ரோல்ட் ஹாஃப்மேன்
ரோல்ட் ஹாஃப்மேன் (Roald Hoffmann பிறப்பு ரோல்ட் சஃப்ரான் ; ஜூலை 18, 1937) [1] போலந்து-அமெரிக்க தத்துவார்த்த வேதியியலாளர் ஆவார். இவர் 1981 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவ சில நாடகங்களையும் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார். அவர் நியூயார்க்கின் இத்தாக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸின் பேராசிரியராக இவர் பணிபுரிந்தார்.. [2] [3] [4] [5] 1981 ஆம் ஆண்டில், இவர் பெற்ற நோபல் பரிசினை அவர் கெனிச்சி ஃபுகுயுடன் இணைந்து பெற்றுக் கொண்டார்
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஹோலோகாஸ்டிலிருந்து தப்பித்தல்
[தொகு]ஹாஃப்மேன் ஒரு போலந்து-யூத குடும்பத்தில் போலந்து குடியரசின் (இப்போது இந்த் ஐடம் சோலோச்சிவ், உக்ரைனில் உள்ளது. ) ஜோக்சோவில் பிறந்தார்.மேலும் நோர்வே ஆய்வாளர் ரோல்ட் அமுண்சனின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரினை இவரது பெற்றோர்கள் இட்டனர். அவரது தாய் கிளாரா (ரோசன்), ஒரு ஆசிரியர் ஆவார், மற்றும் குடிசார் பொறியாளரன இவரது தந்தை ஹில்லெல் சஃப்ரான் ஆவர். [6] ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்த பின்னர், அவரது குடும்பம் ஒரு தொழிலாளர் முகாமில் தங்க வைக்கப்பட்டார். நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில், இவரின் குடும்பத்தினர் தப்பிக்க காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தனர்.[7]
ஒரு பாட்டி மற்றும் ஒரு சிலர் தப்பிப்பிழைத்த போதிலும், குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் பெரும் இன அழிப்பில் இறந்தனர். [8] அவர்கள் 1949 இல் எர்னி பைல் என்ற கப்பலில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
ஹாஃப்மேன் 1960 இல் ஈவா பார்ஜெசன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஹில்லெல் ஜான் மற்றும் இங்க்ரிட் ஹெலினா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். [9]2009 ஆம் ஆண்டில் பெரும் இன அழிப்பினால் இறந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட்டது.
கல்வி மற்றும் கல்வி நற்சான்றிதழ்கள்
[தொகு]ஹாஃப்மேன் 1955 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் ஸ்டூய்செவன்ட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். [10] அங்கு அவர் வெஸ்டிங்ஹவுஸ் அறிவியல் உதவித்தொகையைப் பெற்றார்.கொலம்பியா பல்கலைக்கழகத்தில்1958 ஆம் ஆண்டில் இவர் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1960 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மார்ட்டின் கடர்மனின் மேற்பார்வையின் கீழ்[11][12][13][14] பணிபுரிந்தபோது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
கலை ஆர்வங்கள்
[தொகு]பொழுதுபோக்கு அறிவியல்
[தொகு]2001 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் கொர்னேலியா ஸ்ட்ரீட் கபேயில் [15] மாதாந்திர தொடராக வெளிவந்த என்டர்டெயினிங் சயின்ஸின் தொகுப்பாளராக இருந்தார். இது கலைக்கும் அறிவியலுக்கும் இடையிலான நிலைமைகளைப் பற்றி ஆராய்வதினை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர் ஆகும்..
புனைவு அல்லதாவை
[தொகு]கலைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ரோல்ட் ஹாப்மன் ஆன் தெ பிலாசபி , ஆர்ட் , அண்ட் சைன்ஸ் ஓஃப் கெமிஸ்ட்ரி அண்ட் பியாண்ட் தெ ஃபைனட்:தெ சப்லைம் இன் ஆர்ட் அண்ட் சைன்ஸ் ஆகிய நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். [16]
கவிதைகள்
[தொகு]ஹாஃப்மேன் கவிதை எழுத்தாளரும் கூட. [17] அவரது தொகுப்புகளில் தி மெட்டாமிக்ட் ஸ்டேட் (1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8130-0869-7 ), [18] கேப்ஸ் அண்ட் வெர்ஜஸ் (1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8130-0943-X ), [19] மற்றும் கெமிஸ்ட்ரி இமேஜின்ட் ஆகிய கவிதைகளை இவர் எழுதியுள்ளார். [20]
கவுரவங்கள் மற்றும் விருதுகள்
[தொகு]வேதியியலுக்கான நோபல் பரிசு
[தொகு]1981 ஆம் ஆண்டில், ஹாஃப்மேன் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார், அதை அவர் கெனிச்சி ஃபுகுயுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். [21] [22]பணிபுரிந்தபோது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Hoffmann's birth name was Roald Safran. Hoffmann is the surname adopted by his stepfather in the years after World War II
- ↑ Q&A: Chemical connector Roald Hoffmann talks about language, ethics and the sublime.
