பாகன் (மியான்மார்)
பாகன் ပုဂံ பகன் | |
---|---|
ஆள்கூறுகள்: 21°10′N 94°52′E / 21.167°N 94.867°E | |
நாடு | மியான்மர் |
மியான்மரின் பிராந்தியம் | மண்தாலே பிரதேசம் |
Founded | 9 வது நூற்றாண்டு |
பரப்பளவு | |
• மொத்தம் | 104 km km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
மக்கள்தொகை | |
• Religions | தேரவாத பௌத்தம் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
பாகன் அல்லது பகன் மியான்மரில் மண்தாலே பிரதேசத்தில் உள்ள பண்டைய நகரம். 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை, பாகன் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது, பின்னர் நவீன மியான்மர் என்ற ஒருங்கிணைத்த பகுதியை உருவாக்கிய முதல் பேரரசு என்ற பெயரை பெற்றது. பாகன் இராச்சியம் உச்சத்தில் இருந்த பொழுது 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், 10,000 க்கும் மேற்பட்ட பெளத்த கோயில்கள், தூபிகள் மற்றும் மடாலயங்கள் ஆகியவை பாகன் சமவெளிகளில் கட்டப்பட்டன. இதில் 2,200 க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் தூபிகள்(பகோடாக்கள்) இன்றும் உள்ளன.
பாகன் தொல்பொருளியல் மண்டலம், மியான்மரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. எந்தளவுக்கு என்றால் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் அளவுக்கு பாகனையும் விரும்பிப் பார்க்கிறார்கள். [1]
வரலாறு
[தொகு]9 முதல் 13 வது நூற்றாண்டு வரை
[தொகு]பர்மிய வரலாற்றின் படி, பாகன் இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது, மேலும் கிமு 849 ஆம் ஆண்டில் மன்னர் பயின்பயாவால் கட்டமைக்கப்பட்டது. [2] இவர் பாகன் வம்சாவழியின் 34 காவது வாரிசாக இருந்தார். இருப்பினும் பிரதான ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பாகன் ஒன்பதாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் மிர்மான் மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நாஞ்சோ இராச்சியத்தில் இருந்து இராவாதி பள்ளதாக்கிறகுள் வந்ததாக நம்பப்படுகிறது. 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பியு நகரத்தின் மாநிலங்களில் ஒன்றாக இருந்தது, பர்மிய மக்களின் வளர்ச்சிக் காரணமாக பின்னர் ஆட்சி அதிகாரம் பர்மிய மக்களிடம் வந்தது.
1044 ஆண்டு முதல் 1287 ஆண்டு வரையான காலப்பகுதியில் பாகன் தலைநகராகவும், பாகன் பேரரசின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகவும் இருந்தது. பகான் சமவெளிகளில் 104 சதுர கிலோமீட்டர் (40 சதுர மைல்) பரப்பளவில் 250 ஆண்டுகளுக்கு மேலாக, பாகனின் ஆட்சியாளர்களால் 10,000 ஆன்மீக நினைவுச் சின்னங்கள் (சுமார் 1000 தூபிகள், 10,000 சிறு கோவில்கள் மற்றும் 3000 மடாலயங்கள்) [3] கட்டப்பட்டது. செழிப்பாக நகரம் வளர்ந்து, பெருமை பெற்றது. மதம் மற்றும் மதச்சார்பற்ற படிப்புகளுக்கு ஒரு பெருநகர மையமாக மாறியது, பாலி மொழியில் இலக்கணம் மற்றும் தத்துவ-உளவியல் (அபிதாமா) போன்ற ஊக்கத்தொகையோடு கூடிய படிப்புகளுக்கு சிறப்புப் பெற்றது இதோடு மேலும் பல பாடப் பிரிவுகள் நூல், ஒலியியல், இலக்கணம், ஜோதிடம், இரசவாதம், மருத்துவம் மற்றும் சட்ட ஆய்வுகள் ஆகியவற்றுக்கும் சிறப்புப் பெற்றது. [4] இந்தியா, இலங்கை மற்றும் கெமர் நாடுகள் வரை இந்த நகரத்தின் புகழ் பரவி, துறவிகள் மற்றும் மாணவர்களை ஈர்த்தது.
பாகன் கலாச்சாரத்தில் மதம் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இது பியு சகாப்தத்தின் தொடர்ச்சியாக இருந்தது. அங்கு தேரவாத பௌத்தம் மற்றும் மஹாயான பௌத்தம் இரண்டும் மக்களால் பின்பற்றப்பட்டு இருந்தது. இது தவிர தாந்திரிக் புத்தமதம், பல்வேறு இந்து மதப் (சைவம், வைனவம்) பள்ளிகள், இது தவிர உள்ளூர் ஆன்மீக (நாட்) நம்பிக்கைகளும் இருந்தன. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தேரவாத பௌத்தம்திற்கு மன்னரின் ஆதரவு கிடைக்கப் பெற்றதால் பௌத்த பாடசாலைகள் படிப்படியாக முதன்மையான மதமாக மாற வழிவகுத்தது, பிற மதங்கள் மற்றும் மரபுகள் அனைத்தும் படிப்படியாக குறைந்தது ஒரு கட்டத்தில் முழுமையாக மறைந்துவிட்டது. [4]