சிங்களம்
சிங்களம் | |
---|---|
සිංහල sinhala | |
பிராந்தியம் | இலங்கை |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 16 million (2007)[1] 2 million second language (1997) |
Indo-European
| |
ஆரம்ப வடிவம் | எலு மொழி
|
பேச்சு வழக்கு | வேடுவ மொழி (perhaps a creole) |
சிங்கள எழுத்துமுறை Sinhalese Braille (பாரதி புடையெழுத்து) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இலங்கை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | si |
ISO 639-2 | sin |
ISO 639-3 | sin |
மொழிக் குறிப்பு | sinh1246[2] |
Linguasphere | 59-ABB-a |
சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
சிங்கள எழுத்துக்கள், கிமு 2ம் - கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சிங்கள பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.[3]
சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும், ரொடி குலத்தவராலும், இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
வரலாறு
கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது.[சான்று தேவை] அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது.
காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி
- சிங்கள பிரகிரித் (கி.பி 3ம் நூற்றாண்டு வரை)
- பிரதோ-சிங்களம் (கி.பி 3 – 7ம் நூற்றாண்டு வரை)
- மத்திய சிங்களம் (கி.பி 7 – 12ம்் நூற்றாண்டு வரை)
- புதிய சிங்களம் (12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை)
பேச்சு வழக்கு
சிங்களத்தில் பொதுவாக இரண்டு வகையான பேச்சு வழக்கு உள்ளது. தென் பகுதியில் உள்ள சிங்களவர் ஒருமாதிரியும், ஏனைய பகுதியில் உள்ள சிங்களவர் வேறுமாதிரியும் பேசுகின்றனர்.
இலங்கையில் உள்ள வேடர் இனமும் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றது. இந்த மொழியில் சிங்களத்தின் ஆதிக்கம் இருந்தாலும், வேறெந்த மொழியிலும் இல்லாத பல சொற்கள் இவர்கள் மொழியில் உள்ளன.
பேச்சுச் சிங்களம்
- எண்கள்
- 1 එක - எக்க (க் சேர்ந்து ஒலிக்கும் எழுதுவதில்லை) அல்லது எக்காய் - ஒன்று
- 2 දෙක - தெக்க (க் சேர்ந்து ஒலிக்கும் எழுதுவதில்லை) அல்லது தெக்காய் - இரண்டு
- 3 තුන - துண அல்லது துணாய் - மூன்று
- 4 හතර - ஹத்தற (த் எனபது சிங்களத்தில் எழுப்படவில்லையெனினும் அச்சத்ததுடனேயே ஒலிக்கவேண்டும்) அல்லது ஹத்தறாய் - நான்கு
- 5 පහ - பஹ அல்லது பஹாய் - ஐந்து
- 6 හය - ஹய அல்லது ஹயாய் - ஆறு
- 7 හත - ஹத்த அல்லது ஹத்தாய் - ஏழு
- 8 අට - அட்ட அல்லது அட்டாய் - எட்டு
- 9 නමය - நமய அல்லது நமயாய் - ஒன்பது
- 10 දහය - தஹய அல்லது தஹயாய் - பத்து
- 11 එකොළහාය් - எக்கொளஹாய் - பதினொன்று
- 12 තොළහ - தொலஹ -தொளஹாய் - பன்னிரண்டு
- 13 දහතුන - தஹாத்துணாய் - பதின்மூன்று
- 14 දාහතර - தாஹத்தறாய் - பதினான்கு
- 15 පහළව - பஹளவ - பதினைந்து
- 16 දහසය - தாசயாய் - பதினாறு
