பானாயி (தெய்வம்)
பானாயி ( மராத்தி: बाणाई Bāṇāi )அல்லது பானு; இந்து சமயத்தில் வழிபடப்படும் பெண் தெய்வம் ஆவார். இவர் தக்காணத்தில், சிவன் கடவுளின் வடிவமாக வணங்கப்படும் கண்டோபா தெய்வத்தின் இரண்டாவது மனைவி ஆவார். – பெரும்பாலும் இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இவர் வழிபடப்படுகிறார். கண்டோபா ஜெஜூரியின் மன்னராகச் சித்தரிக்கப்படுகிறார். கண்டோபாவின் பிரதான கோயிலில் பானுவுக்கு சிலை எதுவும் இல்லை. சில மரபுகள் அவளுக்கு சட்டபூர்வமான மனைவியின் அந்தஸ்தைக் கொடுக்கவில்லை, அவளை கண்டோபாவின் காமக்கிழத்தியாகக் கருதுகின்றன.
கண்டோபா தொடர்பான பாடல்கள் பனாயியைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குறித்த நாட்டுப்புற பாடல்களின் மையப் பொருளாக விளங்குகிறார். பானாயி செம்மறி ஆடுகளை வளர்க்கும் சாதியான தங்கர் சாதி என்று கருதப்படுகிறது, சில சமயங்களில் அவர் கந்தர்வ தோற்றம் கொண்டதாகக் கருதப்படுகிறது. வாய்வழி மரபுகள் முக்கியமாக கண்டோபாவுடனான அவரது திருமணத்தின் கதையையும் அவரது முதல் மனைவி மல்சாவுடனான மோதல்களையும் விவாதிக்கின்றன . பனாயி என்பது மல்சாவின் நேர்மாறானவர்; ஒன்றாக அவர்கள் கடவுளுடன் இணைந்திருக்கின்றனர். பானாயி மல்சாவுக்கு இணையாகவே கண்டோபாவுடன் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் சித்தரிக்கப்படுகிறார்.
பானாயிக்கு என தனிப்பட்ட கோயில்களோ வழிபாடுகளோ கிடையாது. ஆனால் கண்டோபாவின் மனைவியாக அவரது பெரும்பாலான கோவில்களில் வணங்கப்படுகிறார். அவர் தங்கர் சமூகத்தின் காப்புத் தெய்வம். மேலும் அவர்களின் மந்தைகளின் பாதுகாவலராகவும் வணங்கப்படுகிறார்.
வளர்ச்சி மற்றும் குறியீட்டுவாதம்
[தொகு]கண்டோபா ஐந்து மனைவிகளைக் கொண்ட கடவுள் என்றாலும், அவரது முதல் இரண்டு மனைவிகளான மல்சா மற்றும் பனாய் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இரண்டு மனைவிகளைக் கொண்ட மன்னர் அல்லது கடவுளின் கதை இந்தியா முழுவதும் சில மாறுபாடுகளுடன் மீண்டும் கூறப்படுகிறது: முருகன் மற்றும் அவரது மனைவிகள் தேவசேனா மற்றும் வள்ளி ; வெங்கடாசலபதி, லட்சுமி மற்றும் பத்மாவதி ஆகியன சில எடுத்துக்காட்டுகள். சிவன் , அவரது மனைவிகள் பார்வதி மற்றும் கங்கை ஆகியவர்களைப் பற்ரி புராணங்களில் கூறப்பட்டுள்ளன. [1]
பானாயி போன்ற பழங்குடிப் பெண்ணை திருமணம் செய்யும் கடவுளின் கருப்பொருள் தக்காணப் பகுதி முழுவதும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது; முருகனுடன் வள்ளியின் திருமணம் மற்றொரு உதாரணம். [2] தக்காணம் முழுவதும் உள்ள தெய்வங்கள் ( கேரளா மற்றும் தமிழ்நாடு வரை கூட) பெரும்பாலும் இரண்டு மனைவிகளைக் கொண்டுள்ளன; ஒரு உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனைவியும், மற்றொரு சமூகம் கீழ்சாதி அல்லது பழங்குடியினர் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கடவுளின் மனைவியாகின்றனர்.[3] பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கண்டோபாவின் மனைவிகள் இந்த சமூகங்களுடன் கடவுளின் கலாச்சார தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள், அவர்கள் தங்கள் சமூகத்தின் புரவலர் கடவுளாக வணங்கப்படுகிறார்கள்.[1]
மகாராஷ்டிராவில் (குறிப்பாக தங்கர்களுடன் ) பானு சட்டப்பூர்வ மனைவியாகக் கருதப்படுகையில், கர்நாடகாவின் குருபாக்கள் அவளை ஒரு காமக்கிழத்தியாக கருதுகின்றனர். [4] மல்சா உயர் சாதி லிங்காயத்து வணிகர் (வாணி) சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பானு ஒரு தங்கர் (மேய்ப்பன் சாதி) என்று வர்ணிக்கப்படுகிறார், இது "வெளியில்" இருப்பவர்கள் எனக் குறிக்கப்படும் தங்கர்கள், கவ்லி, குருபா ( கவுடா ) போன்ற உயரடுக்கு அல்லாத காடுகளில் வாழும் சாதிகளுடன் தொடர்புபடுத்துகிறது. சில மரபுகள் பனாயை காவ்லி (இடையர் சாதி) அல்லது கோலி (மீனவர் சாதி) என்று கருதுகின்றன. [5] கர்நாடகாவில், அவர் குர்பட்டியவ்வா என்று அழைக்கப்படுகிறார், மேலும் அங்கு அவர் ஒரு குருபா ஆவார்.
