பத்மப்பிரியா

பத்மப்பிரியா
பிறப்புபத்மலோச்சனி
கருநாடகம், இந்தியா
இறப்பு16 நவம்பர் 1997
தியாகராய நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1974–1995
வாழ்க்கைத்
துணை
சீனிவாசன்
(தி. 1983; ம.மு. 1984)
பிள்ளைகள்வாசுமதி (மகள்)

பத்மப்ரியா (Padmapriya, பிறப்பு பத்மலோச்சனி ; இறப்பு 16 நவம்பர் 1997) என்பவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். தெலுங்கில் இவரது முதல் படம் அடபில்லலா தன்றி (1974). கன்னடத்தில், இவர் பங்காரத குடி (1976) மூலம் அறிமுகமானார். இவர் 1970 களின் பிற்பகுதியில் பிரபலமான நடிகையாக இருந்தார். ஒரே ஆண்டில் (1978) - ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட், தாய்க்கே தக்க மகா, சங்கர் குரு ஆகிய மூன்று கன்னட வெற்றித் திரைப்படங்களில் புகழ்பெற்ற ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் நகைச்சுவைப் படமான நாரத விஜயா மற்றும் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட படாத ஹூ ஆகியவற்றில் அனந்த் நாக் ஜோடியாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. இவர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் நான்கைந்து படங்களில் நடித்தார். ஸ்ரீநாத், அசோக், லோகேஷ் ஆகிய கன்னட நடிகர்களுடனும் நடித்தார்.

1974 மற்றும் 1981 க்கு இடையில் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரைப்படங்களில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த இவர், வாழ்துங்கள், வைர நெஞ்சம், மோகனப் புன்னகை, வாழ்ந்து காட்டுகிறேன், குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். வைர நெஞ்சம் மற்றும் மோகனப் புன்னகை ஆகிய படங்களில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு ஜோடியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் இளவரசி வேடத்தில் நடித்தார்.[1] முதன்மையாக தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த இவர் கிட்டத்தட்ட 80 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பத்மப்ரியா தென்னகத்தின் ஹேம மாலினியாக கருதப்பட்டார்.[2] பத்மப்ரியா கர்நாடகத்தில் பிறந்தவர். 1983 இல், இவர் சீனிவாசனை மணந்தார். இந்த இணையருக்கு வசுமதி என்ற மகள் உள்ளார். திருமணமான ஒரு ஆண்டுக்குப் பிறகு, தம்பதியினர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலம் இழுத்துச் சென்றது. விவாகரத்துக்குப் பிறகு, பத்மப்ரியா தனது பெற்றோருடன் 13 ஆண்டுகள் தி. நகரில் வாழ்ந்தார்.

இறப்பு

[தொகு]

பத்மப்ரியா 16 நவம்பர் 1997 அன்று இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு, மகள் வசுமதி திரையுலகில் நுழைய முயன்று அதில் தோல்வியுற்றார். பின்னர் இங்கிலாந்தில் குடியேறினார்.

பகுதி படத்தொகுப்பு

[தொகு]

பத்மப்ரியா நான்கு தென்னிந்திய மொழிகளிலும் சரளமாகத் தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் தொட்டா சிணுங்கி. அதில் இவர் அம்மா வேடத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு இவர் மிகக் குறைவான படங்களிலேயே நடித்தார்.

தமிழ்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
1975 கரோட்டி கண்ணன் கமலா தமிழ் அறிமுகம்
1975 தியாக உள்ளம் கீதா
1975 வைர நெஞ்சம் கீதா
1975 உறவு சொல்ல ஒருவன் இந்திரா
1975 அணையா விளக்கு ஆனந்தி
1975 வாழ்ந்து காட்டுகிறேன் பங்கஜம்
1975 எங்களுக்கும் காதல் வரும்
1976 உண்மையே உன் விலையென்ன ரமா
1977 சொர்க்கம் நரகம் ராதா
1977 பெருமைக்குரியவள் சாந்தி
1977 தேவியின் திருமணம்
1977 அன்று சிந்திய ரத்தம் ரோகினி
1978 வாழ்த்துங்கள்
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இளவரசி பாமினி
1978 குங்குமம் கதை சொல்கிறது
1978 ஆயிரம் ஜென்மங்கள் ராதா
1978 வருவான் வடிவேலன்
1978 அக்னி பிரவேசம்
1979 சிரி சிரி மாமா
1979 குப்பத்து ராஜா கஸ்தூரி
1980 நீரோட்டம் கண்மணி
1981 மோகனப் புன்னகை பாமா
1984 இதயம் தேடும் உதயம்
1990 புது வாரிசு பார்வதி
1991 நல்லதை நாடு கேட்கும் மாலா [3]
1994 காதலன் பிரபுவின் அம்மா
1995 காந்தி பிறந்த மண் பத்மா
1995 தொட்டாச்சிணுங்கி லட்சுமி தமிழில் கடைசிப் படம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திரையுலகிலிருந்தே ஒதுங்கத் தயார்". Kalki. 27 October 1996. p. 71. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  2. "'ತಾಯಿಗೆ ತಕ್ಕ ಮಗ ನಟಿ ಪದ್ಮಪ್ರಿಯ ಬದುಕಿನಲ್ಲಿ ಏನೆಲ್ಲಾ ಆಗಿಹೋಯ್ತು'-Ep32-Bhargava-Kalamadhyama-#param".
  3. Nallathey Nadu Ketkum | M.G.R Super hit Tamil movie | Jeppiaar,Bathma Priya,Gouthami,Rekha (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-07-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மப்பிரியா&oldid=4119803" இலிருந்து மீள்விக்கப்பட்டது