- ↑ "Roald Hoffmann - Biographical". nobelprize.org. Archived from the original on December 4, 2008. பார்க்கப்பட்ட நாள் May 9, 2018.
- ↑ "Photograph of Roald Hoffman". kewgardensmovie.com. Archived from the original on March 3, 2016. பார்க்கப்பட்ட நாள் May 9, 2018.
- ↑ "Roald Hoffmann". www.nndb.com. Archived from the original on January 17, 2017. பார்க்கப்பட்ட நாள் May 9, 2018.
- ↑ "Roald Hoffmann". HowStuffWorks. July 2010. Archived from the original on October 5, 2013. பார்க்கப்பட்ட நாள் October 4, 2013.
- ↑ The rescue of Roald Hoffmann பரணிடப்பட்டது அக்டோபர் 13, 2016 at the வந்தவழி இயந்திரம் at Yad Vashem website
- ↑ The Tense Middle பரணிடப்பட்டது பெப்பிரவரி 23, 2018 at the வந்தவழி இயந்திரம் by Roald Hoffmann, story on NPR. Retrieved September 29, 2006.
- ↑ "Roald Hoffmann - Biographical". Nobel Prize. Archived from the original on March 28, 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
- ↑ "Roald Hoffmann's land between chemistry, poetry and philosophy". Archived from the original on January 19, 2008. பார்க்கப்பட்ட நாள் October 31, 2007.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1962). "Theory of Polyhedral Molecules. I. Physical Factorizations of the Secular Equation". The Journal of Chemical Physics 36 (8): 2179. doi:10.1063/1.1732849. Bibcode: 1962JChPh..36.2179H.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1962). "Boron Hydrides: LCAO—MO and Resonance Studies". The Journal of Chemical Physics 37 (12): 2872. doi:10.1063/1.1733113. Bibcode: 1962JChPh..37.2872H.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1962). "Sequential Substitution Reactions on B10H10−2 and B12H12−2". The Journal of Chemical Physics 37 (3): 520. doi:10.1063/1.1701367. Bibcode: 1962JChPh..37..520H.
- ↑ Hoffmann, R.; Lipscomb, W. N. (1963). "Intramolecular Isomerization and Transformations in Carboranes and Substituted Polyhedral Molecules". Inorganic Chemistry 2: 231–232. doi:10.1021/ic50005a066 இம் மூலத்தில் இருந்து May 11, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150511064356/http://roaldhoffmann.com/sites/all/files/10.pdf.
- ↑ "A Brief History". The Cornelia Street Café. Archived from the original on July 8, 2013. பார்க்கப்பட்ட நாள் March 22, 2013.
- ↑ "Between Art and Science: A Conversation with Roald Hoffmann". Cosmopolitan Review இம் மூலத்தில் இருந்து March 20, 2015 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20150320140339/http://cosmopolitanreview.com/roald-hoffman/. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ Amato, Ivan (August 21, 2007). "Roald Hoffmann: Chemist And Poet". Chemical & Engineering News இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402191530/https://cenboston.wordpress.com/2007/08/21/roald-hoffman-chemist-and-poet/. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ "25 years ago: Roald Hoffmann publishes his poetry". Chemistry World. 28 February 2013 இம் மூலத்தில் இருந்து April 27, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150427012452/http://www.rsc.org/chemistryworld/2013/02/25-years-ago-roald-hoffmann-publishes-poetry. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ Browne, Malcolm W. (July 6, 1993). "SCIENTIST AT WORK: Roald Hoffmann; Seeking Beauty In Atoms". New York Times இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402121948/http://www.nytimes.com/1993/07/06/science/scientist-at-work-roald-hoffmann-seeking-beauty-in-atoms.html. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ King, Julia (December 11, 1989). "Nobelist Roald Hoffmann: Chemist, Poet, Above All A Teacher". The Scientist இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402190206/http://www.the-scientist.com/?articles.view%2FarticleNo%2F10792%2Ftitle%2FNobelist-Roald-Hoffmann--Chemist--Poet--Above-All-A-Teacher%2F. பார்த்த நாள்: 20 March 2015.
- ↑ The Nobel Prize in Chemistry 1981 பரணிடப்பட்டது மார்ச்சு 22, 2018 at the வந்தவழி இயந்திரம். Nobelprize.org. Retrieved on April 2, 2014.
- ↑ "Roald Hoffmann". Archived from the original on April 22, 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-11-20.. Cornell Chemistry Faculty Research