பாரிஸ் பல்கலைக்கழகம்
Université de Paris | |
இலத்தீன்: Universitas magistrorum et scholarium Parisiensis | |
குறிக்கோளுரை | Hic et ubique terrarum (இலத்தீன்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | இங்கும் பாரின் எந்தப் பகுதியிலும் |
வகை | Corporative (ca. 1150-1793), public (1896-1970) |
உருவாக்கம் | Circa 1150-1793, 1896-1970 |
அமைவிடம் | , |
வளாகம் | Urban |
பாரிஸ் பல்கலைக்கழகம் (பிரெஞ்சு: Université de Paris) பிரான்சுத் தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட மூத்தப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. 12 ஆம் நூற்றாண்டின் நடுவே நிறுவப்பட்டாலும், 1160 மற்றும் 1250 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறியப்படுகிறது. இடையில் பல மாற்றங்கள் பெற்றும், 1970 ஆம் ஆண்டுவாக்கில் இயங்காமலும், பின்னர் நிறுத்தப்பட்டும், 13 தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பல்கலை சில வேளைகளில் சோர்போன் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம், 1257 ஆம் ஆண்டுவாக்கில் இராபர்ட் தே சோர்போன் என்பவரால் நிறுவப்பட்ட கல்லூரியாகும். தற்போதுள்ள 13 பல்கலைகளில் முதல் நான்கு பல்கலைக்கழகங்கள் அதே கட்டிடத்தில் இயங்கி வந்தன, பிற மூன்றின் பெயர்களிலும் "சோர்போன்" என்ற பெயரும் உள்ளது..
பாரிசிலுள்ள பல்கலைக்கழகங்கள் தற்போது தன்னாட்சியில் இயங்குகின்றன. பாரிசு கழகத்திற்கு மாற்றாக சில க்ரெதெயில் கழகத்தின்கீழும், மற்றும் சில வெர்செய்லசு கழகத்தின் கீழும் இயங்குகின்றன. இந்த 13 பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பொறுப்பை, ஒரே வேந்தரே மேற்பார்வையிட்டு வந்தார். அலுவலகங்கள் சோர்போனில் இருந்தன. 2006ஆம் ஆண்டின் கணக்குப் படி, மௌரிசு கெனெல் என்பவர்தான் வேந்தராக ஆக உள்ளார். இவற்றின் துணை வேந்தராக பியரி கிரிகோரி பணியாற்றுகிறார். இந்த இடத் தொடர்பினாலும், வரலாற்றுத் தொடர்புகளாலும் இவை ஒட்டுமொத்தமாக பாரிஸ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. மற்றபடி, கல்வி வழங்குவதற்கென பாரிஸ் பல்கலைக்கழகம் என்று ஏதுமிருந்தது இல்லை. .
இந்த பல்கலைக்கழகம் கலை, மருத்துவம், சட்டம், இறையியல் ஆகிய நான்கு துறைகளுக்கான ஆசிரியர்களைக் கொண்டிருந்தது. கலைத் துறை குறைந்த மதிப்பில் இருந்தது மட்டுமின்றி அதிக மாணவர்களையும் கொண்டிருந்தது. ஏனென்றால் மேற்படிப்புகளைப் படிக்க கலை பயின்றிருக்க வேண்டும். மாணவர்கள் மொழி அல்லது நாடு வாரியாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அந்த நான்கு பிரிவுகள்: பிரான்சு, நோர்மாண்டி, பிகர்டி மற்றும் இங்கிலாந்து ஆகியன. நாடுவாரியாக அனுமதிக்கப்படுவதை விட அதிகம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். ஏனென்றால் இங்கிலாந்து-ஜெர்மனி என்ற நாட்டுப் பிரிவில் ஸ்காண்டினேவியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த மாணவர்களும் சேர்ந்தனர்.
தற்போதைய பல்கலைக்கழகங்கள்
[தொகு]பாரிஸ் பல்கலைக்கழகமத்தின் பதிமூன்று பதிலாள் பல்கலைக்கழகங்கள் தற்பொழுது பிரிந்து இல் ட பிரான்சு பிரதேசத்தில் மூன்று கல்விக்கழகங்களாக உள்ளன.
பதிமூன்று பதிலாள் பல்கலைக்கழகங்கள்
[தொகு]I | பந்தியோன்-சோர்போன் பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | ஹௌடெஸ் ஈட்யூட்ஸ்-சோர்போன் கலை மற்றும் கைவினைகள் |
II | பந்தியோன்-அஸ்ஸஸ் பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | |
III | பாரிஸ் III சோர்போன் நுவெல்லே பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | சோர்போன் பாரிஸ் நகரம் |
IV | பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | சோர்போன் பல்கலைக்கழகங்கள் |
V | பாரிஸ் டெஸ்கார்டிஸ் பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | சோர்போன் பாரிஸ் நகரம் |
VI | பியரே மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | சோர்போன் பல்கலைக்கழகங்கள் |
VII | பாரிஸ் 7 - டெனிஸ் டிடேரொட் பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | சோர்போன் பாரிஸ் நகரம் |
VIII | பாரிஸ் 8 பல்கலைக்கழகம் | கிரேடெயில் கல்விக்கழகம் | பாரிஸ் விளக்குப் பல்கலைக்கழகம் |
IX | பாரிஸ் டௌபைன் பல்கலைக்கழகம் | பாரிஸ் கல்விக்கழகம் | பாரிஸ் அறிவியல் மற்றும் கடிதங்கள் - லத்தீன் காலாண்டு |
X | பாரிஸ் ஔவெஸ்ட் பல்கலைக்கழகம் | வேர்செயில்சு கல்விக்கழகம் | பாரிஸ் விளக்குப் பல்கலைக்கழகம் |
XI | பாரிஸ்-சட் 11 பல்கலைக்கழகம் | வேர்செயில்சு கல்விக்கழகம் | யூனிவேர்சட் பாரிஸ் |
XII | பாரிஸ் 12 வல் டெ மார்னே பல்கலைக்கழகம் | கிரேடெயில் கல்விக்கழகம் | பாரிஸ்-எஸ்ட் பல்கலைக்கழகங்கள் |
XIII | பாரிஸ் 13 பல்கலைக்கழகம் | கிரேடெயில் கல்விக்கழகம் | சோர்போன் பாரிஸ் நகரம் |
ஏழு பல்கலைக்கழகங்களின் கூட்டணி
[தொகு]இந்த பல்கலைக்கழகங்கள் பெரும்பாலான, கல்லூரி, பல்கலைக்கழக வழிகளில் புதிய குழுக்கள் இணைந்து, அல்லது (2013) அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சில அமைப்புகளின் ஏனைய வடிவங்களும் தேர்வு பொதுவாக, இந்த குழுக்கள், ஒரு ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி மையம் ( Pôle de recherche மற்றும் டி முகமைகள் சுப்பீரியர், அல்லது பிரெஸ்) சட்ட வடிவம் எடுக்கின்றன. இந்த குழுக்கள் பல்கலைக்கழகங்கள் உயர்நிலைப் பள்ளிகளின் கலப்பு ஆகும்.
