நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ்
Nivetha Thomas
பிறப்பு2 சனவரி 1994 (1994-01-02) (அகவை 30)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை

நிவேதா தாமஸ் (Nivetha Thomas, பிறப்பு: 2 சனவரி 1994) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.[1][2][3]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 உத்தரா உத்தரா மலையாளம்
2008 கண்ணா லட்டு தின்ன ஆசையா நிஷா மலையாளம் வெற்றியாளர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது
குருவி வெற்றிவேல் சகோதரி தமிழ்
2009 மத்ய வேனல் மனிகுட்டி மலையாளம்
ராஜாதி ராஜா பள்ளி மாணவி தமிழ்
2011 சாப்பா குரிஷ் மலையாளம்
ப்ரநயம் கிரேஸ் மலையாளம்
போராளி தமிழ்செல்வி தமிழ்
2012 தட்டத்தின் மறையாது பாத்திமா மலையாளம்
2013 ரொமன்ஸ் எலேனா மலையாளம்
நவீன சரஸ்வதி சபதம் ஜெய்ஸ்ரீ தமிழ்
2014 ஜில்லா மகாலட்சுமி தமிழ்
ஜூலியட் - காதல் உள்ள இடியட் தெலுங்கு படபிடிப்பில்
பணம் ரத்னம் பியா மலையாளம் படபிடிப்பில்

சின்னத்திரைத் தொடர்கள்

[தொகு]
ஆண்டு தொடர்கள் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2001 ராஜா ராஜேஸ்வரி நல்லம்மா தமிழ்
2007 மை டியர் பூதம் கௌரி தமிழ்
தென்மொழியல் தமிழ்
2009 அரசி காவேரி தமிழ்
2010 சிவமயம் பொன்னி தமிழ்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dundoo, Sangeetha Devi (12 April 2021). "Nivetha Thomas: Enacting Pallavi in 'Vakeel Saab' came with responsibility". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/nivetha-thomas-on-stepping-into-taapsee-pannus-shoes-for-vakeel-saab/article34302343.ece. 
  2. "Nivetha Thomas is still getting used to attention". The Hindu. 6 July 2017. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
  3. i_nivethathomas. "Reliving 02.11.1995 😊" (Tweet). Missing or empty |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதா_தாமஸ்&oldid=4100112" இலிருந்து மீள்விக்கப்பட்டது