பண்பலை ஒலிபரப்பு
பண்பலை அல்லது எப்.எம். அதாவது Frequency Modulation; FM) என்பது வானொலித் தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும். வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் பணிபுரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் அல்லது பண்பேற்றம் பெறுகின்றன.
பண்பேற்றம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பேற்றம் (எஃப்.எம், FM) எனப்படும். அடுத்ததை வீச்சுப் பண்பேற்றம் (ஏ.எம், AM) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் ஏ.எம் ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் எஃப்.எம் ஒலிபரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக் காட்சியில் எஃப்.எம் மூலம் ஒலியும், ஏ.எம் மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பண்பலை ஒலிபரப்பு பற்றிய நூலக ஆதாரங்கள் |
- U.S. Patent 19,41,066
- U.S. Patent 37,08,623 Compatible Four Channel FM System
- Introduction to FM MPX
- Frequency Modulation (FM) Tutorial
- Stereo Multiplexing for Dummies Graphs that show waveforms at different points in the FM Multiplex process
- Factbook list of stations worldwide
- Invention History – The Father of FM
- Audio Engineering Society
- FM Broadcast and TV Broadcast Aural Subcarriers பரணிடப்பட்டது 2011-12-23 at the வந்தவழி இயந்திரம் - Clifton Laboratories