மாநகரப் போக்குவரத்துக் கழகம்
நிறுவுகை | 1972 |
---|---|
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில்துறை | பொது போக்குவரத்து |
தாய் நிறுவனம் | பல்லவன் போக்குவரத்து கழகம் லிமிடெட் |
இணையத்தளம் | http://www.mtcbus.org/ |
மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை (Metropolitan Transport Corporation - MTC) சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 42 இலட்சம் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3,365 பேருந்துகளை இயக்குகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன.
தோற்றமும் வளர்ச்சியும்
[தொகு]சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (மண்டலம் - I) 1 ஜனவரி 1972ம் ஆண்டு 1029 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.[1] மேலும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் பிரிக்கப்பட்டு டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் 19 ஜனவரி 1994 முதல் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1 ஜூலை 1997ல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I), டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) என்ற பெயரிலும் மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக 10 ஜனவரி 2001ல் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I) உடன் இணைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
இன்று மொத்தம் 3,637 பேருந்துகள், 25 பணிமனைகள், குரோம்பேட்டையில் பேருந்து கட்டமைக்கும் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகரில் பயணச்சீட்டு அச்சிடும் பிரிவு மற்றும் பட்டுலாஸ் சாலையில் பழுதுபார்க்கும் பிரிவு ஆகியவை இயங்கிவருகின்றன. இத்துறையின் தலைமையகமான பல்லவன் இல்லம் எழும்பூரில் உள்ள பல்லவன் சாலையில் அமைந்துள்ளது.
பேருந்து சேவைகள்
[தொகு]வ.எண் | பேருந்து வகை | சேவை | விளக்கம் | குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ரூ.) 4 கி.மீ.க்கு |
---|---|---|---|---|
1 | வெள்ளைப் பலகை | சாதாரண சேவை | அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும் | 3.00 + 1 |
2 | பச்சைப் பலகை | விரைவு சேவை | சில முக்கியமான நிறுத்தங்களில் மட்டும் நிற்கும் | 5.00 |
3 | நீலப் பலகை | சொகுசுப் பேருந்து | அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும் (வசதியான இருக்கைகள்) | 7.00 |
4 | குளிர்சாதனப் பேருந்து | அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும் (வசதியான இருக்கைகள்) | ||
5 | கரும் பலகை | இரவு சேவை | இரவு 10 மணிக்குப் பிறகு | இருமடங்கு கட்டணம் (6.00, 10.00, 14.00) |
6 | பெண்கள் சிறப்புப் பேருந்து | சாதாரண சேவை (கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில்) | - |
பணிமனைகள்
[தொகு]மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை | ||||||
S. No. | பணிமனை | பணிமனை எண் | பழைய எண் | மண்டலம் | Fleet strength | Scheduled services |
---|---|---|---|---|---|---|
1 | ஆதம்பாக்கம் | AB | J | குரோம்பேட்டை | 49 | 46 |
2 | அடையார் | AD | B | அடையார் | 210 | 195 |
3 | ஆலந்தூர் | AL | K | குரோம்பேட்டை | 138 | 128 |
4 | அம்பத்தூர் | AM | E | அயனாவரம் | 177 | 165 |
5 | அண்ணாநகர் | AN | H | அயனாவரம் | 214 | 197 |
6 | ஆவடி | AV | X | அயனாவரம் | 148 | 136 |
7 | அயனாவரம் | AY | C | அயனாவரம் | 168 | 154 |
8 | பேசின் பிரிட்ஜ் | BB | Nil | தண்டையார்பேட்டை | 45 | 41 |
9 | பேசின் பிரிட்ஜ் | BS | Nil | விருகம்பாக்கம் | 94 | 97 |
10 | பெசண்ட் நகர் | BN | Nil | அடையார் | 27 | 25 |
11 | சென்டரல் | CD | Nil | அயனாவரம் | 178 | 165 |
12 | குரோம்பேட்டை- I | CR | W | குரோம்பேட்டை | 149 | 138 |
13 | குரோம்பேட்டை - II | CW | Nil | குரோம்பேட்டை | ||
14 | எண்ணூர் | EN | K | தண்டையார்பேட்டை | 63 | 59 |
15 | ஜார்ஜ் டவுண் | GT | Z | மந்தைவெளி | 291 | 264 |
16 | கிண்டி | GU | H | சாலிகிராமம் | 64 | 97 |
17 | கிண்டி | GN | J | கொளத்தூர் | 73 | 83 |
18 | ஐயப்பன்தாங்கல் | IY | Y | வடபழனி | 159 | 147 |
19 | கே.கே.நகர் | KN | G | வடபழனி | 185 | 169 |
20 | கொளத்தூர் | KT | P | எண்ணூர் | 169 | 164 |
21 | குன்றத்தூர் | KU | Nil | வடபழனி | ||
22 | மாதவரம் மில்க் காலணி | MM | F | தண்டையார்பேட்டை | 140 | 130 |
23 | மாதாவரம் | MV | K | திருவொற்றியூர் | 20 | 41 |
24 | மந்தைவெளி | MA | B | தி.நகர் | 141 | 191 |
25 | மந்தைவெளி | MN | J | அடையார் | 85 | 79 |
26 | எம்.கே.பி நகர் | MB | Nil | தண்டையார்பேட்டை | ||
27 | பாடியநல்லூர் | PL | Nil | தண்டையார்பேட்டை | ||
28 | பெரம்பூர் | PR | S | அயானாவரம் | 161 | 149 |
29 | பூவிருந்தவல்லி | PM | V, Z | வடபழனி | 179 | 164 |
30 | சைதாப்பேட்டை | SP | M | வடபழனி | 130 | 121 |
31 | செம்மஞ்சேரி | SM | Nil | அடையார் | ||
32 | தாம்பரம் | TA | O | வடபழனி | 222 | 204 |
33 | திருவள்ளூர் | TL | O | வடபழனி | 194 | 184 |
34 | தி்.நகர் | TN | L | வடபழனி | 96 | 90 |
35 | திருவான்மியூர் | TR | R | அடையார் | 149 | 141 |
36 | திருவொற்றியூர் | TV | N | தண்டையார்பேட்டை | 106 | 98 |
37 | தண்டையார்பேட்டை - I | TD | A | தண்டையார்பேட்டை | 140 | 130 |
38 | தண்டையார்பேட்டை - II | TW | T | தண்டையார்பேட்டை | 76 | 71 |
39 | வடபழனி | VP | D | வடபழனி | 189 | 175 |
40 | வியாசர்பாடி | VY | P | தண்டையார்பேட்டை | 130 | 119 |
Total | 3,637 | 3,365 |
இதனையும் காண்க
[தொகு]- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
மேலும் பார்க்க
[தொகு]- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation - SETC)
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation - TNSTC)
ஆதாரங்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]- MTCBus.org - Official Website பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்
பிற இணைப்புகள்
[தொகு]- Bus route info பரணிடப்பட்டது 2007-05-06 at the வந்தவழி இயந்திரம்