பானு மல்சாவிற்கு முரண்பாடானவர். மல்சா கண்டோபாவுடன் வழக்கமான சடங்குமுறைகளுடன் திருமணம் செய்து கொண்டார். மறுபுறம், பனாய் கடவுளால் பிடிக்கப்பட்ட பின்னர் காதல் திருமணம் செய்துகொண்டார்.. மல்சா தூயவர்; அழகற்றவர்; பொறாமைக்குணம் உடையவர்;மேலும் ஒரு நல்ல சமையல்காரர் என்று விவரிக்கப்படுகிறார்; பானு தூய்மையற்றவர்; பாலுணர்வு எழுப்பும் அளவிற்கு அழகானவர்; உறுதியானவர்; ஆனால் சமைக்கத் தெரியாது. மல்சா என்பது "கலாச்சாரத்தை" குறிக்கிறது, அதே நேரத்தில் பானு"இயற்கையைக்" குறிக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாகக் கடவுள்-மன்னர் கண்டோபாவுக்கு உதவுகிறார்கள். [1]
வாய்வழி புனைவுகள் மற்றும் நூல்கள் நாட்டுப்புற தெய்வமான கண்டோபாவின் சமஸ்கிருதமயமாக்கல் செயல்முறையைத் தொடங்குகின்றன, அவரை இந்து கடவுளான சிவனாக உயர்த்துவதன் மூலம் அவரது இரண்டு முக்கிய மனைவிகளான மல்சா மற்றும் பானாயி இருவரும் பார்வதி மற்றும் கங்கைக்கு சமமானவர்களா ஆகின்றனர்.. [6] கண்டோபா தொடர்பான முக்கிய வேதமான சமஸ்கிருத மல்ஹாரி மகாத்மியத்தில் பானாய் தோன்றவில்லை, இருப்பினும் கங்கை சொர்க்கத்திலிருந்து வருவதைக் குறிப்பிடுகிறது. பானாய் (கங்கா) மல்சா (பார்வதி) உடன் சண்டையிட்டு, இறுதியில் இருவரும் ஒன்றாவ்தான செய்தியுடன் முடிவடைகிறது. [1] சில தங்கர்கள் பானாயியையும் பார்வதியின் ஒரு வடிவமாக கருதுகின்றனர். [7]
பனாயுடன் தொடர்புடைய புராணங்களின் முக்கிய ஆதாரம் ஓவி ( பாடா ) எனப்படும் கந்தோபாவைப் பற்றிய பாடல்கள் ஆகும்.இவை வாக்யாஸ் என்ற ஆண் கவிஞரும், முரளீஸ் என்ற பெண் கவிஞரும் பாடிய நாட்டுப்புற பாடல்கள் ஆகும். இரவு முழுவதும் விழித்திருந்து கண்டோபாவைப் புகழ்ந்து கவிதைகள் பாடுகின்றனர். இந்த பாடல்கள் கண்டோபாவின் மனைவிகளுடனான உறவு மற்றும் மனைவிகளின் பரஸ்பர உறவுகள் பற்றி பேசுகின்றன. அவை மல்சா மற்றும் பானாயீயை மையமாகக் கொண்டவை, பெரும்பாலும் அவர்களின் சண்டைகளைப் பற்றி இப்பாடல்களில் விவரிக்கிறார்கள். [8] கண்டோபா மற்றும் பானாயீயின் திருமணத்தை மையமாகக் கொண்ட பல கதைகள் தங்கர் நாட்டுப்புற பாடல்களில் மையக் கருப்பொருள்களாக திகழ்கின்றன. [9] வர்காரி துறவி ஷேக் முஹம்மது (1560-1650) தனது யோகா-சம்கிராமாவில் கண்டோபாவை இழிவுபடுத்துகிறார், மேலும் அவரை "பாலியல் ஆர்வம்" காரணமாக பானாயீயைத் தேடும் "பைத்தியக் கடவுள்” என்று அழைக்கிறார், இது பனாயின் திருமணக் கதை இந்த சகாப்தத்தால் சமூகத்தில் அக்காலத்தில் பரவலாக நன்கு நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.[10]
அறிஞர் குந்தர்-டயட்ஸ் சோந்தைமர் கருத்துப்படி, பானாயின் புராணக்கதை இந்து காவியமான மகாபாரதத்திலிருந்து துஷ்யந்தன் மற்றும் சகுந்தலா கதையுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளது. [1] இன்னொரு நாட்டுப்புற கடவுளான மஸ்கோபா (பைரவா) தனது மனைவி பலுரானி அல்லது பலாவைத் தடைகளை மீறிப் பெற்ற கதையும் பானாயை வெல்லும் கண்டோபாவின் முயற்சியைப் போன்றது. [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sontheimer in Feldhaus, pp. 116–8
- ↑ Sontheimer in Hiltebeitel pp. 323–4
- ↑ Sontheimer in Channa pp. 32–33
- ↑ 4.0 4.1 Sontheimer in Channa p. 35
- ↑ Sontheimer, Günther-Dietz (1988). "The Religion of Dhangar Nomads". The Experience of Hinduism: Essays on Religion in Maharashtra. SUNY Press. pp. 124–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88706-662-7.
- ↑ Stanley in Hiltebeitel p. 278
- ↑ Sontheimer in Feldhaus, p. 127
- ↑ Sontheimer in Feldhaus, p. 115
- ↑ Sontheimer in Feldhaus, pp. 116–32
- ↑ Sontheimer in Barz & Horstmann, p. 39