மார்த்தா நஸ்பாம்

மார்த்தா நஸ்பாம்
2008-ல் நஸ்பாம்
பிறப்புமார்த்தா க்ரேவென்
மே 6, 1947 (1947-05-06) (அகவை 77)
நியூயார்க்கு நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்மார்த்தா க்ரேவென் நஸ்பாம்
கல்விWellesley College (dropped out)
New York University (BA)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (MA, PhD)
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • The Fragility of Goodness (1986)
  • Sex and Social Justice (1998)
  • Hiding from Humanity (2004)
  • From Disgust to Humanity (2010)
வாழ்க்கைத்
துணை
ஆலன் நஸ்பாம்
(தி. 1969; ம.மு. 1987)
விருதுகள்
  • கியோட்டோ பரிசு (2016)
  • பெர்க்ரூன் பரிசு (2018)
பள்ளி
கல்விக்கழகங்கள்
முனைவர் பட்ட ஆலோசகர்ஜி. இ. எல். அவென்
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செயல்வல்லமை அணுகுமுறை
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
    • அமர்த்தியா சென்
    • எலிசபெத் எஸ். ஆண்டர்சென்[2]
    • லண்டா மார்டீன் அல்காஃப்
    • லுயிசி ஆன்டனி
    • டேவிட் ஜி. ஹெபர்ட்

மார்த்தா க்ரேவென் நஸ்பாம் (Martha Craven Nussbaum, பிறப்பு: மே 6, 1947) ஒரு அமெரிக்க மெய்யியல் அறிஞர் ஆவார். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் நெறிமுறைகள் துறைகளில் எர்ன்ஸ்ட் ஃப்ரண்டு பெருந்தொண்டு பேராசிரியராக இருக்கும் அவர், அங்கு சட்டப் பள்ளி மற்றும் தத்துவவியல் துறையில் கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய தத்துவம், அரசியல் தத்துவம், இருத்தலியல், பெண்ணியம் மற்றும் விலங்குரிமை உள்ளிட்ட நெறிமுறைகள் ஆகிய துறைகளில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பண்டைய கிரேக்க-உரோமானிய இலக்கியங்கள், தெய்வீகவியல், அரசறிவியல் ஆகியவற்றில் இணை நியமனங்களையும் கொண்டுள்ள நஸ்பாம், தெற்காசிய ஆய்வுகள் குழுவின் உறுப்பினராகவும், மனித உரிமைகள் திட்டத்தின் குழு உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதற்கு முன்பு ஹார்வர்ட் மற்றும் பிரௌன் பல்கலைக்கழகங்களில் கற்பித்திருக்கிறார்.[3][4]

தி ஃபிராஜைலிட்டி ஆஃப் குட்னஸ் (1986), கல்டிவேட்டிங் ஹ்யூமானிடி (1997), செக்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் (1998), ஹைடிங் ஃப்ரம் ஹியூமானிடி (2004), ஃப்ரான்டியர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் (2006), ஃப்ரம் டிஸ்கஸ்ட் டு ஹ்யூமானிடி (2010) உள்ளிட்ட பல நூல்களை நஸ்பாம் இயற்றியுள்ளார். அவர் கலை மற்றும் மெய்யியலில் 2016 கியோட்டோ பரிசு, 2018 பெர்க்ரூன் பரிசு, 2021 ஹோல்பெர்க் பரிசு ஆகியவற்றைப் பெற்றவராவார்.[5][6][7]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. Wendland, Aaron James (December 7, 2018). "Martha Nussbaum: "There's no tension in supporting #MeToo and defending legal sex work"". New Statesman. Archived from the original on December 7, 2018. பார்க்கப்பட்ட நாள் December 7, 2018.
  2. Heller, Nathan (December 31, 2018). "The Philosopher Redefining Equality". New Yorker. Archived from the original on May 2, 2019. பார்க்கப்பட்ட நாள் June 14, 2019.
  3. "Martha Nussbaum" பரணிடப்பட்டது அக்டோபர் 25, 2019 at the வந்தவழி இயந்திரம், University of Chicago, accessed June 5, 2012.
  4. Aviv, Rachel (July 18, 2016). "The Philosopher of Feelings" (in en). The New Yorker இம் மூலத்தில் இருந்து October 13, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191013030121/https://www.newyorker.com/magazine/2016/07/25/martha-nussbaums-moral-philosophies. 
  5. "Prof. Martha Nussbaum wins Kyoto Prize". June 17, 2016. Archived from the original on November 19, 2016. பார்க்கப்பட்ட நாள் October 31, 2017.
  6. "Martha Nussbaum Wins $1 Million Berggruen Prize" (in en) இம் மூலத்தில் இருந்து October 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191025020159/https://www.nytimes.com/2018/10/30/arts/martha-nussbaum-berggruen-prize.html. 
  7. "Martha C. Nussbaum | Holbergprisen". holbergprisen.no. பார்க்கப்பட்ட நாள் March 5, 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்த்தா_நஸ்பாம்&oldid=3978691" இலிருந்து மீள்விக்கப்பட்டது