மகிஷாசுரமர்த்தினி
மகிஷாசுரமர்த்தினி என்பது மகிசாசூரன் எனும் அரக்கனை அழிக்க சக்தி எடுத்த வடிவமாகும். இவரை மகிடாசுர மர்தினி என்றும் கூறுகின்றனர். [1] மகிசாசுரன் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே இறப்பு நேரிட வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். அதனால் சிவபெருமானின் மனைவியான சக்தி, தேவர்களிடமிருந்து சக்திகளைப் பெற்று அவனுடன் போரிட்டு அழித்தார்.
தேவர்கள் கொடுத்த சக்திகளிலிருந்து தோன்றிய உடல்உறுப்புகளின் பட்டியல்.[2]
- சிவபெருமானின் சக்தி - முகம்
- பிரம்மாவின் சக்தி - உடல்
- திருமாலின் சக்தி - பதினெட்டு கரங்கள்
- எமதருமனின் சக்தி - கூந்தல்
- அக்னிபகவானின் சக்தி - கண்கள்
- மன்மதனின் சக்தி - புருவம்
- குபேரனின் சக்தி - மூக்கு
- முருகனின் சக்தி - உதடு
- சந்திரனின் சக்தி - மார்புகள்
- இந்திரனின் சக்தி - இடை
- வருணனின் சக்தி - கால்கள்
கோயில்கள்
[தொகு]மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், திருத்தணி அருகேயுள்ளது.[3]
- ↑ "மகிஷாசுரமர்த்தினி".
- ↑ "மதுரையின் மகிஷாசுரமர்த்தினி! - வாரமலர் - Varamalar - tamil weekly supplements".
- ↑ "Dinakaran - மங்கலம் அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.