முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்
முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெரும் விளையாட்டின் ஒரு பகுதி | |||||||
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் 1839ல் ஆப்கானித்தானின் காசுனி கோட்டையை முற்றுகையிடல் | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
ஆப்கானித்தான் அமீரகம் | பிரித்தானியா | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
தோஸ்து முகமது கான் (கைதி) வசிர் அக்பர் கான் | வில்லியம் ஹே † ஜான் கீன் வில்லோபி காட்டன் ஜார்ஜ் போலக் வில்லியம் ஜார்ஜ் கீத் எல்பிங்ஸ்டோன் (கைதி) ஷா சூஜா துராணி † | ||||||
இழப்புகள் | |||||||
~1,500+ சிப்பாய்கள் | 4,700 சிப்பாய்கள் + 12,000 உடனாட்கள்[3] |
முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் (First Anglo-Afghan War) (இப்போரை ஆப்கானித்தானின் பெருந்துயரம் எனக் கூறுவதுமுண்டு) (Disaster in Afghanistan)[4] பெரும் விளையாட்டின் ஒரு பகுதியான இப்போர், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளுக்கும், ஆப்கானித்தான் அமீரகத்தின் பழங்குடி இனப் படைகளுக்கும் 1839 முதல் 1842 முடிய நடைபெற்றது.
இப்போரில் 4,500 பிரித்தானிய மற்றும் இந்திய வீரர்களும், 12,000 போர் துணையாட்களும், ஆப்கானியப் பழங்குடி வீரர்களால் கொல்லப்பட்டனர்.[3]
ஆப்கானித்தான் அமீரகத்தின் வாரிசுரிமைப் போட்டியில் மோதிக் கொண்ட அமீர் தோஸ்து முகமது அலி கானுக்கும், முன்னாள் அமீர் ஷா சூஜா துராணிக்கும் இடையே தலையிட்ட பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் ஆகஸ்டு, 1839ல் காபூலைக் கைப்பற்றினார். இருப்பினும் 1842-ஆம் ஆண்டின் கடுமையான குளிர்காலத்தில், ஆப்கானியப் பழங்குடிப் படைகளால், பிரித்தானியப் படைகள் ஆப்கான் மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.[2] 19-ஆம் நூற்றாண்டில் நடு ஆசியாவின் பகுதிகளுக்காக, பிரித்தானியாவிற்கும் - ருசியாவிற்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த பெரும் விளையாட்டின் தாக்கமாக முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் அமைந்தது.[5]
போர்க் காரணங்கள்
[தொகு]19-ஆம் நூற்றாண்டில் நடு ஆசியாவின் பகுதிகள் குறித்து, பிரித்தானியப் பேரரசுக்கும், உருசியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற இராஜதந்திரப் போட்டியின் விளைவால் நடந்த பெரும் விளையாட்டின் தாக்கமே, முதலாம் ஆங்கிலேய ஆப்கானியப் போருக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.[6]
உருசியச் சக்கரவர்த்தி முதலாம் பவுல், 1800ல் பிரித்தானிய இந்தியா மீது போர் தொடுக்க ஆணையிட்டார். 1801ல் உருசியப் பேரரசர் பவுல் கொல்லப்படவே, இந்தியா மீதான போரை உருசியா கைவிட்டது.
ஆனால் 19ம் நூற்றாண்டில் உருசியர்கள், பிரித்தானிய இந்திய அரசை கடும் எதிரியாகப் பார்த்தனர். மேலும் உருசியர்கள் நடு ஆசியாவின் பகுதிகளை கைப்பற்றத் துவங்கியதால், இந்தியா மீதும் ருசியா படையெடுக்கும் என பிரித்தானியப் பேரரசு,சந்தேகப்பட்டது.[7]
1837ல் ஆப்கானித்தான் அமீர் பதவிக்கு ஏற்பட்ட வாரிசுரிமைப் போட்டியால், ஆப்கானின் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. மேலும் சிந்து, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் சீக்கியப் பேரரசின் கீழ் இருந்ததாலும், உருசியப் படைகள் ஆப்கானித்தான் வழியாக பிரித்தானிய இந்தியாவைத் தாக்கும் எனக் கணித்தனர்.
ஆனால் உருசியப் பேரரசின் படைகள் மெதுவாக நடு ஆசியாவின் பகுதிகளில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். உருசியாவின் இச்செயல், பிரித்தானிய இந்தியாவை பாதிக்கும் என பிரித்தானிய அரசியல் இராஜதந்திர வல்லுனர்கள் கணித்தனர்.
