தசுமேனியா
தாசுமேனியா Tasmania பழவா கனி | ||||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்):
| ||||
குறிக்கோள்: Ubertas et Fidelitas | ||||
நாடு | ஆத்திரேலியா | |||
கூட்டமைப்புக்கு முன்னர் | தாசுமேனியக் குடியேற்றம் | |||
கூட்டமைப்பு | 1 சனவரி 1901 | |||
பெயர்ச்சூட்டு | ஏபெல் டாஸ்மான் | |||
தலைநகர் | ஹோபார்ட் 42°52′50″S 147°19′30″E / 42.88056°S 147.32500°E | |||
நிர்வாகம் | 29 உள்ளாட்சி சபைகள் | |||
பெரிய நகரம் | தலைநகர் | |||
இடப்பெயரர் | தாசுமேனியர்[1] | |||
அரசு | ||||
• மன்னர் | சார்லசு III | |||
• ஆளுநர் | பார்பரா பேக்கர் | |||
• முதலமைச்சர் | செரமி ரொக்லிஃப் (லிபரல்) | |||
சட்டமன்றம் | தாசுமேனிய நாடாளுமன்றம் | |||
• மேலவை | சட்டமன்றம் | |||
• கீழவை | கீழவை | |||
நீதித்துறை | மீஉயர் நீதிமன்றம் | |||
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் | ||||
• மேலவை | 12 மேலவை உறுப்பினர் (76 இல்) | |||
5 இடங்கள் (151 இல்) | ||||
பரப்பளவு | ||||
• மொத்தம் | 68,402 km2 (26,410 sq mi) (7-ஆவது) | |||
உயர் ஏற்றம் (ஓசா மலை) | 1,617 m (5,305 ft) | |||
மக்கள்தொகை | ||||
• மார்ச் 2022 மதிப்பு | 571,165[2] (6-ஆவது) | |||
• அடர்த்தி | 8.9/km2 (23.1/sq mi) (4-ஆவது) | |||
மொத்த மாநில உற்பத்தி | 2020 மதிப்பு | |||
• மொத்தம் | AU$32.102 பில்.[3] (8-ஆவது) | |||
• தலைக்கு | AU$59,779 (7-ஆவது) | |||
ஜினி (2016) | 44.8[4] medium · 3-ஆவது | |||
ம.மே.சு (2021) | 0.921[5] very high · 8-ஆவது | |||
நேர வலயம் | UTC+10:00 (AEST) | |||
• கோடை (பசேநே) | UTC+11:00 (பகலொளி சேமிப்பு நேரம்) | |||
அஞ்சல் குறியீடு | TAS | |||
ISO 3166 குறியீடு | AU-TAS | |||
சின்னங்கள் | ||||
பறவை | மஞ்சள் வாட்டில்பேர்ட் (Anthochaera paradoxa)[6] | |||
மலர் | தாசுமேனிய நீலப் பசை (Eucalyptus globulus)[7] | |||
நிறம் | கரும் பச்சை (PMS 342), மஞ்சள் (PMS 114), & அரக்கு (PMS 194)[8] | |||
இணையதளம் | tas |
தாசுமேனியா (Tasmania[9]) என்பது ஆத்திரேலியாவின் ஓர் தீவு மாநிலம் ஆகும்.[10] இது ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பில் இருந்து தெற்கே 240 கிமீ தூரத்தில், பாஸ் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலம் உலகின் 26-வது பெரிய தீவான தாசுமேனியாவையும், அதனைச் சுற்றியுள்ள 1000 தீவுகளையும் உள்ளடக்கியது.[11] இது ஆத்திரேலியாவின் மிகச்சிறியதும், குறைந்த மக்கள்தொகை கொண்டதுமான மாநிலமாகும், இங்கு சூன் 2023 நிலவரப்படி 573,479 குடியிருப்பாளர்கள் உள்ளனர். மாநிலத்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஹோபார்ட் ஆகும், தலைநகரில் 40% மக்கள் அகண்ட ஹோபார்ட் பகுதியில் வாழ்கின்றனர்.[12] தாசுமேனியா ஆத்திரேலியாவில் மிகவும் பரவலாக்கப்பட்ட மாநிலமாகும், அதன் தலைநகருக்குள் மிகக் குறைந்த விகிதத்தில் வசிப்பவர்கள் உள்ளனர்.[13]
தாசுமேனியாவின் முக்கிய தீவில் தொல்குடியின மக்கள் வசித்து வந்தனர்..[14] சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு பூர்வகுடிகளான தாசுமேனியர்கள், கடல் மட்டம் உயர்ந்து பாஸ் நீரிணையை உருவாக்கிய பிறகு, பெருநிலப்பரப்பு தொல்குடியின குழுக்களில் இருந்து பிரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[15] நெப்போலியப் போர்களின் போது முதலாம் பிரஞ்சு பேரரசு இந்நிலத்தின் மீது உரிமை கோருவதைத் தடுப்பதற்காக 1803 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசின் தண்டனைக் குடியேற்றமாக ஐரோப்பியர்களால் தீவு நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டது.[16] பிரித்தானியக் குடியேற்றத்தின் போது தொல்குடியின மக்கள் தொகை 3,000 முதல் 7,000 வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் "கருப்புப் போர்," நோய்த்தொற்றுகளின் பரவல் போன்றவற்றினால், குடியேறியவர்களுடனான மோதல்களின் போது 30 ஆண்டுகளுக்குள் தொல்குடியினர் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர். 1825-1831 காலப்பகுதியில் உச்சகட்டத்தை அடைந்த இந்த மோதல், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவச் சட்டத்திற்கு வழிவகுத்தது, கிட்டத்தட்ட 1,100 தொல்குடியின மக்களையும் குடியேறியவர்களையும் அது கொன்றது.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், இத்தீவு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு குடியேற்றமாக இருந்தது. இருப்பினும், இது 1825 இல் வான் டீமனின் நிலம் (அந்தோனி வான் டீமனின் பெயரால்) என்ற பெயரில் ஒரு தனிக் குடியேற்றமாக இருந்தது.[17] 1853 இல் போக்குவரத்து என அறியப்படும் இந்த நடைமுறை நிறுத்தப்படுவதற்கு முன்பு தோராயமாக 80,000 குற்றவாளிகள் வான் டீமனின் நிலத்திற்கு அனுப்பப்பட்டனர்.[18] 1855 இல், தாசுமேனியாவின் தற்போதைய அரசியலமைப்பு இயற்றப்பட்டது, 1856 இல் குடியேற்ற விதிமுறையாக இதன் பெயரை டாசுமேனியா என மாற்றியது. 1901 ஆம் ஆண்டில், இது ஆஸ்திரேலியாவின் கூட்டமைப்பு செயல்முறையின் மூலம் ஆத்திரேலியாவின் மாநிலமாக மாறியது.
