செ. இராமலிங்கம்
செ. இராமலிங்கம் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஆர். கே. பாரதி மோகன் |
தொகுதி | மயிலாடுதுறை |
தமிழ்நாடு ஊராட்சிஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் | |
தொகுதி | திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சீனிவாசநல்லூர், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தி.மு.க |
துணைவர் | யசோதா |
பிள்ளைகள் | 2 மகன், 1 மகள் |
வாழிடம்(s) | திருவிடைமருதூர்,தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | விவசாயம், அரசியல்வாதி |
As of 22, 2024 |
செ. இராமலிங்கம் (ஆங்கிலம்:S. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர்.[2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இராமலிங்கம், 1987, 1980, 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருவிடைமருதூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6] இவர் இத்தொகுதியில், ஏழுமுறை போட்டியிட்டு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
வகித்த பதவிகள்
[தொகு]- தமிழக அரசு மாநில நான்காவது நிதிக்குழு உறுப்பினர்.[8]
- தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்.
- திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்.
- திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலின் அறங்காவலர்குழு தலைவர்.
- திருவிடைமருதூர் தொகுதியில், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்.
- நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
வகிக்கும் பதவிகள்
[தொகு]- திருவிடைமருதூர் ஒன்றிய தி.மு.க செயலாளர்.
- தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://docs.google.com/viewer?a=v&q=cache:zpTUQzvf7XwJ:www.tn.gov.in/gorders/finance/fin_e_549_2009.pdf+fourth+finance&hl=en&sig=AHIEtbRpTnL2Xsoac4aHq8yHmgC8U8DcHQ[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ராமலிங்கம் - மயிலாடுதுறை திமுக வேட்பாளர்: சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வென்ற வேட்பாளர்!". ஒன்இந்தியா (மார்ச் 27, 2019)
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=266086&ncat=Thanjavur[தொடர்பிழந்த இணைப்பு]