எனவே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், ஆப்கானித்தான் அமீர் தோஸ்து முகமது கானுடன், உருசியாவிற்கு எதிராக கூட்டணி அமைக்க, ஒரு தூதுக்குழுவை காபூலுக்கு அனுப்பினர்.[8][9]
சீக்கியப் பேரரசிடம் தாம் இழந்த பெஷாவர் நகரத்தை மீட்டுத் தருமாறு, ஆப்கான் அமீர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் தூதுக்குழுவினரிடம் கோரினார். இக்கோரிக்கையை கம்பெனி தூதுக்குழுவினர் ஏற்க மறுத்தனர்.
இந்நிலையில் ருசிய நாட்டின் தூதுவர், ஆப்கானிய அமீர் தோஸ்து முகமது கானை காபூலில் சந்தித்து தங்கள் நாட்டின் ஆதரவை தோஸ்து முகமது கானுக்கு தெரிவித்தார்.[5] உடனே பிரித்தானிய இந்திய ஆளுநர், ஆப்கானியர்களிடம் உறவு மேம்படுத்திற்கு கொள்வதற்கு, சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கிடம், ஆப்கானித்தானிடமிருந்து கைப்பற்றிய பெஷாவரை நகரத்தை திரும்ப அவர்களிடமே வழங்கக் கூறினார். இக்கோரிக்கையை ராஜா ரஞ்சித் சிங் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் 1838ல் ருசியா - ஆப்கான் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
ஏற்கனவே தோஸ்து முகமது கான் என்பவர், ஆப்கான் அமீர் சூஜா ஷாவை அமீர் பதவியிலிருந்து நீக்கி தன்னை அமீராக அறிவித்துக் கொண்டார். 1838ல் இந்தியாவில் அடைக்கலமாக தங்கியிருந்த அமீர் சூஜா ஷா, ஆப்கானை படையெடுத்துத் தாக்கி தன்னை ஆப்கான் அமீர் பதவியில் நியமிக்க பிரித்தானிய இந்திய அரசை வலியுறுத்தினார்.[10]
ஆப்கான் போர்
[தொகு]ஆகஸ்டு 1839ல் சூஜா ஷா மீண்டும் ஆப்கானிய அமீராக நியமிக்கப்பட்டார். 1 அக்டோபர் 1838ல் இந்தியத் தலைமை ஆளுநர், ஆப்கான் அமீரகத்தின் மீது தாக்குதல் தொடுத்து, சூஜா ஷாவை ஆப்கான் அமீராக நியமிக்க பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைத்தலைவருக்கு ஆணையிட்டார்.[6]
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் 22 சூலை 1839ல் ஆப்கானித்தானின் காசுனி நகரக் கோட்டையைக் கைப்பற்றினர். 25 நவம்பர் 1838ல் இராஜாரஞ்சித் சிங்கின் சீக்கியப் படைகள் துணையுடன், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் கைபர் கணவாயைக் கடந்து ஆப்கானின் காபூல் நகரத்தைக் கைப்பற்றினர். ஆகஸ்டு 1839ல் சூஜா ஷா மீண்டும் ஆப்கானிய அமீராக நியமிக்கப்பட்டார்.
கொரில்லாப் போர்
[தொகு]ஆப்கான் அமீர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தோஸ்து முகமது கான் தனது ஆப்கானியப் பழங்குடிப் படைகளைக் கொண்டு, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் மீது கொரில்லா தாக்குதல்கள் தொடர்ந்தார்.[11] பிரித்தானியப் படைகளின் கடுமையான தாக்குதலைக் எதிர்கொள்ள இயலாத தோஸ்த் முகமது கான் உஸ்பெகிஸ்தான் நாட்டின் புகாரா நகரத்தில் அடைக்கலம் அடைந்தார்.
ஆப்கானியர்களின் எழுச்சி
[தொகு]8,000 பிரித்தானியப் படைகளின் துணையுடன் அமீர் சூஜார் ஷா ஆப்கானை ஆண்டார். மீதமிருந்த படைகள் இந்தியாவிற்குத் திரும்பியது. ஆப்கானியப் பழங்குடி இனப் படைகள் ஷா சூஜா மற்றும் பிரித்தானியப் படைகளின் மீது கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தினர்.