- 17 දාහත - தாஹத்தாய் - பதினேழு
- 18 තහාඅට - தாஅட்டாய் - பதினெட்டு
- 19 තහනමය - தாநமயாய் - பத்தொன்பது
- 20 විස්ස - விஸ்ஸாய் - இருபது
- 21 විසි එක - விசி எக்க - இருபத்து ஒன்று
- 22 විසි දෙක - விசி தெக - இருபத்தி இரண்டு
- 23 විසි තුන - விசி துண - இருபத்தி மூன்று
- 24 විසි හතර - விசி ஹத்த - இருப்பத்தி நான்கு
- 25 විසි පහ - விசி பஹ - இருபத்தி ஐந்து
- 26 විසි හය - விசி ஹய - இருபத்தி ஆறு
- 27 විසි හත - விசி ஹத்த - இருபத்தி ஏழு
- 28 විසි අට - விசி அட்ட - இருபத்தி எட்டு
- 29 විසි නමය - விசி நமய - இருபத்தி ஒன்பது
- 30 තිහ - திஹாய் - முப்பது
- 40 හතළිය - ஹத்தலியாய் - நாற்பது
- 50 පනහ - பணஹாய் - ஐம்பது
- 60 ஹட்டாய் - அறுபது
- 70 ஹத்தாவாய் - எழுபது
- 80 அசுவாய் - எண்பது
- 90 அணுவாய் - தொண்ணூறு
- 100 சீயாய் - நூறு
- 200 தெசிய்ய - இருநூறு
- 300 துன்சிய்ய - முந்நூறு
- 400 ஹாரசிய்ய - நானூறு
- 500 பன்சிய்ய - ஐந்நூறு
- 600 ஹயசிய்ய - அறுநூறு
- 700 ஹத்சிய்ய - எழுநூறு
- 800 அட்டசிய்ய - எண்ணூறு
- 900 நமசிய்ய - தொள்ளாயிரம்
- 1000 தாஹய் - ஆயிரம்
- 2000 தெதாஹய் - இரண்டாயிரம்
- 3000 துன்தாஹய் - மூவாயிரம்
- 4000 ஹத்தர தாஹய் - நாலாயிரம்
- 5000 பன் தாஹய் - ஐயாயிரம்
- 6000 ஹய தாஹய் - ஆறாயிரம்
- 7000 ஹத் தாஹய் - எழாயிரம்
- 10 000 தஹதாஹய் - பத்தாயிரம்
- 100 000 லக்சயய் - இலட்சம்
- 10 000 000 கோட்டிய - கோடி
சொற்கள், சொற்றொடர்கள்
- ஆயுபோவன் - வணக்கம்
- நமுத் - ஆனால்(but)
- மார்க - வழி
- பார - பாதை
- மில - விலை
- ஒபட்ட சிங்கள தன்னவத? - உங்களுக்கு சிங்களம் தெரியுமா?
- ஒயாட தெமழ தேரெனவாத? - உங்களுக்குத் தமிழ் தெரியுமா? (ஒயா - உங்களுக்கு, தெமழ - தமிழ், தேரனவாத அல்லது தன்னவாத - தெரியுமா?)
- ஒயாட்ட டிரைவிங் லைசன்ஸ் தியனவாத? - உங்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா?
- ஒயாட்ட வாகன பலபத்ர தியனவாத? - உங்களிடம் வாகனத்திற்கான அனுமதிப்பத்திரம் உள்ளதா?
- ஒவ் - ஆம்
- தண்ணவா - தெரியும்.
- டிக்க டிக்க - கொஞ்சம் கொஞ்சம்
- ஒச்சர தமய் புளுவன்- அவ்வளவுதான் தான் முடியும் (ஒச்சரதமய் - அவ்வளவுதான், புளுவண் - முடியும்)
- கொஹேத யன்னே? - எங்கே போறீங்க?
- கெவல் கொஹேத - வீடு எங்கே? (கெவல் - வீடு, கொஹேத - எங்கே)?
- வெள்ளவத்த - வெள்ளவத்தை (குறிப்பு: சிங்களத்திலும் தமிழிலும் இடப்பெயர்கள் உச்சரிப்பில் மட்டுமே சிறிதளவு மாறுபடும்)
- ஒயா கொஹேத வெட கரண்ணே - நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள்.
- மங் திருக்குணாமலே வெட கரண்ணே - நான் திருகோணமலையில் வேலை செய்கின்றேன்.
- கொஹொமத செப சனீப்ப? - நீங்கள் எப்படி சுகமாயிருக்கின்றீர்களா?
- கொழும்பட்ட கொஹொமத யன்னே? - கொழுப்புக்கு எப்படி போறது?
- கமக் நே - பரவாயில்லை
- வரதக் நே- பிரச்சினையில்லை
- பொஹொம ஹொந்தய் - மிகவும் நன்று. (பொஹொம - மிகவும், ஹொந்தாய் - நல்லது)
- ஸ்தூதி - நன்றி
- கேவத? - சாப்பிட்டிங்களா?
