பின்யின்

சீனா, ஏய்னான், செங்சா நகரில் பின்யின் எழுத்துகளைக் கொண்ட மழலையர் பள்ளி நுழைவாயில்

பின்யின் (ஆங்கிலம்: Hanyu Pinyin) என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் (Standard Mandarin Chinese) பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும் (Romanization). ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப் படுத்துவதன்று.[1]

பின்யின் முறையானது, ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள பின் என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், யின் என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ஆன்யூ பின்யின் (Hanyu Pinyin (Hànyǔ Pīnyīn) என அழைக்கின்றனர்.[2]

ஆன்யூ பின்யின் முறையினை சீனாவின் அரசு 1958-இல் ஏற்றுக் கொண்டு 1979-இல் பின்பற்றத் தொடங்கியது. இம்முறை அதற்கு முந்தைய ரோமன் எழுத்து முறைகளாகிய வேடு-கைல்ஸ் (Wade–Giles) முதலியவற்றை நீக்கி முன்வைக்கப்பட்டது. பின்யின் முறை சீர்தரத்திற்கான அனைத்துலக நிறுவனத்தின் (ஐஎஸ்ஓ ISO) ஏற்பும் பெற்றது (ISO-7098:1991). சிங்கப்பூர் அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.ref name="ISO1982">"ISO 7098:1982 – Documentation – Romanization of Chinese". பார்க்கப்பட்ட நாள் 2009-03-01.</ref>[3]

முதலெழுத்துக்கள்

[தொகு]

கவனிக்க: கீழே தரப்படும் தகவல்கள் உறிதிப்படுத்தப்படவேண்டும்.

Bilabial Labio-
dental
Co-
articulated
Alveolar Retroflex Alveolo-
palatal
Palatal Velar
Plosive [p]
b
போவ்
[pʰ]
p
பாவ்
[t]
d
டு
[tʰ]
t
ரு
[k]
g
[kʰ]
k
Nasal [m]
m
மாவ்
[n]
n
நாவ்
Affricate [ts]
z
ட்சு
[tsʰ]
c
ர்சு
[ʈʂ]
zh
ஜுழ்
[ʈʂʰ]
ch
சுழ்
[tɕ]
j
ஜி
[tɕʰ]
q
சீ
Fricative   [f]
f
ஃபவ்
[s]
s
[ʂ]
sh
ஷுழ்
[ʐ] 1
r
ர்
[ɕ]
x
ஷீ
[x]
h
Approximant     [w]2
w
வு
  [ɻ] 1
ழ்
[j] 3
y
யா
Lateral approximant [l]
l
லு

முடிவெழுத்துக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pinyin celebrates 50th birthday". Xinhua News Agency. 2008-02-11. http://www.china.org.cn/english/news/242463.htm. பார்த்த நாள்: 2008-09-20. 
  2. Margalit Fox (14 January 2017). "Zhou Youguang, Who Made Writing Chinese as Simple as ABC, Dies at 111". The New York Times. https://www.nytimes.com/2017/01/14/world/asia/zhou-youguang-who-made-writing-chinese-as-simple-as-abc-dies-at-111.html. 
  3. Shih Hsiu-Chuan (2008-09-18). "Hanyu Pinyin to be standard system in 2009". Taipei Times: p. 2. http://www.taipeitimes.com/News/taiwan/archives/2008/09/18/2003423528. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்யின்&oldid=3827627" இலிருந்து மீள்விக்கப்பட்டது