குழுப்படுத்துதல் | பல்கலைக்கழகங்கள் | கல்லூரிகள் |
---|---|---|
ஹௌடெஸ் ஈட்யூட்ஸ்-சோர்போன் கலை மற்றும் கைவினைகள் | பாரிஸ் I பந்தியோன்-சோர்போன் பல்கலைக்கழகம் | Arts et Métiers ParisTech Conservatoire National des Arts et Métiers École française d'Extrême-Orient School for Advanced Studies in the Social Sciences École Nationale des Chartes École pratique des hautes études ESCP Europe ENSCI - Les Ateliers |
பாரிஸ் விளக்குப் பல்கலைக்கழகம் | மேற்கு பாரிஸ் எக்ஸ் நாந்தேர் பாரிஸ் 8 பல்கலைக்கழகம் | |
பாரிஸ் அறிவியல் மற்றும் கடிதங்கள் - லத்தீன் காலாண்டு | பாரிஸ் டௌபைன் பல்கலைக்கழகம் | பிரான்ஸ் கல்லூரி École nationale supérieure des arts décoratifs Chimie ParisTech École nationale supérieure des beaux-arts École normale supérieure Conservatoire national supérieur d'art dramatique ESPCI ParisTech Conservatoire national supérieur de musique et de danse de Paris Observatoire de Paris MINES ParisTech |
சோர்போன் பல்கலைக்கழகங்கள் | பாரிஸ் - சோர்போன் பல்கலைக்கழகம் பியரே மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம் | Muséum National d'Histoire Naturelle University of Technology of Compiegne |
சோர்போன் பாரிஸ் நகரம் | பாரிஸ் III சோர்போன் நுவெல்லே பல்கலைக்கழகம் பாரிஸ் டெஸ்கார்டிஸ் பல்கலைக்கழகம் பாரிஸ் 7 - டெனிஸ் டிடேரொட் பல்கலைக்கழகம் பாரிஸ் 13 பல்கலைக்கழகம் | Sciences-Po Paris Institut national des langues et civilisations orientales École des Hautes Études en Santé Publique Institut de Physique du Globe de Paris |
பாரிஸ்-எஸ்ட் பல்கலைக்கழகங்கள் | மார்னே லா வல்லே பல்கலைக்கழகம் பாரிஸ் 12 வல் டெ மார்னே பல்கலைக்கழகம் | École nationale vétérinaire d'Alfort École nationale des ponts et chaussées École supérieure d'ingénieurs en électronique et électrotechnique |
யூனிவேர்சட் பாரிஸ் | பாரிஸ்-சட் 11 பல்கலைக்கழகம் வெர்செயில்ஸ் செயின்ட்-குவெண்டின்-என்-யவெலைன்ஸ் பல்கலைக்கழகம் எவ்ரி வால் டி எஸ்ஸோன் பல்கலைக்கழகம் | ENS de Cachan இகோல் மையப் பாரிஸ் École supérieure d'électricité |
மேற்கோள்கள்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: "University of Paris". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.
மேலும் படிக்க
[தொகு]- André Tuilier: Histoire de l'Université de Paris et de la Sorbonne ("History of the University of Paris and of the Sorbonne"), in 2 volumes (From the Origins to Richelieu, From Louis XIV to the Crisis of 1968), Paris: Nouvelle Librairie de France, 1997 ;
- Jean-Louis Leutrat: De l'Université aux Universités ("From the University to the Universities"), Paris: Association des Universités de Paris, 1997
- Philippe Rive: La Sorbonne et sa reconstruction ("The Sorbonne and its Reconstruction"), Lyon: La Manufacture, 1987
- Jacques Verger: Histoire des Universités en France ("History of French Universities"), Toulouse: Editions Privat, 1986
வெளியிணைப்புகள்
[தொகு]- பிரான்சில் படியுங்கள் பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- பாரிஸ் அகாதெமி (பிரெஞ்சு)
- Sorbonne - Universités Paris I, III, IV and V (official homepage)
- History of the University of Paris பரணிடப்பட்டது 2013-06-02 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- News coverage of the most recent occupation of the Sorbonne
- Education Authority of Paris (பிரெஞ்சு)
- english language coverage of the struggle against the CPE in France, including the occupations and demonstrations around the Sorbonne