீது அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்குகிறது. IFC குறிப்பாக நல்லாட்சியுடன் வணிகங்கள் நோக்கி நிலையான நடைமுறைகளில் வழிகாட்ட, வணிகத்தில் பெண்களுக்கு ஆதரவு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து முன்னெச்சரிக்கையாக செயற்பட முயற்சிக்கிறது.
சொத்து மேலாண்மை நிறுவனம்
[தொகு]2009 ல் முற்றிலும் சொந்தமான, அனைத்து மூலதன சந்தைகளில் முதலீடு நிதியை நிர்வகிக்க ,துணையாக IFC சொத்து மேலாண்மை நிறுவனத்தை LLC (IFC AMC) நிறுவியது. MC மூலதனம் திரட்ட IFC போன்றே மூன்றாம் தரப்பினருக்கான இறைமை அல்லது ஓய்வூதிய நிதி , மற்றும் பிற வளர்ச்சி நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கிறது. IFC க்கு சொந்தமான போதிலும், AMC முதலீட்டு முடிவுகளை சுயேட்சையாக நம்பிக்கைக்கு பாத்திரமாகும் வகையில் பொறுப்புணர்வுடன் எடுக்க அதன் நிர்வாகத்தின் கீழ் நான்கு தனிப்பட்ட நிதி முகாமைதுவங்களை மேற்கொள்கிறது. மேலும் சில வகையான மேலதிக முதலீடுகள் திரட்ட திட்டமிடுகின்றன.அதேபோல் IFC யினால் செய்ய முடியாத சில முதலீடுகளை இவற்றால் செய்ய முடிகின்றன. 2011 இல் AMC , IFC மூலதன நிதியத்தின் (வருமான முதலீடு) நிதி ,எல்பி,IFC மூலதன நிதி (துணை கடன்) , எல்பி, IFC ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நிதி , எல்பி, மற்றும் ஆப்பிரிக்கா முதலீட்டு நிதி என்பவற்றை முகாமைத்துவம் செய்கிறது. IFC மூலதன நிதியம் ( அடிபணிய கடன்) 1.7 பில்லியன் டாலர்களை மதிப்பிடப்படுகிற போது. IFC மூலதன நிதியம் (பங்கு), $ 1.3 பில்லியன் பங்குகளை கொண்டிருந்தது, IFC ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நிதியம்(IFC ALAC நிதியம் என குறிப்பிடப்படுகிறது), 2010 இல் உருவாக்கப்பட்டது , அதன் மதிப்பு $ 1 பில்லியன்கள் ஆகும். மார்ச் 2012 வரை , ALAC நிதியம் பன்னிரண்டு தொழில்கள் ஊடாக $ 349.1 மில்லியன் மொத்த முதலீடு செய்துள்ளது. 2011 ல் ஆப்பிரிக்கா மூலதன நிதி வடக்கு மற்றும் துணை சகாரா ஆப்பிரிக்கா இரண்டிலும் உள்ள வணிக வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது ,இதன் நிதி மார்ச் 2012 ல் $ 181.8 மில்லியன் ஆனது. 2012 இல் AMC யின் தலைமை நிர்வாக அதிகாரியாக , கெவின் இ.ஆர் வில்சன் பொறுப்பேற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Ottenhoff, Jenny (2011). International Finance Corporation (Report). Center for Global Development. Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2012-06-05.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 International Finance Corporation. "IFC History". World Bank Group. Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
- ↑ Madura, Jeff (2007). International Financial Management: Abridged 8th Edition. Mason, OH: Thomson South-Western. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-324-36563-2.
- ↑ International Finance Corporation. "IFC's Vision, Values, & Purpose". World Bank Group. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
- ↑ International Finance Corporation (2012). IFC Development Goals (PDF) (Report). World Bank Group. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
- ↑ Jacks, Allen (1955-09-17). "World Bank Head Sees IFC Start in Early '56". The Washington Post. p. 17.
- ↑ 7.0 7.1 7.2 "CPI Inflation Calculator". U.S. Bureau of Labor Statistics. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
- ↑ Bond, Gary; Carter, Laurence (1995). "Financing energy projects: Experience of the International Finance Corporation". Energy Policy 23 (11): 967–975. doi:10.1016/0301-4215(95)00099-2. http://www.sciencedirect.com/science/article/pii/0301421595000992. பார்த்த நாள்: 2012-08-02.
- ↑ "World Bank pledges to save trees... then helps cut down Amazon forest". The Independent. 2008-01-13. http://www.independent.co.uk/environment/climate-change/world-bank-pledges-to-save-trees-then-helps-cut-down-amazon-forest-769997.html. பார்த்த நாள்: 2012-06-12.
- ↑ "The World Bank and the environment: When the learning curve is long". The Economist. 2009-06-25. http://www.economist.com/node/13927126. பார்த்த நாள்: 2012-06-12.
- ↑ "How the World Bank Let 'Deal Making' Torch the Rainforests". The New York Times. 2009-08-19. http://www.nytimes.com/cwire/2009/08/19/19climatewire-how-the-world-bank-let-deal-making-torch-the-33255.html. பார்த்த நாள்: 2012-06-12.
- ↑ "CAO Cases: Mozambique / Mozal-01/Matola and Maputo". Office of the Compliance Advisor/Ombudsman. 2010. Archived from the original on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2012-06-12.
- ↑ Independent Evaluation Group (2011). Assessing IFC's Poverty Focus and Results (PDF) (Report). World Bank Group. Archived from the original (PDF) on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
- ↑ 14.0 14.1 International Finance Corporation (2010). IFC Annual Report 2010: Where Innovation Meets Impact (Report). World Bank Group. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
- ↑ 15.0 15.1 15.2 15.3 International Finance Corporation (2011). IFC Annual Report 2011: I Am Opportunity (Report). World Bank Group. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
- ↑ International Finance Corporation (2012). IFC Organizational Structure (PDF) (Report). World Bank Group. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
- ↑ "UPDATE 1-World Bank taps Jin-Yong Cai to head private sector lender". Reuters. 2012-08-10 இம் மூலத்தில் இருந்து 2012-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120814122911/http://in.reuters.com/article/2012/08/10/worldbank-ifc-idINL2E8JA8MP20120810. பார்த்த நாள்: 2012-08-12.
- ↑ "Chinese national to head World Bank arm". The Indian Express. 2012-08-12. http://www.indianexpress.com/news/chinese-national-to-head-world-bank-arm/987172/. பார்த்த நாள்: 2012-08-12.
- ↑ "International Finance Corporation: Structure". Bank Information Center. Archived from the original on 2011-11-05. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.