லிமாசோல்
லிமாசோல் Λεμεσός / Limasol | |
---|---|
நாடு | சைப்பிரசு |
மாவட்டம் | லிமாசோல் மாவட்டம் |
அரசு | |
• மேயர் | ஆந்திரியாசு கிறிஸ்தூ (உ.ம.மு.க) |
பரப்பளவு | |
• நகரம் | 34.87 km2 (13.46 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,01,000[3] |
• நகர்ப்புறம் | 1,60,000−1,76,700[1][2] |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே) |
அஞ்சல் குறியீடு | 3010–3150 |
இணையதளம் | www.limassolmunicipal.com.cy |
லிமாசோல் (Limassol, கிரேக்க மொழி: Λεμεσός; துருக்கியம்: Limasol அல்லது Leymosun) is a city on the southern coast of சைப்பிரசின் தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இது சைப்பிரசின் மிகப்பெரும் நகரங்களில் இரண்டாவதாக உள்ளது. நகரிய மக்கள்தொகை 160,000-176,700 ஆகும்.[1][2] 2011 கணக்கெடுப்பின்படி 101,000 மக்கள் வாழும் லிமாசோல் நகராட்சி நாட்டின் மிகப்பெரும் நகராட்சியாகும். [3]
சைப்பிரசின் மிகப்பெரும் துறைமுகமான லிமாசோல் துறைமுகம் நடுநிலக் கடல் பகுதியில் மிகுந்த போக்குவரத்துள்ள துறைமுகமாகவும் விளங்குகின்றது. தவிரவும் சுற்றுலா, வணிகம், சேவை மையங்கள் முதன்மையாக உள்ளன. ஆழமான பண்பாட்டு வழக்கங்களுக்காகவும் லிமாசோல் அறியப்படுகின்றது. இங்கு சைப்பிரசு தொழினுட்பப் பல்கலைகழகம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்குள்ள பல அருங்காட்சியகங்களும் தொல்லியல் களங்களும் விருந்தாக உள்ளன. பழைய நகரத்தின் அண்மையில் கடற்கரை உள்ளது. அங்கிருந்து 500 மீட்டர்கள் (1,600 அடிகள்) தொலைவில் பண்டைக்கால கோட்டை உள்ளது.
இரண்டு பண்டைய நகரங்கள், அமாத்துசு,கூரியன் இடையே கட்டப்பட்டுள்ளது; பைசாந்திய ஆட்சியில் இது நியாபோலிசு (புது நகரம்) என்று அழைக்கப்பட்டது. லிமாசோல் கோட்டை மற்றும் பழைய நகரத்தைச் சுற்றிலும் லிமாசோலின் வரலாற்று மையம் உள்ளது. இன்று நகரம் நடுநிலக் கடலோரத்தில் பரவியுள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் பிரித்தானிய கடல்கடந்த ஆட்புலமான அக்ரோத்திரி அமைந்துள்ளது.
மெர்சரின் வாழ்நிலைத் தர கருத்துக் கணிப்பில் உலகளவில் பிராத்திஸ்லாவாவிற்கும் தாலினுக்கும் இடையே 87வது இடத்தில் உள்ளது.[4]
ஒளிப்படத் தொகுப்பு
[தொகு]
- லிமாசோல் "மோலோசில்" உள்ள சிற்பம்
- லிமாசோல் உல்லாசவீதியில் மீனவர்கள்
- லிமாசோல் பழைய நகரத்தில் நண்பகல்
- பல்கலைக்கழக சதுக்கம்
- சரிபோலு சதுக்கம்
- சரிபோலு சதுக்கத்திலுள்ள நகராட்சி அங்காடி மையம்
- பழைய நகரத்தில் பாதசாரி மண்டலம்
- பழைய நகரத்தில் சிறு சதுக்கம்
- லிமாசோல் மையத்தில் பாதசாரி மண்டலங்கள்
- லிமாசோலின் பண்டையக் கோட்டையைச் சுற்றி புதிய சதுக்கம்
- லிமாசோல் கடற்கரை
- பழைய நகர கலை
- லிமாசோல் பழைய நகர கட்டிடங்கள்
- லிமாசோல் பழைய நகர கட்டிடங்கள்
- கோட்டை சதுக்கத்தில் உணவகங்களும் விரைவுணவகங்களும்
- லிமாசோலின் நகராட்சி அங்காடி வளாகம்
- கோட்டை சதுக்கம்
- லிமாசோல் கோட்டை சதுக்கம்
- கோட்டை சதுக்கத்தில் ஒளிப்பட கண்காட்சி
- கோட்டை சதுக்கத்தில் உணவகங்களும் விரைவுணவகங்களும்
- பண்டைய கோட்டை
- புதிய பனேபிசுத்துமோ சதுக்கத்தின் அருகில்
- கோட்டை சதுக்கத்தில் உணவகங்கள்
- கடற்கரைப் பூங்காவில் (மோலோசு)
- ஈனெரியோசில் சிறு சதுக்கம்
- ஈனெரியோசில் சிறு சதுக்கம்
- ஈனெரியோசு துறைக்கிட்டிலுருந்து காட்சி
- ஈனெரியோசு துறைக்கிட்டிலுருந்து காட்சி
- அக்தி ஒலிம்பியோன்
- ஈனெரியோசில் சிறு சதுக்கம்
- லிமாசோல் பழைய நகரம்
- லிமாசோல் பழைய நகரம் வீதி
- அக்தி ஒலிம்பியோன்
- அக்தி ஒலிம்பியோன்
- சரிபோலு
- அகோரா சதுக்கம்
- லிமாசோல் கடற்கரை
- சரிபோலு
- அகோரா சதுக்கம்
- கூரியன் கடற்கரை
- ஆளுநரின் கடற்கரை
- லிமாசோல் கடலோரப் பூங்கா
- லிமாசோல் கடலோரப் பூங்கா
- லிமாசோல் கடலோரப் பூங்கா
- லிமாசோல் கடலோரப் பூங்கா
- லிமாசோல் கடலோரப் பூங்கா
- லிமாசோல் மைமால்
- லிமாசோல் நகர மன்றம்
- பழைய நகரம் கட்டிடம்
- அஜியா நாப்பா பேராலயம், லிமாசோல்
- லிமாசோலிலுள்ள தேவாலயம்
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 World Urban Areas - Demographia, 2013
- ↑ 2.0 2.1 "Intercultural city: Limassol, Cyprus". Council of Europe.
- ↑ 3.0 3.1 Population Census - Key Figures பரணிடப்பட்டது 2018-06-12 at the வந்தவழி இயந்திரம் - Statistical Service of Cyprus
- ↑ "2012 Quality Of Living Worldwide City Rankings Survey" (PDF), International HR Adviser, no. 52 (Winter 2012), pp. 33–36, archived from the original (PDF) on 2013-12-03, பார்க்கப்பட்ட நாள் 2016-03-30
{{citation}}
: C1 control character in|title=
at position 48 (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- லிமாசோல் வலைமனை பரணிடப்பட்டது 2015-11-09 at the வந்தவழி இயந்திரம்
- லிமாசோல் நகராட்சி