தினகர வெண்பா

தினகர வெண்பா [1][2] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தினகரன் என்னும் வள்ளலைப் போற்றும் வகையில் அவனது பெயரில் எழுதப்பட்ட நூல். [3]

திருக்குறளைச் சார்ந்து பிற்காலத்தில் பல நீதி நூல்கள் தோன்றின. அவற்றில் பெரும்பான்மை திருக்குறளை இறுதியில் வைத்து எழுதப்பட்ட வெண்பாக்களால் ஆனவை. திருக்குறளை இடையில் வைத்துக் கட்டளைக் கலித்துறையால் எழுதப்பட்ட நூல் திருப்புல்லாணி மாலை. இவை எல்லாமே திருக்குறளுக்கு விளக்கம் சொல்பவை.

விளக்கத்தைக் கதை ஒன்றினால் சொல்வதும் அந்த நூல்களின் தன்மை. பொதுவாக இந்த நூல்கள் திருக்குறளில் உள்ள அதிகாரத்தில் ஒரு பாடலைத் தெரிவு செய்துகொண்டு அவற்றிற்கு விளக்கம் சொல்பவை. [4]

தினகர வெண்பாவில் 137 வெண்பாக்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரம் ஒவ்வொன்றிலுமிருந்து ஒரு பாடல். 7, 24, 79 ஆம் அதிகாரங்களிலிருந்து மேலும் ஒவ்வொரு பாடல். மற்றும் காப்புச் செய்யுள். ஆக 137 வெண்பாக்கள் இதில் உள்ளன.

பாடல் – எடுத்துக்காட்டு

[தொகு]
கையாற் பரிந்து அழைக்கக் கண்டு கிழந்தைச் சோமன்
செய்ய கட்டி ஈந்தான் தினகரா - வையத்துத்
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 54. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1932
  3. இந்த நூலின் ஆசிரியர் பெயர் நாகராசன். “நாகராசன் புகழும் நன் நாகரீக வரசீகருணா தினகரா” – இந்நூலின் பாடல் 117
  4. 20 ஆம் நூற்றாண்டில் ஜெகவீரபாண்டியன் செய்த திருக்குறட் குமரேச வெண்பா 1330 குறட்பாக்களுக்கும் கதை சொல்லி விளக்கம் கூறும் நூலாக அமைந்துள்ளது. இவற்றில் உள்ள எல்லா வெண்பாவிலும் பின்னிரண்டு அடிகள் திருக்குறள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினகர_வெண்பா&oldid=3693980" இலிருந்து மீள்விக்கப்பட்டது