சிக்கல் சிங்காரவேலர் கோவில்
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சிக்கல் சிங்காரவேலவர் கோயில் |
தமிழ்: | சிக்கல் சிங்காரவேலவர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
அமைவு: | சிக்கல் |
ஆள்கூறுகள்: | 10°45′24″N 79°47′55″E / 10.7567°N 79.7987°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிங்காரவேலன் (முருகன்) |
சிறப்பு திருவிழாக்கள்: | சூரசம்ஹாரம், கந்த சஷ்டி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்திய புராதானக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | இரண்டு 1. (நவநீதீஸ்வரர் & முருகன்) 2. விஷ்ணு |
வரலாறு | |
அமைத்தவர்: | கோச் செங்கட் சோழ நாயனார் |
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் (Sikkal Singara Velar Temple) என்பது தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ. கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. மேற்கேயும் அமைந்துள்ளது.[1] கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்பு
[தொகு]சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.[2]
கோவில் வளாகம்
[தொகு]முற்காலத்தில் இது மல்லிகை வனமாக இருந்ததால் காமதேனு குடி கொண்டிருந்ததாக ஐதீகம். புலால் உண்டதால் சிவனால் காமதேனு சபிக்கப்பட்டார். தன் தவற்றை உணர்ந்து இங்குள்ள பாற்குளத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டதால் சாபவிமோசனம் அடைந்ததாக வரலாறு உண்டு.[3]
விழாக்கள்
[தொகு]- சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகக்கடவுள் தன் தாயாரிடம் பெற்ற வேல் கொண்டு சூரபத்மனை வதைத்த நாளை சூரசம்ஹாரமாக கொண்டாடுகின்றனர்.
- கந்த சஷ்டி
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Sikkal temple description".
- ↑ சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்!
- ↑ https://en.wikipedia.org/wiki/Sikkal_Singaravelan_Temple
வெளி இணைப்புகள்
[தொகு]- வேங்கடம் முதல் குமரி வரை 3/சிக்கல் சிங்கார வேலவர்
- Excellent article on the temple in "The Hindu" பரணிடப்பட்டது 2006-12-13 at the வந்தவழி இயந்திரம்
- http://nagapattinam.nic.in/sikkal.html பரணிடப்பட்டது 2007-01-26 at the வந்தவழி இயந்திரம்
- http://www.hindubooks.org/temples/tamilnadu/sikkal/index.htm பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம்
- http://www.indiantemples.com/Tamilnadu/m029.html
- http://www.murugan.org/temples/sikkal.htm
- Tamilnadu tourism page