ஜைமினி
ஜைமினி | |
---|---|
ஜைமினியும் பறவைகளும் | |
தத்துவம் | மீமாஞ்சம் |
மெய்யியலாளர் |
ஜைமினி (Jaimini) என்பவர் பண்டைய இந்தியாவின் முனிவர்களுள் ஒருவர். இவர் இந்திய மெய்யியலாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இவர் வியாசரின் மாணவர் ஆவார்.
மீமாம்சகக் கோட்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பது ஜைமினி எழுதிய மீமாம்சக சூத்திரம். இவரது காலம் கிமு 200 க்கும் கிபி 200 இற்கும் இடையே இருக்கலாம். இவர் எழுதிய மீமாம்சக சூத்திரம் 2500 பாடல்களைக் கொண்டது. மீமாம்சையின் முக்கிய கொள்கை சடங்குகளைப் பற்றியதுதான். பல பிராம்மணங்களில் இவை பற்றி கூறப்பட்டுள்ளது. சாமவேதப்பாடல் ஒன்றிற்கும் அதனுடைய பிராம்மணம் ஒன்றிற்கும் ஜைமினியே ஆசிரியர் என்று தெரிகிறது.
ஜைமினியின் மீமாம்சகத்திற்கு உரை எழுதியவர் சபரர் என்பவர். இதற்கு சபர பாஷ்யம் என்பர். சபரரின் காலம் கி. பி. 400க்கு முன் இருக்காது என வரலாற்று அறிஞர் ஜா கூறுகிறார்.
ஆதார நூல்
[தொகு]- இந்தியத் தத்துவ இயல்: ஓர் எளிய அறிமுகம், நூலாசிரியர், தேவிபிரசாத் சட்டோபாதயாயா, அலைகள் வெளீட்டகம்.