சுட்டி விகடன்
சுட்டி விகடன் என்பது 1999 முதல் 2019 வரை விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த சிறார் இதழாகும்.[1]
இதழாசிரியர் | பாலசுப்ரமணியன்[2] |
---|---|
வகை | சிறார் இதழ் |
இடைவெளி | மாதம் ஒருமுறை (நவம்பர் 1999 - ஏப்ரல் 2005)[3] மாதம் இருமுறை (ஏப்ரல் 2005 - அக்டோபர் 2019) |
வெளியீட்டாளர் | விகடன் குழுமம் |
முதல் வெளியீடு | நவம்பர் 1999 |
கடைசி வெளியீடு | அக்டோபர் 2019 |
நாடு | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (இந்தியா) |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | www.vikatan.com |
வாசல், ஸ்பெஷல், எஃப்.ஏ. பக்கங்கள், பொது அறிவு, தொடர்கள், புதிரோ புதிர், காமிக்ஸ், விளையாட்டு, கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. நீதி நெறிக்கதைகள், விஞ்ஞான கட்டுரைகள், வரலாற்று குறிப்புகள் என்று குழந்தைகளுக்காகவே எழுதப்படுகின்றன.
மாணவர்களுக்கு பயன் தரும் எஃப் ஏ பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் 16 பக்கங்கள் வெளியிடப்படுகின்றன.
ஒவ்வோர் இதழோடு மாணவர்களே தயாரிக்கும் என் பள்ளி என் சுட்டி இதழ் இணைப்பாக அளிக்கப்படுகிறது.
கடல் பயணங்கள் நூல்
[தொகு]சுட்டி விகடனில் "சென்றதும் வென்றதும்" எனும் தலைப்பில் வெளியான வரலாற்று கட்டுரைகளை கடல் பயணங்கள் எனும் நூலாக வெளியிட்டுள்ளனர். இதன் ஆசிரியர் மருதன். இந்நூலை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [வியாபார வியூகங்கள் நூல்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி - கிழக்குப் பதிப்பகம் - கோர் காம்பெடன்ஸ் பகுதியில் விகடன் குழுமத்தின் வியாபரா நுணுக்கம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.]
- ↑ http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Correspondent, Vikatan. "இதுவரை சுட்டி..." www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ [கடல் பயணங்கள் - தினமணி நாளிதழ் - 01st January 2018]