- மங் கேவா - நான் சாப்பிட்டேன் (மங் - நான், கேவா - சாப்பிட்டேன்)
- தே பொனவத - தேநீர் குடிப்பீர்களா?
- ஆண்டுவ - அரசாங்கம்
- பட்டங்கத்தத? - ஆரம்பித்துவிட்டீர்களா?
- கீயத - எவ்வளவு?
- இத்துறு சல்லி தென்ன - மீதிப் பணத்தைத் தாருங்கள்.(இத்துறு - மிச்சம், சல்லி - காசு, தென்ன - தாங்க)
- மே பாறென் அம்பேபுஸ்ஸ யன்ன புளுவண்த - இந்தப் பாதையால் அம்பேபுஸ்ஸ போக இயலுமா? (மே - இந்த, பாற - பாதை, யன்ன- போக, புளுவண்த - இயலுமா?)
- மம ஓயாட்ட ஆதரே - நான் உங்களுக்கு அன்புசெலுத்துகின்றேன்
- மம ஓயாட்ட கமதி - நான் உங்களை விரும்புகின்றேன்.
- விநாடியக் இன்ன- ஒரு நிமிடம் நில்லுங்கள்
உறவுச் சொற்கள்
- தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா
- அம்மே (அல்லது அம்மா) - அம்மா
- ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா
- சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா
- ஐயா - அண்ணா
- அக்கா - அக்கா
- மல்லி - தம்பி
- நங்கி - தங்கை
- சகோதரயா - சகோதரன்
- புத்தா - மகன்
- துவ - மகள்
- பேனா - மருமகன்
- மல்லி கே புத்தா - தம்பியின் மகன்
- அக்கா கே துவ - அக்காவின் மகள்
- மச்சாங் - இது தற்போதைய சிங்களப் பாவனையில் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கப் பயன்படுகின்றது.
- லொக்கு அம்மா - பெரியம்மா
- லொக்கு தாத்தா - பெரியப்பா
- மாமா - மாமா
- மசினா - மச்சான்
- நேனா - மச்சாள்
- பிரிந்த,பவுல - மனைவி
- மித்துரா - நண்பன்
- மித்துரி - நண்பி
- கொல்லா - இளைஞன்/பையன்
- பிரிமி - ஆண்
- கெஹெனு - பெண்
- கெல்ல - இளம் பெண்
- லமயா - பிள்ளை
- யாளுவோ - நண்பர்கள்
காலங்கள்
- உதே - காலை
- தவல் - பகல்
- ஹவச - பிற்பகல், சாயுங்காலம், பின்னேரம்
- ராத்ரிய - இரவு
- அத - இன்று
- ஈயே - நேற்று
- ஹெட்ட - நாளை
- அவ்ருது - ஆண்டு
கிழமைகள்
- இரிதா - ஞாயிறு
- சந்துதா - திங்கள்
- அங்கஹருவாதா - செவ்வாய்
- பதாதா - புதன்
- பிரஹஸ்பதிந்தா - வியாழன்
- சிக்குராதா - வெள்ளி
- செனசுராதா - சனி
நோய்கள்
- உண - காய்ச்சல்
- கஸ - இருமல்
- ஹெம்பிரிஸ்ஸாவ - தடிமன்
- ஹிபுகும் - தடிமல்
- ஒலுவ அமாறு - தலை வலி
- படே அமாறு - வயிற்று வலி
- செம - சளி
- பப்புவே அமாறு - நெஞ்சு வலி
- அதும - வீஸிங்
- ருத்ர பீடனய - இரத்த அழுத்தம்
- அஸ் அமாறுவ - கண் வருத்தம்
இடங்களின் பெயர்கள்
- றோகல - வைத்தியசாலை
- நகர சபாவ - நகர சபை
- விஸ்வவித்யாலய - பல்கலைக்கழகம்
- பாசல - பாடசாலை
- கோவில - கோவில்
- கம - கிராமம்
- நகரைய - நகரம்
- பலாத - மாகாணம்
- டிசாவ - மாவட்டம்
- பன்சல - விகாரை
- பல்லிய - பள்ளிவாசல்
- பஸ் நேவதும்போல - பஸ் தரிப்பிடம்
- வேளந்தசெல - கடை (விற்பனை நிலையம்)
- போல - சந்தை
- வேவ - குளம்
- கங்காவ - ஆறு
- பலாத் சபாவ - பிரதேச சபை
மரங்களின் பெயர்
- கும்புக் (කුඹුක්) - மருது
- அம்ப (අඹ) - மா
- கொஹொம்ப (කොහොඹ) - வேம்பு
- நுக (නුග) - ஆல்
- கொஸ் (කොස්) - பலா
- கெஸெல் (කෙසෙල්) - வாழை
- பெபொல் (පැපොල්) - பப்பாசி
- சியம்பலா (සියඹලා) - புளி
மிருகங்கள்
- කපුටා - கப்புடா - காகம்
- කුරුල්ලා - குறுல்லா - குருவி
- මොණරා - மொனறா - மயில்
- නරියා - நரியா - நரி
- අලියා - அலியா - யானை
- ලෙනා - லேனா - அணில்
- එළුවා - எலுவா - ஆடு
இலக்கணம்
தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வாக்கியத்தின் இடையில் வரலாம்.
