சுஹாசினி

சுஹாசினி மணிரத்னம்
பிறப்பு15 ஆகத்து 1961 (1961-08-15) (அகவை 63)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், எழுதாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–தற்போது வரை
பெற்றோர்சாருஹாசன்
வாழ்க்கைத்
துணை
மணிரத்னம்
(1988–தற்போது வரை)
பிள்ளைகள்நந்தன்

சுஹாசினி (பிறப்பு: ஆகத்து 15, 1961)[1] ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

வசனகர்த்தா

[தொகு]

இயக்குநர் மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் வசனம் எழுதினார்.

நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்

[தொகு]

இயக்கியுள்ள படம்

[தொகு]

சிந்து பைரவி திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mani Ratnam's gift for Suhasini". The Times of India (in ஆங்கிலம்). 19 August 2011. Archived from the original on 15 July 2021. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  2. "Kamal Haasan, Ramya Krishnan, Khushbu and others have fun at Suhasini's birthday party". India Today. 18 August 2021. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஹாசினி&oldid=4114137" இலிருந்து மீள்விக்கப்பட்டது