சுரங்கத் தொழில்
சுரங்கத் தொழில் என்பது, பெறுமதி வாய்ந்த கனிமங்களையோ அல்லது பிற நிலவியல் சார்ந்த பொருட்களையோ புவியில் இருந்து அகழ்ந்து எடுக்கும் தொழில் ஆகும். சுரங்கத்ஹ் தொழில் மூலம் அகழ்ந்து எடுக்கும் பொருட்களுள், எளிய உலோகங்கள், மதிப்புள்ள உலோகங்கள், இரும்பு, யுரேனியம், நிலக்கரி, வைரம், சுண்ணக்கல், பாறையுப்பு, பொட்டாசு போன்றவை அடங்கும். வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யமுடியாத அல்லது செயற்கையாக ஆய்வுகூடங்களிலோ, தொழிற்சாலைகளிலோ உருவாக்க முடியாத பொருட்கள் சுரங்கத் தொழில் மூலம் பெறப்படுகின்றன. பொதுவாக சுரங்கத் தொழிலில் புதுப்பிக்க முடியாத வளங்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன.
உலோகங்களையும், கற்களையும் அகழ்ந்து எடுத்தல் வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே நடைபெற்றுவரும் ஒரு தொழிலாகும். தற்கால சுரங்கத் தொழில் நடைமுறைகள், தாதுக்களைக் கண்டறிதல், இலாபத்துக்கான சாத்தியக்கூற்று ஆய்வு, தேவையான பொருட்களை அகழ்ந்து எடுத்தல், சுரங்கம் மூடப்பட்ட பின்னர் சுரங்கம் தோண்டிய நிலத்தை மீட்டெடுத்து வேறு பயன்பாடுகளுக்காகத் தயார்ப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. சுரங்கம் தோண்டும் போதும், தோண்டி முடிந்து சுரங்கம் மூடப்பட்ட பின்னர் பல ஆண்டுகளுக்கும் இது சூழல் மீது விரும்பத்தகாத தாக்கங்களை உருவாக்குகின்றது. இதன் காரண்மாக உலகிலுள்ள பல நாடுகள் இத்தகைய சுரங்கத்தொழிலினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காகப் பல விதிகளை நடைமுறைப் படுத்துகின்றன. பாதுகாப்பும் இத்துறையில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.[1][2][3]
சுரங்க செயல்பாட்டு முறைகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of ORE". Merriam-Webster (in ஆங்கிலம்). Archived from the original on 2023-02-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ Agricola, Georg; Hoover, Herbert (1950). De re metallica. MBLWHOI Library. New York, Dover Publications.
- ↑ Hartman, Howard L. SME Mining Engineering Handbook, Society for Mining, Metallurgy, and Exploration Inc, 1992, p. 3.
சுரங்கங்கள் திறந்தவெளி சுரங்கம் மற்றும் நிலத்தடி சுரங்கம் என இரு வகைப்படும்.