நிகழ்காலம்
நிகழ்காலம் நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. ஆண்பால் பெண்பால் வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக கடனவா என்பதன் அடி கட ஆகும். கணவா இன் அடி க ஆகும். மம என்று வந்தால் மியும் *அப்பி வந்தால் மு உம் *நும்ப/ஒப வந்தால் ஹி யும் *நும்பலா/ஒபலா வந்தால் ஹூ உம் சேர்க்கவேண்டும். ஒபலா/நும்பலா ஒருமையில் வந்தால் யி உம் பன்மையில் வந்தால் தி உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும்.
- பியா - பியானோ
- புத்தா - புத்தணுவோ
- சித்தா - சீத்தாவோ
- பியதாச - பியதாசவோ
- லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும் எனவே லிபிகுணு ராசிய என மாற்றம் இன்றி வரும்.
பெண்பால் ஒருமையில் வந்தால் ய சேர்க்க வேண்டும்.
- கியா+ய = கியாய
- ஆவா+ய =ஆவாய
குறுத்துமி ஆவாய
இறந்தகாலம்
இறந்தகாலம் ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு படர்க்கை ஒருமையைக் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு ஒருமைக்கு ஏய என்ற சத்தத்தையும் பன்மைக்கு ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
- கியா+ஏய = கியேய
- ஆவா+ஏய = ஆவேய
இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும்.
- கியேய = கியெ
- அவேய = ஆவெ
- கடுவேய = கடுவெ
- மம கியே+மி = மம கியமி (மம எனவருவதால் மி ஐச் சேர்ந்தல் வேண்டும்.
சிங்கள மொழியில் எது பயனில்லைக்கு அண்மையில் உள்ளதோ அதுதான் எழுவாய் ஆகக் கணிக்கப்படும்.
- எடுத்துக்காட்டாக அவன் அல்லது அவள் வந்தான்/ள் என்ற சொல் சிங்களத்தில் ஆவாய என்றே வரும் (அவள் பயனில்லைக்கு அண்மையில் இருப்பதால்)
உயிருடைய சொல்லுடன் ஏதாவது ஒரு சொல் அச்சொல்லிற்குப் பிறகு வந்தால் அச்சொல் பன்மைச் சொல். செயற்பாட்டு வினை வாக்கியத்தின் விசின் வரும். இதன் கருத்து ஆல். அவன் மரத்தை வெட்டுகிறான் - செய்வினை. அவனால் மரம் வெட்டப்பட்டது - செயற்பாட்டு வினை.
எழுவாய் செயப்படுபொருள்
தன்மையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும்
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
மம | மா | ||
அப்பி | அப்ப |
முன்னிலையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும்
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
ஒப | ஒப | ||
நும்ப | நும்ப | ||
தோ | தா | ||
ஒபலா | ஒபலா | ||
நும்பலா | நும்பலா | ||
தொப்பி | தொப்ப | ||
தெப்பி | தெப்ப |
படர்க்கையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும்
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
ஒஃகு | ஒகு | ||
மினிஹா | மினிஹா | ||
ஹச | ஹச | ||
கஸ் | கஸ் | ||
கம்கறுவோ | கம்கறுவன் | ||
குறுவறு | குறுவறுன் |
உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆகவும் செயற்படுபொருளாகவும் மாற்றம் இன்றி வரும். உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆக வரும்போது செயப்படுபொருள் ஒருமையில் முடித்தல் வேண்டும்.
