மீனாட்சி பல்கலைக்கழகம்

மீனாட்சி பல்கலைக்கழகம் (Meenakshi University) அல்லது முறையாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்விற்கான அகாதெமி (Meenakshi Academy of Higher Education and Research (MAHER)) இந்தியாவில் தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாகும்.

வரலாறு

[தொகு]

1991ஆம் ஆண்டில் மீனாட்சியம்மாள் பல்மருத்துவக் கல்லூரி உத்திரமேரூரில் துவங்கப்பட்டது.[1] 2004ஆம் ஆண்டு நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கியது. [2]

இதன் வேந்தராக ஏ.என். இராதாகிருட்டிணனும், துணைவேந்தராக டி. குணசாகரனும் உள்ளனர்.

இணைந்த கல்வி நிறுவனங்கள்

[தொகு]
  • மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், ஏனாத்தூர், காஞ்சிபுரம்,
  • மீனாட்சி அம்மாள் பல்மருத்துவக் கல்லூரி, மதுரவாயல், சென்னை,
  • மீனாட்சி பொறியியல் கல்லூரி, கே. கே. நகர்,
  • மீனாட்சி செவிலியர் கல்லூரி, மாங்காடு,
  • பொறியியல் மற்றும் தொழினுட்பத் துறை, மாங்காடு, சென்னை.

கல்வித்துறைகள்

[தொகு]

பட்டப்படிப்புத் துறைகள்

[தொகு]
  • இளநிலை மருத்துவம் இளநிலை அறுவைமருத்துவம்
  • இளநிலை பல்மருத்துவ அறுவை
  • இளநிலை அறிவியல் (செவிலியம்)
  • இளநிலை இயன்முறை மருத்துவம்
  • இளநிலைப் பொறியியல்

பட்டமேற்படிப்புத் துறைகள்

[தொகு]
  • முதுநிலை மருத்துவக் கல்வி
  • முதுநிலை அறிவியல்
  • முதுநிலை பல்மருத்துவ அறுவை
  • முதுநிலை அறிவியல் (செவிலியம்)
  • முதுநிலை இயன்முறை மருத்துவம்
  • முதுநிலைப் பொறியியல்

டாக்டர் மற்றும் முனைவர்

[தொகு]

மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையில்

  • டாக்டர் பட்டப்படிப்பும் (DM,DS)
  • முனைவர் பாடத்திட்டங்களும்

வழங்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "BDS permission orders" (PDF). மீனாட்சி பல்கலைக்கழக வலைத்தளம். Archived from the original (PDF) on 2016-01-31. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "List of Deemed Universities in India". www.icbse.com. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_பல்கலைக்கழகம்&oldid=3567792" இலிருந்து மீள்விக்கப்பட்டது