பகாருயோங்

மலையபுரம்
Malayapura
Pagaruyung
ملاياڤورا
Pagaruyung Dārul Qarār
1347–1833
மூன்று வண்ணங்கள் (கருப்பு, சிவப்பு, மஞ்சள்)
கொடி
of பகாருயோங்
சின்னம்
தற்போது மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் இந்தோனேசியா பாகாருயோங் மத்திய பிரதேசம் (பச்சை நிறம்)
தற்போது மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் இந்தோனேசியா பாகாருயோங் மத்திய பிரதேசம் (பச்சை நிறம்)
தலைநகரம்பத்து சங்கார், பகாருயோங்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம், மினாங்கபாவு, மலாய்
சமயம்
இந்து-பௌத்தம்
(முதல் காலக்கட்டம்),
(ஆன்ம வாதம், இசுலாம்
(கடைசி காலக்கட்டம்)
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான்
மகாராஜா
 
• 1347–1375
(முதல் அரசர்)
ஆதித்தியவர்மன்
(Adityawarman)
• 1789–1833
கடைசி அரசர்)
சுல்தான் தங்கால் ஆலாம்
வரலாறு 
• தொடக்கம்
1347
1833
முந்தையது
பின்னையது
தர்மசிரயா
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்
இந்திரபுர இராச்சியம்
தற்போதைய பகுதிகள்இந்தோனேசியா

பகாருயோங் அல்லது மலையபுரம் ஆங்கிலம்: Pagaruyung; Malayapura; Malayupura) [1] மினாங்கபாவு: Karajaan Pagaruyuang; Pagaruyung Dārul Qarār) என்பது 18-ஆம் நூற்றாண்டில் சுமத்ரா தீவில் இருந்த ஒரு பேரரசு ஆகும். மேற்கு சுமத்ராவின் மினாங்கபாவ் மன்னர்களின் வசிப்பிடமாகவும்; ஓர் இராச்சியமாகவும் இருந்தது. முந்தைய மலையபுரம் அரசு, தற்போது இந்தோனேசியாவில் பகாருயோங் என்று அழைக்கப்படுகிறது.

தற்போதைய காலத்தில் பகாருயோங் என்பது இந்தோனேசியா, பத்துசங்கார், தானா டாத்தார் பிராந்தியத்தின் தஞ்சோங் இமாஸ் துணை மாவட்டத்தில் ஒரு கிராமமாக உள்ளது.[2]

பகாருயோங் நிறுவப்படுவதற்கு முன்பு, பகாருயோங் இராச்சியம் மலையபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) பதிவுகளின்படி சுவர்ணபூமி என்று முன்பு அழைக்கப்பட்ட சுமத்திரா நிலப்பகுதியில் பகாருயோங் இராச்சியத்தை ஆதித்தியவர்மன் என்பவர் தோற்றுவித்ததாக அறியப்படுகிறது.

வரலாறு

[தொகு]

14-ஆம் நூற்றாண்டில், ஆதித்தியவர்மன் எனும் சாவக அரசர், ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். அதன் பின்னணியில் ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் மினாங்கபாவு பேரரசை தோற்றுவித்தார்.[3][4] மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவு பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆதித்யவர்மன், 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் மினாங்கபாவு பேரரசை ஆட்சி செய்தார்.

மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் ஆதித்தியவர்மன். இந்த மலையபுரம் (Malayapura), தற்போது பகாருயோங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.[5][6]

ஆதித்தியவர்மன்

[தொகு]

1309-இல் இருந்து 1328 வரை, மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயநகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆதித்தியவர்மன். இவர் திரிபுவன இராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்தியவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவு பேரரசைத் தோற்றுவித்தார்.[7]

ஆதித்தியவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவு பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். இராஜா ஆலாம், இராஜா ஆடாட், இராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக இராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள்.[8][9]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Casparis 1975.
  2. Bosch 1931.
  3. Hardjowardojo, R.P., (1966), Adityawarman, Sebuah Studi tentang Tokoh Nasional dari Abad XIV, Djakarta: Bhratara.
  4. Brandes, J.L.A. , (1897), Pararaton (Ken Arok) of het boek der Koningen van Tumapěl en van Majapahit, Uitgegeven en toegelicht, Batavia: Albrecht; 's Hage: Nijhoff, VBG 49.1.
  5. Casparis, J.G. (1975). Indonesian palaeography: a history of writing in Indonesia from the beginnings to C. A, Part 1500. E. J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-04172-1.
  6. Bosch, FDK (1931). De rijkssieraden van Pagar Roejoeng Overdr (in டச்சு). uit het Oudheidkundig Verslag 1930, Batavia. pp. 49–108. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  7. Brandes, J.L.A. , (1897), Pararaton (Ken Arok) of het boek der Koningen van Tumapěl en van Majapahit, Uitgegeven en toegelicht, Batavia: Albrecht; 's Hage: Nijhoff, VBG 49.1.
  8. Abdullah, Taufik (October 1966). "Adat and Islam: An Examination of Conflict in Minangkabau". Indonesia (Indonesia, Vol. 2) 2: 1–24. doi:10.2307/3350753. https://archive.org/details/sim_indonesia_1966-10_2/page/1. 
  9. Reid, Anthony (2005). An Indonesian Frontier: Acehnese and Other Histories of Sumatra. National University of Singapore Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-69-298-8.
  • Bosch, Frederik David Kan (1930). De rijkssieraden van Pagar Roejoeng (in டச்சு). Batavia: Oudheidkundig Verslag (Archaeological Report). pp. 49–108.
  • Dobbin, Christine (1977). "Economic change in Minangkabau as a factor in the rise of the Padri movement, 1784–1830". Indonesia 23 (1): 1–38. doi:10.2307/3350883. 
  • "Malay seal inscriptions: a study in Islamic epigraphy from Southeast Asia". II. (2002). School of Oriental and African Studies, University of London. British Library, ILS catalogue number: 12454119. 
  • John N. Miksic (2004). "From megaliths to tombstones: the transition from pre-history to early Islamic period in highland West Sumatra.". Indonesia and the Malay World 32 (93): 191–210. doi:10.1080/1363981042000320134. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாருயோங்&oldid=4175645" இலிருந்து மீள்விக்கப்பட்டது