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
ஹச | ஹச | ||
கஸ் | கஸ் |
உயிருடைய ஒருமைச் சொல் எழுவாய் ஆக வரும்போது பயனிலை ஒருமையிலும்,
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
மினிஹா | மினிஹா |
எழுவாய் ஆக பன்மைச் சொல் வரும்போது பயனிலை பன்மையிலும் முடித்தல் வேண்டும். உயிருடைய பன்மைச் சொல் செயப்படுபொருளாக்கும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றது.
முதலாம் விதி
று சத்துடன் முடிவடையும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
குறுவறு | குறுவறுன் | ||
ஹொறு | ஹொறுன் |
இரண்டாம் விதி
வோ சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் வன் என்றவாறு வரும்
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
கம்கறுவோ | கம்கறுவன் |
மூன்றாம் விதி
ன், த் கடைசியில் இருந்து இரண்டாவதாக வரும் சொற்களுக்கு சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் ன், த் ஐநீக்கி ன் ஐச் சேர்க்கவேண்டும்.
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
கொன்னு | கொனுன் | ||
சத்து | சதுன் (த் ஒலிக்கும் அதாவது சத்துன் என்றவாறு உச்சரிக்கவேண்டும்) |
நான்காம் விதி
ய் கடைசியில் வரும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
லமாய் | லமாய்ன் |
பெண்பால் விதி
பெண்பாலுக்கு க சேர்க்கவேண்டும்.
எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு | செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு |
கெல்லக் | கெல்லக்க | ||
குறுத்திமியக் | குறுத்துமியக்க |
செயப்படுபொருள் எழுவாய்
இது எழுவாய் இலிருந்து செயற்படுபொருளாக மாற்றுவதன் மறுதலையாகும்.
செயப்படுபொருள் | செயப்படுபொருள் உச்சரிப்பு | எழுவாய் | எழுவாயின் சிங்கள உச்சரிப்பு |
தறுவன் | தறுவோ | ||
கம்கறுவன் | கம்கறுவோ | ||
மவ்வறுன் | மவ்வறு | ||
மொனறுன் | மொனறு | ||
பழலுன் | பழல்லு | ||
கொனுன் | கொன்னு | ||
ஒவுன் | ஒஃவு | ||
கீரிட்டகயன் | கீரிட்டகயோ | ||
கியேய | கியோய |
அறிவுறுத்தல்,செய்தி, ஆலோசனை, கட்டளை, பிராத்தனை
அவவாதய - அறிவுறுத்தல்
இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்று. இதில் எப்பா நொக்கறனு போன்ற சொற்கள் வரும்.
உபதேசய - அறிவுரை
இதில் பழமொழிகள் வரும். ஒருவருக்கு சொல்லும் உபதேசங்கள் இதில் வரும்.
பிராத்தனய - வாழ்த்துக்கள்
இதில் வாழ்த்துக்கள் வரும் ஜயவேவா, உபந்தினவேவா. இதில் பொதுவாக வேவா என்ற சொல் இறுதியில் வரும்.
வினய - ஒழுங்கு அல்லது கட்டளை
இது உடனுக்குடன் வழங்கப்படுவது. இதில் வினைச்சொல்லுடன் இன்ன சேர்ந்துவருவதை அவதானிக்கலாம்.
அகராதிகள்
- ஆங்கிலச் சிங்கள அகராதி[தொடர்பிழந்த இணைப்பு] அணுகப்பட்டது நவம்பர் 29, 2006
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Charles Henry Carter. A Sinhalese-English dictionary. Colombo: The "Ceylon Observer" Printing Works; London: Probsthain & Co., 1924.
- Simhala Sabdakosa Karyamsaya. Sanksipta Simhala Sabdakosaya. பரணிடப்பட்டது 2013-07-15 at the வந்தவழி இயந்திரம் Kolamba : Samskrtika Katayutu Pilibanda Departamentuva, 2007–2009.
- Madura Online English-Sinhala Dictionary and Language Translator
- Kapruka Sinhala dictionary
- Sinhala dictionary resources online
- Sinhala Dictionary பரணிடப்பட்டது 2019-08-05 at the வந்தவழி இயந்திரம்
- Sinhala Script பரணிடப்பட்டது 2018-11-01 at the வந்தவழி இயந்திரம்
- Sinhala dictionary (Beta)
- Sinhala for iOS
- Sinhala Dictionary for Android