சுவரண் சிங்
சர்தார் சுவரண் சிங் | |
---|---|
பிறப்பு | சங்கர், பஞ்சாப், இந்தியா | 19 ஆகத்து 1907
இறப்பு | 30 அக்டோபர் 1994 புது தில்லி, இந்தியா | (அகவை 87)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | இரந்தீர் கல்லூரி, கபுர்தலா, இலாகூர் அரசு கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1952–1975 |
சமயம் | சீக்கியம் |
வாழ்க்கைத் துணை | சரண் கௌர் |
சுவரண் சிங் (Sardar Swaran Singh 19, ஆகத்து 1907–30, அக்டோபர் 1994 ) இந்திய அரசியல்வாதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், நடுவணரசு அமைச்சராகவும் இருந்தவர்.[1]
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் சங்கர் என்னும் சிற்றூரில் பிறந்தார். சவகர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் நடுவணரசு அமைச்சரவையில் சேர்ந்தார். தொடர்ந்து கேபினட் அமைச்சராக 23 ஆண்டுகள் இருந்தார். இந்திய தொடர்வண்டித் துறை அமைச்சராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
ஐக்கிய நாட்டு சபைக்கு அனுப்பப்பட்ட தூதுக் குழுவில் பலமுறை தலைவராக இருந்தார். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் துதுக் குழுவில் தலைவராக இருந்தார். 1980 இல் பாக்கித்தான், இந்தோனேசியா, நைசீரியா ஆகிய நாடுகளுக்குச் சிறப்புத் தூதுவராகச் சென்றார். சீனா, பாக்கித்தான் ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
1992 இல் இவருக்கு பத்ம விபூசண் விருது இந்திய நடுவணரசால் வழங்கப்பட்டது.
சான்றாவணம்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.