1840ல் தோஸ்து முகமது கான் பிடிபட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். ஏப்ரல் - அக்டோபர் 1841-ல் ஆப்கான் பழங்குடி தலைவர்களின் படைகள் தோஸ்து முகமது கானின் மகன் வசீர் அக்பர் கானுக்கு ஆதரவாக, பிரித்தானியப் படைகளை கொரில்லாப் போரில் தாக்கினர். முடிவில் அக்டோபர் 1842-இல் பிரித்தானியர்கள் போரில் தோல்வியுற்று, ஆப்கானிலிருந்து வெளியேறினர். ஷா சூஜா துராணி ஆப்கானியப் கொரில்லாப்படைகளால் கொல்லப்பட்டு. தோஸ்து முகமது அலி கானை மீண்டும் ஆப்கானித்தான் அமீராக முடிசூட்டப்பட்டார்.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Encarta-encyclopedie Winkler Prins (1993–2002) s.v. "Afghanistan. §5.3 De tijd van de Britse invloed". Microsoft Corporation/Het Spectrum.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Kohn, George Childs (2013). Dictionary of Wars. Revised Edition. London/New York: Routledge. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135954949.
- ↑ 3.0 3.1 Baxter, Craig "The First Anglo–Afghan War". Afghanistan: A Country Study. Ed. Federal Research Division, Library of Congress. Baton Rouge, LA: Claitor's Pub. Division. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57980-744-5. அணுகப்பட்டது 23 September 2011.
- ↑ Antoinette Burton, “On the First Anglo-Afghan War, 1839–42: Spectacle of Disaster”
- ↑ 5.0 5.1 Keay, John (2010). India: A History (revised ed.). New York, NY: Grove Press. pp. 418–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-4558-1.
- ↑ 6.0 6.1 Perry, James Arrogant Armies, Edison: CastleBooks, 2005 p. 110.
- ↑ Fromkin, David "The Great Game in Asia" pp. 936–51 from Foreign Affairs, Volume 58, Issue 4, Spring 1980 pp. 937–38
- ↑ L. W. Adamec/J. A. Norris, Anglo-Afghan Wars, in Encyclopædia Iranica, online ed., 2010
- ↑ J.A. Norris, Anglo-Afghan Relations பரணிடப்பட்டது 2013-05-17 at the வந்தவழி இயந்திரம், in Encyclopædia Iranica, online ed., 2010
- ↑ Perry, James Arrogant Armies, Edison: CastleBooks, 2005 p. 112.
- ↑ Perry, James Arrogant Armies, Edison: CastleBooks, 2005 p. 120.
மேலும் படிக்க
[தொகு]- Dalrymple, William, (2012) Return of a King: the battle for Afghanistan, London: Bloomsbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408818305
- Findlay, Adam George (2015). Preventing Strategic Defeat: A Reassessment of the First Anglo-Afghan War (PhD thesis). University of Wollongong.
- Fowler, Corinne, (2007) Chasing Tales: Travel Writing, Journalism and the History of British Ideas about Afghanistan, Amsterdam: Rodopi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789042022621
- Greenwood, Joseph, (1844) Narrative of the Late Victorious Campaign in Affghanistan, under General Pollock: With Recollections of Seven Years' service in India. London: H. Colburn
- Hopkirk, Peter, (1992) The Great Game, New York, NY: Kodansha America, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56836-022-3
- Husain,Farrukh (2018) Afghanistan in the age of empires - the great game for South and Central Asia' London: Silk Road Books and photos. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5272-1633-4)
- Kaye, Sir John, (1860) History of the First Afghan War, London.
- Macrory, Patrick, (1966) The Fierce Pawns, J.B. Lippincott Company, Philadelphia
- Macrory, Patrick, (2002) Retreat from Kabul: The Catastrophic British Defeat in Afghanistan, 1842. Guilford, CT: The Lyons Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59921-177-0
- Morris, Mowbray. The First Afghan War. London: Sampson Low, Marston, Searle, and Rivington (1878).
- Perry, James M., (1996), Arrogant Armies: Great Military Disasters and the Generals Behind Them. New York:Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-11976-0
வெளி இணைப்புகள்
[தொகு]- First Afghan War (Battle of Ghuznee)
- First Afghan War (Battle of Kabul 1842)
- The Siege of Jellalabad
- First Afghan War (Battle of Kabul and retreat to Gandamak)
- The Afghan Wars 1839–42 and 1878–80 by Archibald Forbes, from Project Gutenberg
- Pictures of the First Anglo–Afghan War பரணிடப்பட்டது 2014-08-11 at the வந்தவழி இயந்திரம்
- The War of Kabul and Kandahar, circa 1850