இன்று, தாசுமேனியா ஆத்திரேலிய மாநிலங்கள், மற்றும் ஆள்புலங்களில் இரண்டாவது சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, மேலும் முக்கியமாக சுற்றுலா, விவசாயம், மீன்வளர்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.[19] தாசுமேனியா ஒரு குறிப்பிடத்தக்க விவசாய ஏற்றுமதியாளராகவும், சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கும் குறிப்பிடத்தக்க இடமாகவும் உள்ளது. தேசிய பூங்காக்கள் மற்றும் உலக பாரம்பரிய தளங்கள் (21%) உட்பட அதன் நிலப்பரப்பில் சுமார் 42% சில வகையான இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.[20] உலகின் முதல் சுற்றுச்சூழல் அரசியல் கட்சி தாசுமேனியாவில் நிறுவப்பட்டது.[21]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taswegian". Lexico OED. Archived from the original on 3 September 2021. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.
- ↑ "National, state and territory population – March 2021". Australian Bureau of Statistics. 26 September 2022. Archived from the original on 21 November 2022. பார்க்கப்பட்ட நாள் 27 November 2022.
- ↑ "5220.0 – Australian National Accounts: State Accounts, 2019–20". Australian Bureau of Statistics. 20 November 2020. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
- ↑ "6524.0.55.002 – Estimates of Personal Income for Small Areas, 2011–2016". Australian Bureau of Statistics. Australian Government. 19 June 2018. Archived from the original on 5 September 2021. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Sub-national HDI". Global Data Lab. Archived from the original on 26 March 2023. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.
- ↑ "Tasmanian State Emblems". Parliament of Tasmania. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015.
- ↑ "Proclamation of Tasmanian floral emblem". Tasmanian Government Gazette. Parliament of Tasmania. 27 November 1962. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 23 January 2013.
- ↑ "Sporting colours". Department of Premier and Cabinet. Tasmanian Government. Archived from the original on 5 September 2021. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Tasmanian Aboriginal Centre – Official Aboriginal and Dual Names of places". tacinc.com.au. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 26 May 2022.
- ↑ "Tasmania". Oxford Advanced Learner's Dictionary. Archived from the original on 26 March 2023. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
- ↑ "Islands". Geoscience Australia. 15 May 2014. Archived from the original on 13 June 2020. பார்க்கப்பட்ட நாள் 14 May 2021.
- ↑ "3218.0 – Regional Population Growth, Australia, 2016–17: Main Features". Australian Bureau of Statistics. 24 April 2018. Archived from the original on 13 October 2018. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018. Estimated resident population, 30 June 2017.
- ↑ "Tasmania to 'rewrite' its population strategy as forecast sees state reaching target 15 years early". ABC News. 5 January 2023 இம் மூலத்தில் இருந்து 10 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230610002350/https://www.abc.net.au/news/2023-01-06/population-outside-hobart-means-struggle-for-services/101829418.
- ↑ "Aboriginal Life Pre-Invasion". www.utas.edu.au. Archived from the original on 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 3 September 2018.
- ↑ "Separation of Tasmania". Canberra: National Museum Australia. Archived from the original on 19 August 2020. பார்க்கப்பட்ட நாள் 22 July 2020.
- ↑ Frank Bolt, The Founding of Hobart 1803–1804, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9757166-0-3
- ↑ "Van Diemens Land". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 3 September 2018. பார்க்கப்பட்ட நாள் 3 September 2018.
- ↑ "Convicts and the British colonies in Australia". Commonwealth of Australia. Archived from the original on 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
- ↑ "Estimated full time employment | Tasmania | economy.id". economy.id.com.au. State Growth Tasmania. Archived from the original on 11 September 2021. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
- ↑ "Complete National Parks and Reserves Listings". Parks and Wildlife Service. 29 January 2014. Archived from the original on 29 November 2020. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
- ↑ Howes, Michael. "United Tasmania Group (UTG)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.