யூரோப்பியம்(III) கார்பனேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
5895-48-7 நீரிலி 13265-19-5 முந்நீரேற்று 86546-99-8 நீரேற்று | |
ChemSpider | 144969 |
EC number | 227-582-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165371 |
| |
பண்புகள் | |
Eu2(CO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 483.961 |
தோற்றம் | திண்மம் |
உருகுநிலை | சிதைவடையும் |
கரையாது (1.94×10-6மோல்/லிட்டர்,30 பாகை செல்சியசு)[1] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம் கார்பனேட்டு கடோலினியம் கார்பனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(III) கார்பனேட்டு (Europium(III) carbonate) என்பது Eu2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]அம்மோனியம் கார்பனேட்டுடன் யூரோபியம்(III) குளோரைடைச் சேர்த்து இதன் நீரிய கரைசலை சூடாக்குவதன் மூலம் யூரோபியம்(III) கார்பனேட்டை தயாரிக்கலாம்.[2] ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் கார்பனேட்டு கரைசலின் வினையிலிருந்து பெறப்பட்ட ஒரு நிறைவுற்ற கார்பன் டை ஆக்சைடு அம்மோனியம் கார்பனேட்டு கரைசலும் யூரோபியம் உப்புக் கரைசலுடன் வினைபுரிந்து யூரோபியம் கார்பனேட்டைக் கொடுக்கும்.[3] யூரோபியம்(III) அசிடேட்டின் வெப்ப சிதைவு வினையும்,[4] நீரில் கரைக்கப்பட்ட யூரோபியம்(III) ஆக்சைடுடன் மீவெப்ப கார்பன் டை ஆக்சைடின் வினை[5] ஆகியவையும் இதர தயாரிப்பு முறைகளாகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]யூரோப்பியம்(III) கார்பனேட்டு அமிலத்தில் கரைந்து கார்பனீராக்சைடைக் கொடுக்கிறது:[1]
- Eu2(CO3)3 + 6 H+ → 2 Eu3+ + 3 H2O + 3 CO2↑
உயர் வெப்பநிலையில் யூரோப்பியம்(III) கார்பனேட்டு சிதைவுக்கு உள்ளாகி யூரோப்பியம்(III) ஆக்சைடாக மாறுகிறது:
- Eu2(CO3)3 → Eu2O3 + 3 CO2↑
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 黄春晖 等编.科学出版社. P174. Carbonates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030574-9
- ↑ R.G. Charles (Jul 1965). "Rare-earth carbonates prepared by homogeneous precipitation" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 27 (7): 1489–1493. doi:10.1016/0022-1902(65)80008-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190265800082. பார்த்த நாள்: 2020-04-23.
- ↑ Perkovskaya, Yu. B.; Anoshina, N. P.; Sukhanova, I. M. Rare earth carbonates. Metody Polucheniya Khimicheskikh Reaktivov i Preparatov, 1967. 16: 104-109. ISSN: 0539-5143.
- ↑ E.L. Head (Feb 1966). "Preparation of the carbonates of the rare earths from some of their organic acid salts" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 2 (2): 33–37. doi:10.1016/0020-1650(66)80087-9. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0020165066800879. பார்த்த நாள்: 2020-04-23.
- ↑ Yanagihara, N.; Vemulapalli, K.; Fernando, Q. Synthesis of lanthanide carbonates using supercritical carbon dioxide. Kidorui, 1991. 18: 136-137. ISSN: 0910-2205.