நங்கல்
நங்கல் பஞ்சாப் மாநிலத்தின் தொழில் நகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 31°23′06″N 76°22′30″E / 31.385°N 76.375°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | ரூப்நகர் |
நிறுவப்பட்ட ஆண்டு | டிசம்பர் 2009 |
தோற்றுவித்தவர் | பஞ்சாப் அரசு |
ஏற்றம் | 326 m (1,070 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 48,497 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | பஞ்சாபி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 140124, 140125, 140126 |
நங்கல் (Nangal), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இமயமலையில் உள்ள சிவாலிக் மலை அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து 326 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா அணையின் கீழ் பகுதியில், பஞ்சாபில் நங்கல் நகரம் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]சிவாலிக் மலை அடிவாரத்தில் அமைந்த நங்கல் நகரத்தில் சத்லஜ் ஆறு பாய்கிறது. இதனருகில் பக்ரா அணை உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 21 வார்டுகளும், 10,738 குடியிருப்புகளும் கொண்ட நங்கல் நகர நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 48,497 ஆகும். அதில் ஆண்கள் 25,317 மற்றும் பெண்கள் 23,180 உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,323 மற்றும் 0 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.9% ஆகும். இதன் மகக்ள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.44% ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையின் இந்து சமயத்தினர் 40,756 (84.04%), சீக்கியர்கள் 6,712 (13.84%), இசுலாமியர்கள் 756 (1.56%) மற்றும் பிற சமயத்தினர் 0.13% ஆக உள்ளனர்.[1] .